High Demand Business Ideas
நம்முடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாக இருகிறது. இத்தகைய பணம் இருந்தால் மட்டுமே நம்முடைய அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியும். இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த பணத்திற்காக நாம் கடினமாக உழைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய உழைப்பு மற்றும் நமது முயற்சி இந்த இரண்டினையும் வேறு முறையில் பயன்படுத்தி இன்னும் நல்ல நிலைக்கு வரலாம். அது எப்படி என்றால் சொந்தமாக சுயதொழில் ஆரம்பித்தால் அதன் மூலம் வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறலாம். அதோடு மட்டும் இல்லாமல் நீங்களும் முதலாளியாக மாறி நான்கு பேருக்கு வேலையும் கொடுக்கலாம். ஆகவே உங்களுக்காக அதிக டிமாண்ட் உள்ள ஒரு சுயதொழிலை பற்றி தான் இன்றைய பதில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
சுயதொழில் என்ன தொழில் செய்யலாம்:
இந்த காலம் மட்டும் இல்லாமல் எந்த காலத்திலும் அதிக டிமாண்ட் தரக்கூடிய Gunny Bags Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இத்தகைய Gunny Bags Business ஆனது இந்த சீசனில் மிகவும் பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதனால் இதனுடைய தேவை என்பது அதிகரித்து கொண்டே இருக்கிறது.
முதலீடு | மூலப்பொருள்:
நீங்கள் இந்த தொழிலை செய்வதற்கு எந்த விதமான மிஷினும் தேவையில்லை. அதுமட்டும் இல்லாமல் இத்தகைய தொழிலை செய்வதற்கு அதிகமாக வேறு எதுவும் மூலப்பொருட்களும் தேவைப்படாது.
மொத்தமாக Wholesale கடையில் சாக்கு வாங்குவதற்கான முதலீடு மட்டும் தான் உங்களுக்கு தேவைப்படும்.
தேவைப்படும் இடம்:
கடையில் மொத்தமாக வாங்கி வைத்துள்ள சாக்கினை வைப்பதற்கு ஒரு பெரிய அளவிலான இடம் தேவைப்படும்.
இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!
Gunny Bags Business in Tamil:
முதலில் நீங்கள் வாங்குவதற்கு முன்பு அதில் 20 கிலோ, 50 கிலோ மற்றும் 100 கிலோ அளவிலான சாக்குகள் இருக்கிறது. அதனால் உங்களுக்கு எந்த அளவில் சாக்குகள் தேவையோ அதனை சரியாக முடி செய்து வாங்கி கொள்ள வேண்டும்.
அதன் பிறகு மொத்தமாக Wholesale கடையில் சாக்குகள் வாங்கினால் உங்களுக்கு செலவு கொஞ்சம் குறைவாக தேவைப்படும்.
இப்போது நீங்கள் வாங்கி வைத்துள்ள சாக்கினை நெல் வியாபாரம், பழக்கடை, மளிகை கடை, காய்கறி கடை மற்றும் அரிசி கடை ஆகிய இடங்களில் மொத்தமாக கிலோ கணக்கில் விற்பனை செய்யலாம்.
வருமானம்:
ஒரு சாக்கின் விலை தோராயமாக 10 ரூபாய் என்று விற்கப்படுகிறது. அப்படி என்றால் ஒரு நாளைக்கு நீங்கள் 500 சாக்குகள் விற்பனை செய்தால் தோராயமாக 1000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
இதனை போல நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்தீர்கள் என்றால் ஒரு மாதத்திற்க்கு 30,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்களுடைய விற்பனை அதிகரிக்க அதிகரிக்க லாபமும் பெறலாம்.
இதையும் படியுங்கள்⇒ ஒரே மாதிரி தொழில் செய்யாமல் இந்த தொழிலை செய்தீர்கள் என்றால் உங்க காட்டுல தான் மழை.!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |