கொஞ்சமாக முதலீடு போட்டு தினமும் 2000 வரை சம்பாதிக்கும் அருமையான தொழில்..!

Advertisement

Part Time Job Work From Home in Tamil

நண்பர்களே வணக்கம்..! பொதுவாக படிக்கும் நபர்களும் சரி படிக்காமல் இருப்பவர்களும் சரி என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருப்பார்கள். அப்படி யோசிக்கும் அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். அப்படி என்ன பதிவு என்று நினைப்பீர்கள். அப்படி ஒவ்வொரு நாளும் Pothunalam.com பதிவில் ஒவ்வொரு தொழிலை பற்றி பதிவிட்டு வருகிறோம் அல்லவா..! அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளவும். அதேபோல் இந்த பதிவின் வாயிலாக கொஞ்சமான முதலீட்டில் தினமும் கைநிறைய சம்பாதிக்கும் அருமையான தொழிலை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Herbal Hair Oil Business Plan in Tamil:

பொதுவாக  இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் தலைமுடி பிரச்சனை தான், ஏன் தெரியுமா..? அனைவருக்குமே ஒவ்வொரு நாளும் தலைமுடிக்கு பிரச்சனைகள் வந்துகொண்டு தான் இருக்கும். அதனை சரி செய்யும் விதமாக நிறைய கெமிக்கல் கலந்த ஷாம்பு, சீயக்காயை தலைக்கு பயன்படுத்தி முடியை கெடுத்துவிடுகிறோம் அல்லவா..?

ஆனால் இது அனைத்திற்கும் நல்ல தீர்வாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான். இந்த தேங்காய் எண்ணெய் தான் கடையில் விற்கிறது. அதனை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைப்பீர்கள். ஆனால் அப்படி இல்லை இது ஹேர்பல் ஹேர் ஆயில் விற்கும், அதாவது வீட்டில் செய்யக்கூடிய எண்ணெய். இந்த எண்ணெயில் நிறைய இயற்கை பொருட்களை சேர்த்து தயாரித்து கொடுக்கபடுகிறது.

இந்த எண்ணெய் தொழிலை தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள போகிறோம். ஆகவே இந்த தொழிலுக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்று பார்க்கலாம் வாங்க.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்க வீட்ல Table Size இடம் இருந்தாலே போதும் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

முதலீடு:

தேங்காய் எண்ணெய் நீங்களே செய்யபோகிறீர்கள் என்றால் அதற்கு தனியாக மிஷின் உள்ளது. அதனை வாங்கிக் கொள்ளலாம். அப்படி தேவை இல்லை என்றால் மற்ற பொருட்களுக்கு மட்டும் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொள்ளவும். அதன் விலையானது 5,000 ரூபாய் தேவைப்படும். அதுவும் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த பணமும் தேவைப்படாது.

அதேபோல் இந்த எண்ணெயை விற்பதற்கு பாட்டில், கடை வாடகை என அனைத்திற்கும் சேர்த்து 10,000 ரூபாய் போதுமானது. வீட்டிலும் இந்த தொழிலை செய்யலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> தினமும் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழிலை தொடங்குங்கள்

தேவையான மூல பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய்
  • வெந்தயம்
  • வெங்காயம்
  • செம்பருத்தி இலை
  • செம்பருத்தி பூ
  • கற்றாழை
  • விளக்கெண்ணெய்
  • ஆளிவிதை
  • தேங்காய் பால்
  • கரிசலாங்கன்னி
  • வேப்பிலை
  • கருவேப்பிலை
  • கருஞ்சீரகம்
  • மிளகு
  • வெட்டி வேர்
  • வேம்பாளம் பட்டை

இதை தவிர நிறைய பொருட்கள் உள்ளது. அனைத்தையும் ஒரே எண்ணெயில் சேர்க்காமல் ஒவ்வொரு எண்ணெய்க்கு மட்டும் செய்யலாம்.

இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கைநிறைய சம்பாதிக்கலாம் 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement