தினமும் விற்பனை ஆகும் பொருளை பெண்கள் வீட்டில் தயார் செய்து 2 லட்சத்திற்கு மேல் லாபம் எடுத்துவிடலாம்..!

Homemade Bread Manufacturing Business Plan in Tamil

பிரட் தயாரிப்பு தொழில் | Homemade Bread Manufacturing Business Plan in Tamil

Homemade Bread Manufacturing Business Plan in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. புதியதாக தொழில் துவங்க நினைக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது வீட்டில் இருந்தபடியே ஆண்கள், பெண்கள் இருவருமே செய்யக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது வீட்டில் இருந்தபடியே Homemade Bread தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். கண்டிப்பாக பலருக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பால். டீ இது போன்ற பானங்களில் பிரட் தொட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கும். மேலும் உடல் நல பிரச்சனை உள்ளவர்களுக்கு, குழந்தைகளுக்கு என்று அனைவரும் இந்த பிரட்டை வாங்கி கொடுப்பார்கள். ஆக நாம் வீட்டில் இருந்தபடியே பிரட் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம். சரி வாங்க இந்த தொழிலை நீங்கள் செய்ய விருப்பினால் அதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், என்னென்ன மூலப்பொருட்கள் தேவைப்படும், வீட்டில் இருந்து இந்த தொழிலை செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம்.

இடம்:

இந்த Homemade Bread தயாரிப்பு தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே தொடங்கலாம், இதற்காக தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, தொழில் நன்கு வளர்ச்சி அடைந்துவிட்டது என்றால் அப்பொழுது வேண்டும் என்றால் தனியாக இடம் அமைத்து தொழிலை துவங்கலாம்.

முதலீடு:

இந்த தொழிலை துவங்கள் உங்களிடம் குறைந்தபட்சம் 30,000/- முதல் அதிகபட்சம் 1 லட்சம் வரை இருந்தாலே போதும் மிக எளிதாக இந்த தொழிலை ஆரம்பித்துவிடலாம்.

மூலப்பொருட்கள்:

இந்த பிரட் தயரிப்பு தொழிலுக்கு அவசியம் தேவைப்படும் மூலப்பொருட்கள் என்று பார்க்கும்பொழுது Flour, Eggs, Fat, Yeast, Tray, Baking Machine, Salt & Sweetener இது போன்ற மூலப்பொருட்கள் தேவைப்படும். இந்த பொருட்கள் இருந்தாலே போதும் நீங்கள் எளிதாக பிரட் தயார் செய்துவிடலாம்.

தேவைப்படும் இயந்திரங்கள்:

  • Bread Baking Machine
  • Bread Catting Machine

இந்த இரண்டு இயந்திரங்கள் தேவைப்படும்.

பிரட் தயாரிக்கும் முறை:

மாவை நமக்கு பிசைய வேண்டும், பிறகு பிசைந்த மாவை Tray-யில் போட்டு Bread Baking Machine வைத்து வேகவைக்க வேண்டும்.

பிறகு பிரட் வெந்ததும் அதனை நன்கு ஆறவைக்கவும், பிறகு Bread Catting Machine வைத்து கட் செய்துகொள்ளுங்கள்.

கட் செய்த பிரட்டை பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம். பிரட் தயார் செய்வதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது, அங்கு சென்று பயிற்சி பெற்று தொழிலை ஆரம்பிக்கலாம்.

தயாரிப்பு விவரம்:

நல்ல விலையில் இயந்திரம் வாங்கினால் ஒரு மணி நேரத்திற்கு 2000 பிரட் தயார் செய்ய முடியும், 8 மணி நேரம் என்று பார்க்கும்பொழுது கிட்டத்தட்ட 16,000/- பிரட் தயார் செய்யலாம் ஒரு நாளில் மட்டும்.

அதுவே நீங்கள் வீட்டில் இருந்து இந்த தொழிலை செய்தாள் ஒரு நாளுக்கு 100-யில் இருந்து 500 வரை பிரட் தயார் செய்துவிடலாம்.

வருமானம்:

ஒரு நாளுக்கு 500 பிரட் பாக்கெட் தயார் செய்துள்ளளோம் என்று வரித்துக்கொள்வோம் ஒரு பாக்கெட்டில் விலை 30 ரூபாய் என்றால் 500 பாக்கெட்டுகளுக்கு 15,000/- ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

28 நாட்கள் என்று பார்க்கும்பொழுது கிட்டத்தட்ட 4,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு பாக்கெட்டிற்கு 10 ரூபாய் செலவு என்று வைத்துக்கொள்ளும் பொழுது நமக்கு லாபம் 2,80,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

தேவைப்படும் ஆவணம்:

எந்த ஒரு உணவு சார்ந்த தொழிலை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் நீங்கள் Fssai சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல் உத்தியோக ஆதார் பதிவு செய்திருக்க வேண்டும் அதாவது GST பதிவு செய்திருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
10 x 10 இடம் இருந்தால் போதும் தினமும் 10 நிமிடம் வேலை சேலை செய்து 7 நாட்களில் 40,000/- வருமானம் பெறலாம்..

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil