சிறிய இடம் இருந்தாலே போதும் பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்.

Advertisement

பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிப்பது எப்படி

வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபார பதிவில் பெண்கள் வீட்டில் இருந்தபடியே  தினமும் சம்பாதிப்பதற்கு ஒரு அருமையான தொழில் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருப்பார்கள். இது போன்ற நேரங்களில் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க ஒரு அருமையான தொழில் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இது எல்லோருக்கும் அதிகமாக பயன்படும் ஒரு பொருள் தான் மேலும் அவை என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ரிபேக்கிங் பிசினஸ் வாங்கும் விலை 100 ரூபாய்​ விற்கும் விலை 500 ரூபாய்..!

பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுய தொழில்:

நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது என்ன தொழில் செய்யலாம் என்று யோசிப்பீர்கள.! இனி கவலையே வேண்டாம் தினமும் நீங்கள் செய்யும் பொருளை கொண்டு அதற்கு தகுந்தது போல வருமானம் பெறலாம். அதாவது நாம் செய்ய போகின்ற தொழில் என்னவென்றால், ஒயர் கூடை தயாரிப்பது தான்,  தற்பொழுது பல இடங்களில் பிளாஸ்டிக் பைகள் ஓழிக்கப்பட்டதால்  மக்களின் கவனம் ஒயர் கூடை பக்கம் திரும்பியுள்ளது.  இதனுடைய தேவைகள் அதிக அளவில் இருப்பதினால் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்கள் காய்கறிகள் வாங்குவதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தேவைப்படும் இடம்:

இந்த ஒயர் கூடைகளை பின்னுவதற்கு உங்கள் வீட்டில் பெரிதாக இடம் வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு 10 × 10 இடம் இருந்தால் போதும் நீங்கள் இந்த ஒயர் கூடைகளை பின்னி விற்பனை செய்யலாம்.

தேவைப்படும் மூலப்பொருள்:

ஒயர் கூடைகளை தயாரிப்பதற்கு ஒயர்கள் மட்டும் இருந்தாலே போதும் இதனை நீங்கள் நேரடியாக கூட வாங்கிக்கொள்ளலாம். ஒரு ஒயரின் விலை 40 ரூபாய் மட்டும்தான். நீங்கள் இதனை மொத்தமாக கூட வாங்கிக் கொள்ளலாம். மேலும் இந்த ஒயர் கூடை பின்னுவதற்கான ஒயர்களை ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக்கொள்ளலாம்.

விற்பனை செய்யும் முறை:

நீங்கள் கடைகளில் ஒயர் கூடைகளை பின்னுவதற்காக  ஒயர்கள் 40 ரூபாய்க்கு வாங்குவீர்கள். தோராயமாக ஒரு கூடையை பின்னுவதற்கு 2 ஒயர்கள் தேவைப்படும். இரண்டு ஒயர்களின் விலை 80 ரூபாய் என்றால் நீங்கள் விற்கும் பொழுது 300 ரூபாய்க்கு மேல் வரையும் விற்கலாம்.  நீங்கள் செய்யும் அளவுகளை பொறுத்து கூடையின் விலையும் மாறும்.  விற்பனை செய்த கூடைகளை பெட்டி கடைகள், காய்கறி கடைகள், பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் கடைகள் மற்றும் நீங்கள் இதை ஆன்லைனிலும் கூட விற்பனை செய்யலாம். ஆன்லைனில் ஒரு ஒயர் கூடையின் ஆரம்ப விலை 499 ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு ஐந்து கூடைகளை விற்பனை செய்யும் பொழுது 1,500 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்க முடியும்.

எனவே வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் இந்த தொழில் செய்து தினமும் வருமானத்தை பெறுங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

 

Advertisement