High Demand Business Ideas 2023
மக்கள் அனைவரும் அவர்களுடைய தேவைக்கேற்ப பொருளை தான் வாங்கி பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு தேவையில்லை என்றால் அந்த பொருளை வாங்க மாட்டார்கள். இது மனிதனாக பிறந்த அனைவருக்கும் இயல்பான ஒன்று. இதனையே நாம் ஒரு தொழிலாக செய்யலாம். அது எப்படி என்றால் சீசனிற்கு ஏற்றவாறு நாம் தொழில் போதும் நல்ல வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் பெறலாம். ஆகையால் இப்போது வெயில் காலம் வரப்போகிறது. வெயில் காலம் வந்தால் யாராலும் தாங்கி கொள்ள முடியாது. அந்த சமயத்தில் சூடான பொருட்களை விட அனைவரும் குளிர்ச்சியான பொருட்களை தான் சாப்பிட விரும்புவார்கள். அதனால் இத்தகைய சுழலுக்கு ஏற்றமாதிரியான ஒரு தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
சுயதொழில் என்ன செய்யலாம்:
சுயதொழில் என்ன செய்வது என்று யோசிப்பதை விட சீசனிற்கு ஏற்றவாறு என்ன தொழில் செய்வது என்று யோசித்தால் போதும் நல்ல வருமானம் பெறலாம். ஆகையால் கோடைகாலத்திற்கு ஏற்ற மாதிரியான Fresh Juice Business-ஐ எப்படி தொடங்குவது என்று பார்க்கப்போகிறோம்.
தொழில் செய்ய தேவையான முதலீடு:
நீங்கள் Fresh Juice Business-ஐ செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 30,000 ரூபாய் தேவைப்படும்.
தொழில் செய்ய தேவையான மூலப்பொருள்:
- பழ வகைகள்
- மிக்சி
- பிரிட்ஜ்
- ஜூஸ் கப்
- சர்க்கரை
நீங்கள் சொந்தமாக பிரிட்ஜ் வாங்கினால் அதில் பழத்தினை வைத்து கொள்ளலாம் மற்றும் ஜூஸ் போடுவதற்கு தேவையான ஐஸ் Cube-னை பயன்படுத்தி கொள்ளலாம். அதனால் ஒரு சிறிய அளவிலான பிரிட்ஜ் இருந்தால் கூட போதும்.
தொழில் செய்ய தேவையான இடம்:
இந்த தொழிலை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதலில் மக்கள் நடமாட்டம் அதிக உள்ள ஒரு இடத்தில் கடை வைக்க வேண்டும். அதன் பின்பு அந்த கடைக்கு ஒரு பெயர் வைக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்⇒ இப்படி ஒரு தொழிலா.! வீட்டிலிருந்தே 50000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாமா.! இது தெரியாம போச்சே..
How to Start Juice Business:
முதலில் நீங்கள் வெவ்வேறு மாதிரியான பழ வகைகளை வாங்கி கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களுடைய கடைக்கு வாடிக்கையாளர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு அப்போதே Fresh ஆக ஜூஸ் போட்டு கொடுத்தால் போதும்.
அதுமட்டும் இல்லாமல் உங்களுடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு சிலர் வீட்டிற்கு பார்சல் அதனையும் நீங்கள் செய்து கொடுங்கள். இப்போது வேற வெயில் காலம் வரபோகிறது ஆகையால் கண்டிப்பாக இந்த தொழிலுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
வருமானம்:
Fresh Juice Business-ற்கான வருமானம் என்று பார்த்தால் ஒவ்வொரு ஜூஸிற்கான விலை என்பது வேறுபடும். ஆகையால் ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
இதனை போலவே நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்தீர்கள் என்றால் ஒரு வாரத்திற்கு 7000 முதல் 10,500 ரூபாய் வரையிலான தோராயமான வருமானத்தை பெறலாம்.
ஆகையால் கோடைக்காலத்திற்கு ஏற்ற மாதிரியான இந்த தொழிலை இந்த சீசனில் செய்யாமல் மிஸ் பண்ணிடாதீர்கள்.
இதையும் படியுங்கள்⇒ இந்த Business-ற்கான டிமாண்ட் என்று பார்த்தால் ஏணி வைத்தாலும் எட்டாது..! அப்படி என்ன தொழில் தெரியுமா அது
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |