குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய Top 5 Franchise தொழில்கள்..!

Advertisement

அதிக லாபம் தரக்கூடிய Top 5 Franchise தொழில்கள்..!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருப்பவர்களா நீங்கள் அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகதான். பொதுவாக நம்மில் பலருக்கும் சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கும். ஆனால் அதை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்ற வழிதான் தெரியாது. சுய தொழில் செய்ய என்று சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்காக தான் இந்த பதிவில் அதிக லாபம் தரக்கூடிய Top 5 Franchise தொழில்களை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

Franchise தொழில் என்றால் என்ன?

பிரான்சைஸ் என்பது ஒரு குறிப்பிட்ட கடையின் உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட பிராண்டின் வர்த்தக முத்திரை மற்றும் வணிக உத்திகளைப் பயன்படுத்தவும், பிராண்டின் பெயரில் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்கவும் அனுமதிக்கும் வணிக வகையாகும்.

 டீலர்ஷிப் எடுப்பது எப்படி 

Top 5 Franchise தொழில்கள் :

1.KFC Franchise (உரிமம்) தொழில் :

KFC என்பது ஒரு அமெரிக்க துரித உணவு நிறுவனமாகும், இது வறுத்த கோழியில் புகழ் பெற்றது. இது உலகின் 2வது பெரிய உணவக நிறுவனமாகும். KFC ஆனது அதன் ரகசிய 11 மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி அதன் வாடிக்கையாளர்களின் இதயத்தில் ஒரு இடத்தை உருவாக்கிவைத்துள்ளது.

அதனால் இந்த நிறுவனத்துடன் நீங்கள் Franchise(உரிமம்) பெற்று நீங்கள் தொழில் செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

  • தேவைப்படும் முதலீடு : ₹ 20 லட்சம்
  • இடம்: 1000 சதுர அடி -1500 சதுர அடி

2. Fries and Burger Franchise (உரிமம்) தொழில் :

இது ஒரு உணவு கலாச்சார நிறுவனம் ஆகும். இவர்களின் வாடிக்கையாளர் அனுபவத்திற்கே முதன்மையான முன்னுரிமை கொடுக்கின்றன. அதனால் இந்த நிறுவனத்துடன் நீங்கள் Franchise(உரிமம்) பெற்று தொழில் செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

  • தேவைப்படும் முதலீடு : ₹ 2-5 லட்சம்
  • இடம்: 1000 சதுர அடி -2000 சதுர அடி

3. Recruiting Hub Franchise(உரிமம்) தொழில் :

Recruiting Hub என்பது ஆன்லைன் ஆட்சேர்ப்பு நிருவமாகும். இங்கு வேலை வழங்குபவர்களும் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இணைக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த நிறுவனத்துடன் நீங்கள் Franchise(உரிமம்) பெற்று தொழில் செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

  • தேவைப்படும் முதலீடு : ₹ 2-4 லட்சம்
  • இடம்: 250 சதுர அடிக்கும் குறைவானது.

4. Inksta Franchise(உரிமம்) தொழில் :

Inksta சில்லறை உள்ளூர் அச்சு தீர்வுகள் துறையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனமானது வெவ்வேறு வகையான மைகள்(inks) மற்றும் தோட்டாக்களை(cartridges)வழங்குகிறது.

இந்நிறுவனம் உள்ளூர் அலுவலகங்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களுக்கான அச்சுப்பொறி(printer) விற்பனை மற்றும் சேவைகள் வழங்குகிறது. அதனால் இந்த நிறுவனத்துடன் நீங்கள் Franchise(உரிமம்) பெற்று தொழில் செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

  • தேவைப்படும் முதலீடு : ₹ 2-5 லட்சம்
  • இடம்: 250 சதுர அடி – 500 சதுர அடி

தினசரி வருமானம் தரும் Franchise தொழில்

5. Auto Clinic Franchise(உரிமம்) தொழில் :

ஆட்டோ கிளினிக் என்பது இரு சக்கர வாகனப் பட்டறையாகும். இது வாடிக்கையாளர் திருப்தி மற்றும் நேரத்துடன் கூடிய நவீன பழுதுபார்க்கும் சேவைகளை வழங்கிவருகிறது. அதனால் இந்த நிறுவனத்துடன் நீங்கள் Franchise(உரிமம்) பெற்று தொழில் செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

  • தேவைப்படும் முதலீடு : ₹ 50,000
  • இடம்: 250 சதுர அடி-500 சதுர அடி
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement