சொந்தமாக ATM மெஷின் வைத்து மாதம் 30000 சம்பாதியுங்கள்.. வெறும் ஒரு மணி நேரம் வேலை மட்டும் தான்..!

Hitachi ATM Franchise Details in Tamil

சொந்தமாக ATM மெஷின் வைத்து மாதம் 30000 சம்பாதியுங்கள்.. வெறும் ஒரு மணி நேரம் வேலை மட்டும் தான்..! Hitachi ATM Franchise Details in Tamil..!

இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் பலர் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று விரும்புகின்றன. அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வங்கிகள் பல Franchise வாய்ப்பை வழங்குகிறது. அவற்றில் ஒன்று தான் Hitachi ATM Franchise தொழில் வாய்ப்பு. அதாவது நீங்கள் Hitachi ATM Franchise நிறுவதன் மூலம் மாதம் மாதம் நல்ல வருமானத்தை பெற முடியும். சரி வாங்க இந்த தொழிலுக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், இந்த தொழிலை நாம் தொடங்க நம்மிடம் என்னென்ன விஷயங்கள் இருக்க வேண்டும். மேலும் இந்த தொழிலை தொடங்குவதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் போன்ற அனைத்து தகவல்களையும் படித்து தெரிந்துகொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவைப்படும் விஷயங்கள் – Hitachi ATM Franchise Details in Tamil:Hitachi ATM Franchise

நீங்கள் ஒரு ATM மெஷின் நிறுவ வேண்டும் என்றால் அங்கு மக்கள் கூட்டம் அதிக உள்ள இடமாக இருக்க வேண்டும். ஆக நீங்கள் நல்ல இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அந்த இடம் வெறும் 10-க்கு 10 என்ற அளவில் இருந்தால் கூட பரவாயில்லை. அந்த இடம் சொந்தமாக இருந்தாலும் சரி, அல்லது வாடைக்கு இருக்கும் இடமாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் ஓகே தான்.

இடத்தை தேர்வு செய்த பிறகு நீங்கள் Hitachi நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். பிறகு மேலாளர்கள் வந்து உங்கள் இடத்தை பார்ப்பார்கள், பிறகு நீங்கள் ATM நிறுவதற்கான அப்ரூவலை வாங்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இன்றும் சரி வருங்காலத்திலும் சரி கைநிறைய சம்பாதிக்கலாம்..! அப்படி ஒரு மவுஸ் இந்த தொழிலுக்கு இருக்கு..!

முதலீடு:

நீங்கள் Hitachi-ம் அப்ரூவல் வாங்கிய பிறகு நீங்கள் டெபாசிட் அமௌன்ட் என்று 1,34,000/- கட்ட வேண்டியதாக இருக்கும். இந்த தொகை எதற்காக என்றால் நீங்கள் வைக்கும் ATM-க்கு RBI இடமிருந்து ஒரு லைசன்ஸ் வாங்க வேண்டும். அதற்காக நீங்கள் 1,34,000/- டெப்பாசிட் செய்ய வேண்டியதாக இருக்கும்.

உங்களது பணிகள்:

நீங்கள் ATM மெஷினை வைத்த பிறகு நீங்கள் தான் ATM மெஷினில் பணம் வைக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் 3 லட்சம் ரூபாயை உங்கள் ATM இயந்திரத்தில் வைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இன்று 1 லட்சம் ரூபாய் withdrawal செய்கிறார்கள் நாளை. Hitachi நிறுவனம் அந்த 1 லட்சம் ரூபாயை உங்கள் வங்கி கணக்கிற்கு போட்டு விடுவார்கள்.

பிறகு அந்த 1 லட்சம் தொகையை மீண்டும் நீங்கள் வங்கியில் இருந்து எடுத்துவந்து உங்கள் ATM இயந்திரத்தில் லோட் செய்துகொள்ளலாம். ஆக உங்களுக்கு ஒரு நாளைக்கு 1 மணி நேரம் கூட வேலை இருக்காது.

உங்களுக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு பணம் withdrawal ஆகிறதோ. அவ்வளவு அமௌன்டை உங்கள் ATM மெஷினில் வைக்க வேண்டும். ஒரு நாளுக்கு உங்களுக்கு எவ்வளவு பணம் withdrawal ஆகிறதோ அந்த அளவுக்கு உங்களுக்கு வருமானமும் கிடைக்கும்.

எவ்வளவு வருமானம் கிடைக்கும்:

இந்த தொழிலை பொறுத்தவரை நமக்கு Transition பொறுத்து வருமானம் கிடைக்கும். உதாரணத்திற்கு ஒரு நாளுக்கு 100 நபர்கள் Transition செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மாதத்திற்கு 3000 நபர்கள் Transition செய்திருந்தால், உங்களுக்கு 28000 வரை வருமானம் பெற முடியும். அது போக பேலன்ஸ் செக் செய்யும் போது அதில் ஒரு நபருக்கு 2 ரூபாய் விகிதம் நமக்கு கமிஷன் கிடைக்கும் ஆக மொத்தம்கா மாதம் 30000 வரை வருமானம் கிடைக்கும்.

நீங்கள் வாடகைக்கு இடம் வாங்கி அங்கு இந்த ATM மெஷினை வைத்தால் வாடகைக்கு குறைந்தபட்சம் 5000/- மின்சாரம் செலவு 2000 போக உங்களுக்கு 23,000/- லாபம் கிடைக்கும். நீங்கள் வைத்திருக்கும் இடத்தில் அதிகமாக Transition ஆகும் நீங்கள் எதிர்ப்பாவதை விட அதிகமாகவே வருமானம் கிடைக்கும்.

உங்களிடம் மளிகை கடை, துணிக்கடை, ரீசார்ஜ் கடை இது போன்ற கடைக்குள்ளும் இந்த ATM மெஷினை வைத்து பணம் சம்பாதிக்க முடியும். இதுவரை Hitachi-யில் டெபாசிட் மெஷின் வைத்தீர்கள் அதற்கும் அதிக வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வேண்டாம் என்று தூக்கி போடும் பொருளை வைத்து கூட நல்ல லாபம் பெற முடியுமா..? இது இவ்ளோ நாட்களா தெரியாம போச்சே..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil