Furniture Shop Business Plan
இன்றைய கால கட்டத்தில் பொறுத்தவரை கணவன், மனைவி இரண்டு நபரும் வேலைக்கு சென்றால் தான் பொருளாதார சூழ்நிலையை சமாளிக்க முடியும். சிலரது வீட்டில் பெண்கள் வேலைக்கு செல்வார்கள், சிலரது வீட்டில் வயதானவர்கள் இருப்பார்கள். அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும் அதனால் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாது. அவர்கள் எல்லாம் வீட்டிலிருந்து செய்ய கூடிய தொழில் இருந்தால் செய்யலாம் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் நிறைய வகையான சுய தொழிலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி பார்க்க போகின்றோம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Furniture Shop Business Plan:

வீடு என்று இருந்தாலே அதனை அழகாக காட்டுவதற்கு பொருட்கள் தான் தேவைப்படுகிறது. பொருட்கள் இல்லாமல் இருந்தால் அந்த வீடானது வெறும் இடமாக இருக்கும். அதனால் நீங்கள் பர்னிச்சர் கடையை வைக்கலாம். இந்த கடை எப்படி வைப்பது போன்ற விவரத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
இடம்:
பர்னிச்சர் கடை வைப்பதற்கு முக்கியமாக தேவைப்படுவது இடம் தான். இந்த கடையை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும். அதாவது பேருந்து நிலையம், இரயில் நிலையம் போன்றவற்றிற்கு அருகே இருப்பது போல வைக்க வேண்டும்.
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த தொழில் செய்வதற்க்கு முதலீடு என்று பார்த்தால் 2 லட்சம் தேவைப்படும். மூலப்பொருட்கள் என்று பார்த்தால் பர்னிச்சர் தான். சோபா, டேபிள், டைனிங் டேபிள், பீரோல், கட்டில், நாற்காலி போன்ற அனைத்து பொருட்களும் இருக்க வேண்டும். இதனை மொத்த விற்கும் இடம் அல்லது, பட்டறையிலிருந்து நேரடியாக வாங்கி கொள்ள வேண்டும்.
அட இந்த தொழில் நல்லா இருக்கே..! மாதம் 5 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் தொழில்..!
விளம்பரம்:
எந்த ஒரு தொழிலும் விளம்பரம் இல்லாமல் இருக்காது. விளம்பரம் செய்தால் தான் அந்த தொழில் பிரபலம் அடையும். அந்த வகையில் உங்களுடைய தொழிலையும் விளம்பரம் செய்ய வேண்டும்.
வருமானம்:
சாதாரண நாட்களில் வருமானம் அந்த அளவிற்கு பார்க்க முடியாது, ஆனால் விஷேச நாட்களில் நன்றாக விற்பனை ஆகும். கல்யாண நாள், வீடு குடி பெயர்தல் போன்ற நாட்களில் விற்பனை நன்றாக ஆகும். வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி போன்ற மாதங்களில் விற்பனை நன்றாக ஆகும். தோராயமாக ஒரு மாதத்தில் 50,000 ரூபாய் சம்பாதிக்கலாம். இதுவே விஷேச நாட்களில் ஒரு நாளிற்கு 1 லட்சம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.
சும்மா கிடைக்கிற பொருளை பயன்படுத்தி வாரம் 3,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
| இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |














