அரைத்து வைத்தால் மட்டும் போதும் அள்ளிக்கிட்டு போவாங்க மாதம் ரூபாய் 50,000 வரை சம்பாதிக்கலாம்..!

small business ideas at home in tamil

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்

அனைவருக்கும் இனிய வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய வியாபாரம் பதிவில் வீட்டில் இருந்தபடியே மாதம் 50,000 ரூபாய் வரை லாபம் தரக்கூடிய அருமையான மற்றும் மிகவும் புதுமையான ஒரு தொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அப்படி அது என்ன தொழில் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றியெல்லாம் விரிவாக இந்த பதிவில் காணலாம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

இதையும் படியுங்கள் => வீட்டில் இருந்தபடியே வாரம் ரூபாய் 7,500 வரை லாபம் தரும் ஒரு சிறந்த தொழில்..!

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்:

மரத்தூள் பொடி தயாரிப்பு:

வீட்டில் இருந்தபடியே மாதம் ரூபாய் 50,000 வரை லாபம் தரக்கூடிய தொழில் அது என்ன தொழில் என்றால் மரங்களில் இருந்து தூக்கி எறியப்படும் மர தூளை வைத்து தான் தொழிலை செய்ய போகின்றோம். இதில் எப்படி சம்பாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா.! இந்த மர தூள்களை வைத்து நோட்டு புத்தகம் அட்டைகள் , அகர்பத்தி மற்றும் சாம்பிராணி போன்றவை தயாரிக்கலாம் இந்த மரத்தூள் பொடி தயாரிக்க உங்கள் வீட்டில் சிறிய இடம் இருந்தால் மட்டுமே போதும்.

மரத்தூள் பவுடர் தயாரிப்பிற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள்:

இந்த மரத்தூள் பொடி தயாரிப்பிற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் என்று பார்த்தால்  மரத்தூள் அரைக்கும் மிஷின்(Wood Crusher Machine) இந்த மெஷின் ஆனது ஒரு மணி நேரத்தில் ஒரு டன் அளவிற்கு மரத்தூள்களை அரைக்க கூடிய திறனை கொண்டதாகும்.  அதாவது 1000 கிலோ கிராம் வரையும் ஒரு மணி நேரத்தில் அரைத்து கொடுத்துவிடும். இந்த மெஷின்களின் விலை அதனின் மாடல்களை பொறுத்து விலை மாறுபடுகிறது. இந்த மிஷினை நீங்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். 

விற்பனை செய்யும் முறை :

நீங்கள் மரத்தூள் பொடியை தயார் செய்த பிறகு அதனை பேக்கிங் செய்து ஆன்லைன் மூலமாகவும் விற்கலாம். அப்படி இல்லையென்றால் பேப்பர், அகர்பத்தி மற்றும் சாம்பிராணி போன்றவை தயாரிக்கக்கூடிய இடத்திலும் விற்கலாம். இந்த தொழில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றால் நீங்களும் இந்த தொழிலை செய்து மாதம் 50,000 வரை சம்பாதிக்கலாம். 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil