Future Business Ideas in Tamil
படித்தவர்களாக இருந்தாலும் சரி படிக்காதவர்களாக இருந்தாலும் சரி வருக்காலத்திற்கு ஏற்ற மாதிரி நம்மையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். அதாவது நாம் அதற்கு ஏற்ற மாதிரி அடுத்தகட்ட லெவலுக்கு போகவேண்டும். இப்போது அனைத்திற்கும் ஆன்லைன் தான். கடைகளில் சின்ன பொருட்கள் என்றால் கூட அதற்கு பணம் கொடுப்பது ஆன்லைன் மூலம் தான். இது ஒரு பக்கம் நன்மையை அளித்தாலும் அது எந்த அளவிற்கு மாறி உள்ளது என்றால் பூ கடைகளுக்கு போனால் கூட அங்கு Gpay, Phone pay இருக்கா என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் சொந்த தொழில் தொடங்க போகிறீர்கள் என்றால் அதற்கு நாம் என்ன செய்யவேண்டும். இப்போது இருக்கும் தொழிலை விட பிற்காலத்தில் என்ன தொழில் செய்தால் நன்மை கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Future Business Ideas in Tamil:
Courier Service Business:
நாம் என்ன செய்தாலும் அது இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி தான் இருக்கும். அதாவது நாம் எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும் அதனை நாம் அதிகமாக ஆன்லைன் மூலம் தான் வாங்குகிறோம் அல்லவா..? ஆனால் இந்த பொருட்கள் அனைத்தையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது கொரியர் தான்.
அதாவது ஊர்கள் என்றால் அங்கு கொரியர் ஆபிஸ் இருக்கும். இங்கு தான் நீங்கள் ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்கள் வந்து சேரும். சில ஆன்லைன் ஆப் மட்டும் தான் அவர்களுக்கு என்று டிரேடிங் வைத்து அவர்கள் உங்களுக்கு பொருட்களை கொண்டு சேர்க்கிறார்கள். ஆகவே நீங்கள் தொழில் செய்ய நினைத்தால் Courier Service ஆரம்பித்து உங்களுக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளவும்.
Businees Ideas👇👇 1000 ரூபாய் வைத்து என்ன தொழில் செய்யலாம் அதனை பற்றி பார்க்கலாம் வாங்க
ரியல் எஸ்டேட் வணிகம் | Real Estate Business:
பொதுவாக நாம் அனைவரும் கணினி உலகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். இப்போது ஒரு மனிதர்களின் 1200 சதுரடி இடம் இருக்கு என்றால், அது முன்பு விவசாயம் செய்த இடமாக தான் இருக்கும். இப்போது அதிகம் நகர வாழ்க்கைக்கு தான் ஆசைப்படுகிறார்கள். அந்த அளவிற்கு காலம் மாறி வருகிறது. ஆகவே இருக்கும் நிலங்களை கூட இடித்து பில்டங் கட்டி வருகிறார்கள். ஆகவே நாமும் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு தயாராக இருக்கவேண்டும்.
நீங்கள் தொழில் செய்ய நினைத்தால் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய ஆரம்பிக்கவும். அதாவது உங்களிடம் பணம் உள்ளது அதனை என்ன தொழிலில் முதலீடு செய்யலாம் என்றால் இது ஒரு நல்ல தொழிலாக அமையும். இப்போது வாங்கி போட்டாலும் இன்னும் சில வருடங்களுக்கு பிறகு இது நல்ல லாபத்தை பெற்று தரும். அதற்கு முன்பு நீங்கள் வாங்கிய இடம் சரியாக உள்ளதா இன்னும் வருக்காலங்களில் அக்கம் பக்கம் என்ன வரும் என்பதாக ஆராய்ந்து அதன் பின்பு இந்த தொழிலை துவங்குங்கள்..!
1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 5,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சுயதொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |