Gold Covering Business in Tamilnadu | Gold Covering Business Plan
இன்றைய கால கட்டத்தில் விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனை சமாளிக்க வேண்டுமென்றால் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். இப்படி இருந்துமே சில பேர் வீட்டில் இருவரும் வேலைக்கும் செல்ல முடியாது. ஏனென்றால் வீட்டில் வயதானவர்கள் வீட்டில் இருப்பார்கள். அவர்களை பார்த்து கொள்ள வேண்டியிருக்கும். இப்படி உள்ளவர்கள் வீட்டிலையே ஏதவாது தொழில் செய்ற மாதிரி செய்யலாம் என்று யோசிப்பார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் நம்முடைய பதிவில் நிறைய வகையான தொழில்களை பற்றி பதிவிட்டுள்ளோம்.
மேலும் ஒரு தொழிலை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கான டிமாண்ட் எப்படி இருக்குன்னு தான் பாக்கணும். அப்போ தான் நம்ம செய்ற தொழில் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கும். அப்படி நிலைத்து நிற்க கூடிய தொழிலை பற்றி தான் அறிந்து கொள்ள போகிறோம்.
Gold Covering Business Demand
கோல்டு கவரிங் நகை தொழில் ஆனது தற்போது அதிக வளர்ச்சி பெற்ற வணிகமாக இருக்கிறது. கோல்டு விலை அதிகமாக இருப்பதால் கவரிங் நகையை தான் விரும்புகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சாமானிய மக்களுக்கு நகை வாங்குவது ரொம்ப கஷ்டமாக இருக்கும். அவர்கள் கவரிங் நகை பக்கம் தான் திரும்புகிறார்கள். அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம்.
எப்படி தொழில் செய்யலாம்:
இந்த தொழிலை கடை வைத்தும் செய்யலாம், வீட்டிலையேவும் செய்யலாம். நீங்க கடை வைத்து இந்த தொழிலை ஆரம்பிக்க போறிங்கன்னா மெயின் ஆன இடத்தில் பார்த்து வைக்க வேண்டும் ,அதாவது காலேஜ், பேருந்து நிலையம், ஸ்கூல் போன்றவற்றிற்கு பக்கத்தில் இருப்பது போல கடையை வைக்க வேண்டும்.அப்போ தான் வியாபாரம் அதிகமாக நடக்கும். அதுமட்டுமில்லமா இந்த தொழிலுக்கு உங்க ஊர்ல டிமாண்ட் எப்படி இருக்குன்னு பார்க்கிறது அவசியம். இந்த தொழிலை வேறு யாரும் செய்றங்களா, அப்படின்னா அவங்க கடையில வியாபாரம் எப்படி ஆகுது என்றெல்லாம் பார்ப்பது அவசியமானது.
12th படித்திருந்தாலே மாசம் 2 லட்சம் சம்பாதிக்கலாம்.! அப்படி என்ன தொழில்.?
முதலீடு:
இந்த தொழிலுக்கு தேவையான முதலீட்டை பத்தி தெரிஞ்சுப்போம். நீங்க இந்த தொழிலை சிறியதாக வைக்க போகிறீர்கள் என்றால் பத்தாயிரம் முதல் ஐம்பாதாயிரம் வரைக்கும் தேவைப்படும். பெரிய கடையாக வைக்க போகிறீர்கள் என்றால் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரைக்கும் முதலீடு தேவைப்படும். நகைகள் வாங்குவது எப்படி? நகைகளை தயாரிக்கும் இடத்தில் வாங்கினால் விலை குறைவாக இருக்கும். அப்படி இல்லையென்றால் மொத்த கடைகளில் வாங்கினாலும் விலை குறைவாக இருக்கும். சென்னை மற்றும் மதுரை மொத்த கவரிங் நகை கடை இருக்கிறது. அங்கே நீங்க குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளாலாம்.
இதனை தயாரிக்க கூடிய இடமாக திருச்சி மற்றும் சிதம்பரம் இருக்கிறது இங்கே சென்றும் நீங்க குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளலாம். இதற்கு டிசைன் ட்ரென்ட்க்கு ஏற்ற மாதிரி வாங்குவது ரொம்ப முக்கியமானது. ஏன்னா பழைய மாடல் எல்லாம் வாங்க மாட்டார்கள். புதிதாக என்ன டிசைன் உள்ளது, இதனை வாங்க தான் நினைப்பார்கள். அதனால் நீங்க முதலில் நகைகளை அதிகமாக வாங்காமல் எல்லா டிசைன்லையும் கொஞ்சமாக வாங்கி கொள்ளுங்கள். அதில் எந்த மாதிரியான டிசைனை விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொண்டு அதன் பிறகு நீங்க நகைகளை அதிகமாக வாங்கி கொள்ளுங்கள். ஏன்னா சில கடைகளில் நகைகள் விற்பனை ஆகவில்லை என்றால் return செய்து கொள்வார்கள். சில கடைகளில் வாங்கி கொள்ள மாட்டார்கள்.
விளம்பரப்படுத்துவது எப்படி.?
இதனை விளம்பரப்படுத்துவது ரொம்ப முக்கியமானது. நீங்க எந்த அளவுக்கு விளமபரப்படுத்துறீங்களோ அந்த அளவிற்கு ரீச் இருக்கும். அதற்கு நீங்க சமூக வலைத்தளங்களில் உங்களின் நகைகளின் போட்டோக்களை பதிவிட்டு விளம்பரப்படுத்தலாம். உங்கள் வீட்டில் பக்கத்தில் உள்ளவர்களிடம் நகைகளை பற்றி கூறலாம். நீங்க ஒருவரிடம் கூறினால் அவர்கள் இன்னொருவரிடம் சொல்வார்கள். இதன் மூலம் உங்களது கடையானது ரீச் ஆகும். இந்த தொழில்ல ரொம்ப முக்கியமானது நகைகள் தரமானதாக இருக்க வேண்டும். நகைகள் கருத்து போகாமல், பளபளன்னு இருக்க வேண்டும். உங்க நகை தரமாக இருந்தால் தான் உங்க கடையை நாடி வருவார்கள்.
வருமானம் எவ்வளவு.?
இதுல வருமானம் தோராயமாக பத்தாயிரம் முதல் இரண்டு லட்சம் வரைக்கும் வருமானம் கிடைக்கும். உங்க கடையில விற்பனை ஆகும் நகைகளை பொறுத்து வருமானம் மாறுபடும்.
கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |