தினசரி வருமானம் தரும் Franchise தொழில்..!

Franchise Business Ideas List in Tamil

பிரான்சிஸ் பிஸினஸ் ஐடியா| Franchise Business Ideas & List in Tamil

Franchise தொழில் வாய்ப்புகள்: இப்போதெல்லாம் அனைவருடைய மனதிலும் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்லாமல் சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய இளைஞர்கள் பலரிடம் இருக்கிறது. சில நபர்கள் தொழிலில் நன்கு கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்களிடம் சொந்தமாக தொழில் செய்ய போதுமான முதலீடு இருக்காது. சிலரிடம் தொழில் செய்ய முதலீடு இருந்தாலும் அவர்களுக்கு தொழிலில் கைதேர்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள். Franchise பிசினஸ் பெரும்பாலும் லாபத்தை மட்டுமே தரக்கூடிய தொழில் வகையை சார்ந்தது. நாம் எந்த மாதிரியான தொழிலை தொடங்க போகிறோமோ அதை பொறுத்துத்தான் லாபத்தினை பார்க்க முடியும். வெளியில் வேலைக்கு செல்லாமல் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை? ஆனால் தொழிலில் எந்த ஒரு முன் அனுபவம் இல்லை எங்கு தொழில் தொடங்கினால் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருப்பவர்களுக்கு இந்த வகை Franchise பிசினஸ் சிறந்த பிசினஸ் மாடலாக உள்ளது. இந்த பதிவில் டாப் 10 Franchise பிசினஸ் (franchise business in tamil) பட்டியலை தெரிந்துக்கொள்ளுவோம். அதில் தங்களுக்கு ஏற்ற தொழிலை தேர்வு செய்து தங்களிடம் இருக்கும் முதலீட்டை வைத்து, ஃப்ரான்சைஸ் (Franchise) பிசினஸ் செய்ய ஆரம்பிக்கலாம்.

newபுதிய தொழில் தொடங்க நல்ல நாள்

பிரான்சிஸ் பிஸினஸ் – Apollo Pharmacy: 

Apollo Pharmacyதினசரி வருமானம் தரும் தொழில்: மக்கள் எப்போதும் மருந்து மாத்திரைகள் (Medicines), காஸ்மெடிக்ஸ் போன்ற பொருட்களை வாங்குவதற்கு மக்கள் எப்போதும் இருப்பார்கள். அதனால் இந்த தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் காணலாம்.

 • குறைந்தபட்ச முதலீடு: 5 லட்சம் 
 • தேவைப்படும் இடம்: 10-15 செ.மீ அளவு 
 • வேலையாட்கள் – குறைந்தபட்சம் 2 நபர் 
 • கிளையின் வலைதளம்: www.apollopharmacy.in 

பிரான்சிஸ் பிஸினஸ் ஐடியா – Mother Dairy:

Mother Dairyதினசரி வருமானம் தரும் தொழில்: நாம் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் தேவைப்படுவது பால் சம்பந்தமான பொருள்கள். இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. Mother Dairy பிரான்சிஸ் தொழிலை நீங்களும் உங்கள் ஊரில் தொடங்கினால் நஷ்டம் இல்லாமல் லாபம் அடையலாம்.

 • குறைந்தபட்ச முதலீடு: 5 லட்சம் 
 • கிளையின் வலைதளம்: www.motherdairy.com 
டீலர்ஷிப் எடுப்பது எப்படி 

Franchise தொழில் – Tea House:

Tea Houseவீட்டில் அதிகமாக டீ, காபி குடிப்பவர்கள் இருப்பார்கள். பெரும்பாலும் வெளியில் வேலைக்கு செல்பவர்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கு சற்று அருகில் இருக்கும் தேநீர் கடைகளில் டீ, காபி அருந்துபவர்கள் அதிகமாக இருப்பார்கள். சாதாரணமாக டீ கடை என்றாலே அதில் லாபம்தான். நீங்களும் Franchise பிசினஸ் செய்ய விரும்புகிறீர்களா? உடனே இந்த Tea House Franchise தொழிலை தூங்கலாம்.

