லாபகரமான உணவகம் தொழில்கள் | Food Business Ideas in Tamil
எல்லோருக்குமே சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதுவும் நமக்கு தெரிந்த, பிடித்த விஷயத்தை தொழிலாக தொடங்கினால் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் அல்லவா. அந்த வகையில் எல்லோருக்கும் தெரிந்த மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இருக்கும் புட் பிசினஸ் எப்படி தொடங்கலாம் என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
Tea & Snacks Supply:
- எல்லா நிறுவனங்களிலும் கண்டிப்பாக பிரேக் டைம் இருக்கும், நீங்கள் அப்போது நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு காலை மற்றும் மாலையில் தேவைப்படும் டீ மற்றும் தின்பண்டங்களை விற்பனை செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும். இதற்கு நீங்கள் அந்த நிறுவனத்திடம் Contract எடுத்து லாபத்தை பெறலாம்.
- இந்த தொழிலுக்கு உங்களுக்கு முதலீடு 1 லட்சம் வரை தேவைப்படலாம். இதை நீங்கள் வீடு அல்லது ஒரு தனி இடம் அமைத்து செய்யலாம். லாபம் வருடத்திற்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை கிடைக்கும்.
Pocket Foods:
- இப்பொழுது பெரும்பாலான உணவுகள் பாக்கெட்டில் பேக்கிங் செய்யப்பட்டு தான் விற்பனை செய்யப்படுகின்றன. ஏலக்காய், முந்திரி, சோயா, டீ தூள், காபி தூள், பருப்பு போன்ற பொருட்களை நீங்கள் மொத்தமாக வாங்கி பாக்கெட்டில் பேக்கிங் செய்து அதை கடைகளில் கொடுத்து அல்லது Distributor-ஐ அணுகி விற்பனை செய்யலாம்.
- முதலீடு 1 லட்சம் தேவைப்படலாம். இந்த தொழிலுக்கு தனி இடம் அவசியமில்லை, வீட்டிலேயே கூட செய்யலாம். லாபம் 3 முதல் 4 லட்சம் வரை கிடைக்கும்.
Scooter Barbecue:
- இப்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி கொண்டிருப்பது இந்த Scooter Barbecue தொழில் தான். இந்த தொழிலை மக்கள் அதிகம் உள்ள இடத்தில் தொடங்கினால் நல்ல லாபத்தை நிச்சயம் பெற முடியும்.
- இதற்கு உங்களுக்கு முதலீடு 1 லட்சம் வரை தேவைப்படலாம். தனி இடம் அமைக்க வேண்டிய அவசியமில்லை. 5 முதல் 7 லட்சம் வரை நீங்கள் இந்த தொழிலில் நல்ல லாபத்தை பெற முடியும்.
Snacks Business:
- எப்பொழுதும் லாபம் கிடைக்கும் ஒரு அருமையான தொழில் என்றால் அது தின்பண்டங்கள் தான். ஏனெனில் இது குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ள ஒரு பிசினஸ்.
- முறுக்கு, சிப்ஸ், வத்தல், மிட்டாய் போன்றவற்றை வீட்டிலேயே தயார் செய்து அதனை கடைகளுக்கு அல்லது சொந்தமாகவோ விற்பனை செய்து வருமானத்தை ஈட்ட முடியும். முதலீடு 1 லட்சம், லாபம் 4 லட்சம் வரை கிடைக்கும்.
sauce business:
- இப்பொழுது உணவகங்களில் உப்பிற்கு அடுத்து அதிகம் பயன்படுத்தும் பொருள் என்றால் அது சாஸ் தான். நீங்கள் தக்காளி சாஸ், chilli garlic sauce, சோயா சாஸ் போன்றவைகளை வீட்டிலேயே தயாரித்து கடைகளில் அல்லது ஆன்லைனில் மற்றும் தேவைப்படும் இடங்களில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்யலாம்.
- இதை நீங்கள் வீட்டில் அல்லது தனி இடத்தில் செய்யலாம். லாபம் வருடத்திற்கு 5 முதல் 7 லட்சம் வரை கிடைக்கும். முதலீடு 2 முதல் 5 லட்சம் வரை தேவைப்படும்.
Chocolate:
- உங்களுக்கு மிட்டாய்கள் தயாரிப்பதில் ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக இந்த தொழில் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். குறைந்த செலவில் இந்த தொழிலை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம்.
- இந்த தொழிலை நீங்கள் கடைகளுக்கு விற்பனை செய்து அல்லது ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யலாம். இதற்கான முதலீடு 2 முதல் 5 லட்சம், லாபம் 8 முதல் 15 லட்சம் வரை கிடைக்கும்.
Food Truck Business:
- இப்பொழுது மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி கொண்டிருப்பது இந்த தொழில் தான். குறைந்த முதலீட்டில் இந்த தொழிலை எளிமையாக தொடங்கலாம். இதற்கு உங்களுக்கு ஒரு வாகனம் மற்றும் சமைப்பதற்கு தேவையான பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்.
எண்ணெய் கடை:
- இந்த தொழிலில் நீங்கள் லாபத்தை பெற உங்களுக்கு மார்க்கெட்டிங் திறமை, சேல்ஸ் திறமை இருக்க வேண்டும். உங்களுடைய திறமையை பொறுத்தே இதில் நீங்கள் சம்பாரிக்க முடியும். இதற்கு முதலீடு 2 முதல் 5 லட்சம் வரை தேவைப்படும். லாபம் 6 முதல் 8 லட்சம் வரை கிடைக்கும்.
Catering Service:
- உங்களிடம் சிறந்த திட்டமும், மற்றவர்களிடம் பேசும் திறனும் இருந்தால் நல்ல லாபத்தை பெறலாம். அலுவலகத்திற்கு, திருமணத்திற்கு என கான்ட்ராக்ட் எடுத்து இந்த தொழிலை செய்யலாம்.
உணவகம் பெயர்கள் |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |