New Small Business Ideas in Tamil
புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.. பொதுநலம்.காம் பதிவில் பலவகையான தொழில் யோசனைகளை பகிர்ந்து வருகின்றோம் அந்த வகையில். இன்றைய பதிவில் தமிழ்நாட்டில் யாரும் இதுவரை முயற்சிக்காத மற்றும் அதிக லாபத்தை தரக்கூடிய ஒரு தொழில் வாய்ப்பை பற்றி தான் பார்க்க போகிறோம். குறிப்பாக நீங்கள் எதிர்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலை தொடங்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால். கண்டிப்பாக இப்பொழுது சொல்ல போகின்ற தொழில் யோசனை நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எல்லோரும் செய்யும் தொழிலை நாமும் செய்தோம் என்றால் அவற்றில் அவளவு பெரிய அளவில் நீங்கள் வருமானம் பார்க்க முடியாது. நீங்கள் கொஞ்சம் வித்தியாசகமான யாரும் பெரிய அளவில் செய்திடாத தொழிலை செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக நல்ல வருமானம் பெற்ற முடியும். அப்படி நீங்கள் வித்தியாசமாக தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புகீர்கள் என்றால் இந்த Lithium Ion Battery தயாரிப்பு தொழிலை தொடலங்களாம். சரி வாங்க இந்த Lithium Ion Battery தயாரிப்பு தொழில் பற்றிய முழுமையான விவரங்களை இப்பொழுது நாம் படித்தறியலாம்.
Lithium ion Battery பயன்கள்:
இந்த Lithium Ion Battery என்பது Rechargeable Battery ஆகும். இதன் காரணமாக மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த பேட்டரி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்றால் Electronics, toys, wireless headphones, handheld power tools, small and large appliances, electric vehicles and electrical energy storage systems, Portable electronic devices such as mobile phone, laptop computers and digital cameras, ups, Vehicles போன்று அனைத்திற்கும் பயன்படுகிறது.
இது ஒரு Recycling Lithium Battery என்பதால் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியவேண்டிய அவசியம் இருக்காது. மறுசுழற்சி முறையில் திரும்பவும் மக்களிடம் விற்பனை செய்யலாம். Recycling Business-க்கு அரசாங்கம் அதிகளவு லோன் வழங்குகிறார்கள். ஆகவே வங்கி கடன் பெரும் இந்த தொழிலை தொடங்கலாம்.
Lithium ion Battery Scrap Price:
இந்த லித்தியம் அயன் பேட்டரி ஸ்கிராப் ஒரு கிலோவின் விலை ரூபாய் 40 முதல் 80 ரூபாய் வரை உள்ளதாம். இருப்பினும் விலை நிர்ணயத்தை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இந்த லித்தியம் அயன் பேட்டரி ஸ்கிராப் ஆன்லைனில் கிடைக்கிறது. ஆகவே நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம்.
எப்படி Recycling செய்யப்படுகிறது? – Lithium Ion Battery Recycling Process
முதலில் பேட்டரியின் பேக் வெளியேற்றப்படும். பிறகு அவற்றில் உள்ள மாடல்களை அகற்றுதல் அதாவது பேட்டரி பேக் உரையை அகற்றுவது. அதன் பிறகு அந்த பேட்டரியை தூள் செய்து அவற்றால் உள்ள எலெட்ரிக்கல் பொருட்களை தனி தனியா எடுப்பார்கள்.
இவ்வாறு தனி தனியாக எடுக்கும் போது அவற்றில் காப்பர், அலுமினியம், High valu black powder (Lithium Cobaltate), Cathode metals, Graphite, Cobalt and Nickel, Lithium இதுபோன்ற பல வையான மினரல்ஸை பிரித்து எடுப்பார்கள். இந்த மினரல்ஸை நாம் பிரித்து விற்பனை செய்யும்பொழுது நமக்கு இதன் மூலம் பல மடங்கு லாபம் கிடைக்கும். ஆகவே நீங்கள் ஒரு டன் Lithium Ion Battery Scrap வாங்கி அவற்றில் உள்ள மினரல்ஸை தனித்தனியாக எடுத்து விற்பனை செய்யும்பொழுது நல்ல வருமானம் பெற முடியும். ஒரு Lithium Ion Battery Scrap விலை குறைந்த பட்சம் 40 ஆயிரம் இருக்கும்.
எப்படி இந்த தொழிலை தொடங்கலாம்?
இந்த தொழில் தொடங்குவதற்கும் சில வகையான சான்றிதழ் அரசாங்கத்திடம் வாங்க வேண்டியதாக இருக்கும். அதேபோல் இந்த தொழிலை நீங்கள் உங்கள் ஊரின் அவுட்டர் சைடில் தான் தொடங்க வேண்டியதாக இருக்கும்.
இயந்திரம்:
பேட்டரியில் உள்ள மினரல்ஸை தனி தனியாக பிரித்து எடுப்பதற்கு கட்டாயம் உங்களுக்கு இயந்திரம் தேவைப்படும் அந்த இயந்திரத்தின் விலை ரூ. 75,000/- இவற்றையும் ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம்.
முதலீடு எவ்ளோ போடவேண்டும் ?
நீங்கள் ஆரம்பத்தில் 10 டன் Lithium Ion Battery Scrap பிரித்து எடுக்க போறீங்க அப்படினா 4 லட்சம் வரை தேவைப்படும். அதன் பிறகு வாடகை, வேலையாட்களுக்கு சம்பளம், மின்சாரம் செலவு என்று கிட்டத்தட்ட முதலீடாக 5 முதல் 6 லட்சம் வரை தேவைப்படும்.
வருமானம் எப்படி ?
நீங்கள் இந்த தொழிலுக்கு எவ்வளவு முதலீடு செய்கிறீர்களோ அதைவிட 5 மடங்கு லாபம் பெற முடியும். ஆகவே குறைந்து 5 முதல் 10 மாதத்திற்குள் நீங்கள் போட்ட முதலீடை எடுத்துவிடலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Siru Tholil Ideas in Tamil |