 • தேவைப்படும் இடம்: 100-200 சதுர அடி 
 • குறைந்தபட்ச முதலீடு: 02 லட்சம் 
 • கிளையின் வலைதளம்: teahousegroup.com 

Franchise Business Ideas – Realme:

Realmeஇந்த தொழிலானது Realme என்ற கம்பெனியின் மொபைல்ஸ் மற்றும் அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்யக்கூடிய தொழில். இன்றைய உலகில் மொபைல் பயன்படுத்தாதவர்களே இல்லை. சிலருக்கு மொபைலில் உதிரி பாகம் பழுது அடையும் பிரச்சனை, மொபைல் பழுதடைதல் போன்ற பிரச்சனைகளுக்கு மொபைல் கடைக்கு செல்வார்கள். உங்கள் ஊரில் இந்த பிசினஸ்ஸை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்.

 • குறைந்தபட்ச முதலீடு: 02 லட்சம் 
 • கிளையின் வலைதளம்: www.realmein.in/ index.html 

வருமானம் தரும் Franchise தொழில் – Amul Kiosk:

Amul Kioskகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் இந்த ஐஸ் கிரீம். யோசிக்காமல் இந்த தொழிலை ஆரம்பித்தால் எதிர்பார்த்ததை விட அதிகமாக லாபம் கிடைக்கும்.

 • தேவைப்படும் இடம்: 100-150 சதுர அடி 
 • குறைந்தபட்ச முதலீடு: 02 லட்சம் 
 • கிளையின் வலைதளம்: amul.com 

Franchise Business Ideas – Amazon Logistics:

Amazon LogisticsAmazon Logistics என்பது அமேசானுடைய டெலிவரி Partner ஆக வேலை செய்யக்கூடிய பிசினஸ்.

 • தேவைப்படும் இடம்: 150-250 சதுர அடி 
 • உங்களிடம் Bike / Truck இருக்க வேண்டும். 
 • குறைந்தபட்ச முதலீடு: 02 லட்சம் 
 • கிளையின் வலைதளம்: logistics.amazon.in 

வருமானம் தரும் Franchise தொழில் – அருண் ஐஸ் கிரீம் என்டர்ப்ரைசஸ்:

அருண் ஐஸ் கிரீம்அனைவருக்கும் ஐஸ் கிரீம் என்றாலே மிகவும் பிடித்த ஒன்று. வெளியில் மொத்த விலைக்கு ஐஸ் கிரீம்களை வாங்கி விற்கக்கூடிய பிசினஸ். இந்த பிசினஸ்ஸை தொடங்கினால் நல்ல லாபம் பார்க்கலாம்.

 • தேவைப்படும் இடம்: 2000-5000 சதுர அடி 
 • குறைந்தபட்ச முதலீடு: 02 லட்சம் 
 • கிளையின் வலைதளம்: www.hap.in 

 Franchise தொழில் வாய்ப்புகள் – Ekart Logistics:

Ekart LogisticsFlipkart-டைய டெலிவரி பார்ட்னராக சேரக்கூடிய பிசினஸ்.

 • தேவைப்படும் இடம்: 400-700 சதுர அடி 
 • குறைந்தபட்ச முதலீடு: 50,000 – 1 லட்சம் 
 • உங்களிடம் இரு சக்கர வாகனம்/ Truck இருக்க வேண்டும். 
 • கிளையின் வலைதளம்: www.flipkart.com 

பிரான்சிஸ் பிஸினஸ் ஐடியா – DTDC Courier Franchise:

DTDC CourierDTDC எனும் கொரியர் ஆபிசில் வேலை செய்யக்கூடிய பிசினஸ்.

 • தேவைப்படும் இடம்: Road Facing Place 
 • வேலையாட்கள்: அதிகபட்சம் 04 | குறைந்தபட்சம் 02
 • குறைந்தபட்ச முதலீடு: 50,000 – 1 லட்சம் 
 • கிளையின் வலைதளம்: www.dtdc.in  

Franchise Business Ideas – ABC TAXI:

ABC TAXIABC கம்பெனியின் Taxi-யை உங்களுடைய இடத்தில் நீங்களே வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்கள் அழைக்கும் போது அந்த Taxi-யை அனுப்பி வைக்க வேண்டும்.

 • தேவைப்படும் இடம்: 100-300 சதுர அடி 
 • குறைந்தபட்ச முதலீடு: 50,000 
 • கிளையின் வலைதளம்: www.abcindia.com
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil