லாபகரமான தொழில் | Profit Business Ideas in Tamil
சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற ஆசை அனைவரிடத்திலும் உள்ளது. ஆசை இருந்தால் மட்டும் போதாது. தொழில் செய்வதற்கான ஆர்வம், முதலீடு, ஐடியா போன்றவை இருக்க வேண்டும். சில நபர்களிடம் முதலீடு இருக்கும் ஐடியா இருக்காது, இன்னும் சில நபர்களிடம் ஐடியா இருக்கும் அதற்கான முதலீடு இருக்காது.
நீங்கள் முதலீடு அதிகம் போடாமல் ஈசியாக தொழில் செய்து அதில் லாபம் எப்படி கிடைக்கும் என்று இநத பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். தொழில் ஈசி என்று சொன்னவுடன் இதிலிருந்து லாபம் எப்படி வரும் என்று யோசிக்கிறீர்களா.! மக்களிடையே எப்பொழுதும் Demand உள்ள தொழில் தான் இது. அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம். சரி வாங்க என்ன தொழில் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Herbal Shampoo Business in Tamil:
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். முடிக்கு பயன்படுத்தும் எண்ணெய் முதல் ஷாம்பூ வரை இயற்கையானதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இந்த பதிவில் ஷாம்பு தயாரித்து அதனை எப்படி விற்பனை செய்வது என்று தெரிந்து கொள்வோம். ஷாம்பூ அழுக்கை மட்டும் நீக்க அல்ல தலையில் உள்ள பொடுகு மற்றும் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த உதவுகின்றது.
மூலப்பொருட்கள்:
- நெல்லிக்காய்
- எலும்பிச்சை பழம்
- சீயக்காய்
- ஆவாரம்பூ
- பூவாக் கொட்டை
- செம்பருத்தி
இதையும் படியுங்கள் ⇒ இந்த தொழில் செய்ய பொருள் வாங்க வேண்டாம், விற்க வேண்டாம் வீட்டில் இருந்தபடியே மாதம் 25,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!
தயாரிக்கும் முறை:
2 லிட்டர் ஷாம்பூ தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
தண்ணீர் 2 லிட்டர், பூவாக் கொட்டை 100 கிராம், சீயக்காய் 100 கிராம், நெல்லிக்காய் 10, ஆவாரம்பூ 50 கிராம், செம்பருத்தி 100 கிராம், எலும்பிச்சை பழம் 2 போன்றவை தேவைப்படும்.
2 லிட்டர் தண்ணீரில் மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறு நாள் காலையில் ஊற வைத்த பொருட்களை நன்றாக மிக்ஸ் செய்து வடிக்கட்ட வேண்டும். அவ்ளோ தாங்க ஷாம்பூ ரெடி.!
பேக்கிங் முறை:
தயார் செய்த ஷாம்பை ஒரு Empty பாட்டிலில் ஸ்டோர் செய்ய வேண்டும். 100 ML, 200 ML அளவுப்படி Store செய்ய வேண்டும்.
முதலீடு மற்றும் வருமானம்:
இந்த தொழிலுக்கு ஆரம்பத்தில் 500 ரூபாய் முதலீடு செய்தாலே போதுமானது. 1 லிட்டர் ஷாம்பூ தயாரிப்பதற்கு 100 ரூபாய் இருந்தால் போதுமானது. 1 லிட்டர் ஹெர்பல் ஷாம்பு 500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
விற்பனை:
இந்த ஹெர்பல் ஷாம்பை மளிகை கடை, மெடிக்கல், டிபார்ட்மென்ட் ஸ்டார் போன்றவற்றில் விற்பனை செய்யலாம். மேலும் Social Media போன்றவற்றில் விற்பனை செய்யலாம்.
குறிப்பு:
இந்த தொழில் செய்வதற்கு Cosmetics License பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ 1 ரூபாய் கூட முதலீடு இல்லாத தொழிலை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |