இந்த தொழிலில் இவ்வளவு வருமானமானு தோனுதா..! அப்போ லாபத்தை கொஞ்சம் யோசிங்க..!

Advertisement

Neem Tree Stick Business

பொதுவாக சுயதொழில் செய்யப்படும் மூலகாரணமாக இருக்கும் பொருட்கள் அனைத்தும் விலை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது இல்லை. ஒரு பொருளின் விலை என்பது அதனுடைய டிமாண்ட்யை வைத்து மட்டுமே மதிப்பிடப்படுகிறது. ஆனால் நாம் முதலில் ஒரு தொழிலை பற்றி கேள்விப்பட்டவுடனே ஆஹா இந்த தொழிலை செய்ய வேண்டும் என்றால் விலை மதிப்புள்ள மூலப்பொருள் வேண்டும் போல என்று முடிவு செய்து விடுவோம். ஆனால் அவ்வாறு நினைப்பது என்னவோ மிகவும் தவறானது. ஏனென்றால் அந்த தொழிலுக்கு தேவைப்படும் மூலப்பொருளானது உங்களுடைய வீட்டில் இருக்கும் மரமாக கூட இருக்கலாம். அதனால் எந்த தொழிலை செய்ய வேண்டும் என்றாலும் அதனை பற்றிய தெளிவு மற்றும் சிந்தனை மிகவும் அவசியம். இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து தான் இன்றைய பதிவில் அனைவருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய வேப்ப மரத்தினை மையமாக வைத்து வேப்பங்குச்சி தயார் செய்து வருமானம் பெறுவது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

முதலீடு இல்லாத தொழில்:

நீங்கள் இந்த வேப்பங்குச்சி தொழிலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு எந்த விதமான முதலீடு தேவைப்படாது. வேப்ப மரம் மட்டும் இருந்தால் போதும். ஆகையால் முதலீடு இல்லாத இந்த தொழிலை செய்தால் எதிர்பார்க்காத அளவிற்கு லாபம் மற்றும் வருமானத்தை பெறலாம்.

தேவையான மூலப்பொருள்:

தொழில் தொடங்குவது எப்படி

வேப்பங்குச்சி தொழிலை செய்வதற்கு வேப்பிலை மரத்தில் உங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு நீண்ட குச்சிகளை நறுக்கி கொள்ளுங்கள். அதேபோல் முற்றிய குச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.

அதனால் சரியான பதம் மற்றும் அளவு பார்த்து நறுக்கி கொள்ளுங்கள். மேலும் GST Registration பெற்றிருக்க வேண்டும்.

தயார் செய்த வேப்பங்குச்சியினை பேக்கிங் செய்ய Zip Lock Pouch அல்லது பிளாஸ்டிக் பாட்டில் வாங்கி கொள்ள வேண்டும்.

தேவையான இடம்:

இந்த தொழிலை செய்வதற்கு உங்களுடைய வீட்டில் வெறும் 10×10 என்ற அளவில் இடம் இருந்தால் மட்டும் போதும்.

தேவையான ஆட்கள்:

ஆரம்பக்காலத்தில் இந்த தொழிலை செய்வதற்கு 2 அல்லது 3 மூன்று ஆட்களை மட்டும் வேலைக்கு வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய தொழிலுக்கு ஏற்றவாறு அதிகரித்து கொள்ளலாம்.

Businees Ideas👇👇 மரத்தை வைத்து இத்தனை தொழில் செய்யலாமா..? மாதம் மாதம் லட்சத்தில்

தொழில் தொடங்குவது எப்படி..?

முதலீடு இல்லாத தொழில்

முதலில் நீண்ட குச்சிகளை நறுக்கி கொண்டவுடன். அதில் வேறு ஏதேனும் தூசிகள் மற்றும் சின்ன சின்ன குச்சிகள் இருந்தாலும் அதனை அகற்றி விடுங்கள். இவ்வாறு செய்து முடித்தவுடன் குறிப்பிட்ட அளவிற்கு வேப்பங்குச்சிகளை சிறிய சிறியதாக நறுக்கி வைத்து விடுங்கள்.

ஆனால் இந்த குச்சியின் மேலே இருக்கும் தோல்களை மட்டும் நீக்கவே கூடாது. அவ்வளவு தான் வேப்பங்குச்சிகள் தயார் ஆகிவிட்டது. இப்போது இதனை 40 பீஸ்கள் என்ற கணக்கில் தனியாக பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

மேலும் உங்களுடைய தொழில் ஆனது ஒரு தனி அங்கீகாரத்தை பிடித்து நல்ல நிலைக்கு வந்து விட்டது என்றால் தனியாக மிஷின் வாங்கியும் தொழில் செய்யலாம்.

அதே நீங்கள் தயாரிக்கும் வேப்பங்குச்சி சுத்தமான முறையில் இருப்பது அவசியம்.

விற்பனை செய்யும் முறைகள்:

தயார் செய்து வைத்துள்ள வேப்பங்குச்சியினை நாட்டு மருந்து கடை, மெடிக்கல் ஷாப் மற்றும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யலாம். இந்த தொழிலை பொறுத்தவரை ஆன்லைனில் தான் நல்ல வரவேற்பும் அதிக டிமாண்டும் இருகிறது. அதனால் ஆன்லைனில் விற்பனை செய்ய முயற்சியுங்கள்.

Businees Ideas👇👇 லாபம் தரக்கூடிய தொழில் இதுவும் ஒன்றா..  இந்த தொழில் வருமானம் மட்டுமே 30,000 ரூபாயாம்.. 

வருமானம்:

40 வேப்பங்குச்சிகளின் விலை ஆனது தோராயமாக 99 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. அதாவது பீஸ் முறையில் கணக்கிடப்படுகிறது.

ஆகையால் ஒரு நாளைக்கு நீங்கள் 40 பீஸ்கள் 1 பாக்ஸ் என்ற கணக்கின்படி 15 பாக்ஸ்கள் விற்பனை செய்தால் தோராயமாக 1,485 ரூபாய் வருமானம் பெறலாம். அப்படி என்றால் ஒரு வாரத்திற்கு தோராயமாக 10,395 ரூபாய் வருமானம் பெறலாம்.

இந்த தொழிலை பொறுத்தவரை முதலீடு பூஜ்ஜியமாக இருந்தாலும் கூட ஒரு நாள் வருமானம் மட்டுமே 1,485 ரூபாய் கிடைக்கிறது.

நீங்கள் இந்த தொழில் நல்ல வருமானம் மற்றும் லாபத்தை பார்த்தீர்கள் என்றால் அயல்நாடுகளிலும் இதனுடைய தேவை ஆனது அதிகமாக இருப்பதால் டீலர் ஷிப் முறையில் அங்கேயும் சம்பாதிக்க முடியும்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement