Honey Gooseberry Business in Tamil
சொந்தமாக தொழில் தொடங்க விருப்பும் அனைவருக்கும் அன்பு வணக்கம்.. இன்று நாம் குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய தொழில் பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே இந்த தொழிலை எடுத்து நடத்தலாம் நல்ல வருமானத்தை காண முடியும். ஒரு பொருளை 50 ரூபாய்க்கு வாங்கி அதனை மதிப்பு கூட்டி 400 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். இவற்றில் நஷ்டம் என்பதே நமக்கு வராது. சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கும் அனைவருமே முதலில் நினைப்பது என்னவென்றால் எந்த தொழிலை செய்தால் நமக்கு நல்ல வருமானமும், லாபமும் பெறலாம் என்று தான்.
அவர்கள் நினைப்பதும் சரியான விஷயம் தான். ஏனென்றால் நாம் முதன் முதலில் செய்யும் தொழில் எந்த விதத்திலும் நமக்கு நஷ்டம் ஏற்படாமல் லாபம் மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆகையால் உங்களுடைய எண்ணம் நிறைவேற வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் பெற அருமையான ஒரு தொழிலை பற்றி தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். அப்படி என்ன சுயதொழில் என்று நீங்கள் ஆர்வமுடன் யோசிப்பது புரிகிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய Honey Gooseberry Business-ஐ பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அது என்ன Honey Gooseberry என்று யோசிப்பீர்கள் அது வேறு ஒன்றும் இல்லை பெரிய நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது தான் Honey Gooseberry ஆகும். இந்த தொழிலை எடுத்து நடத்துவதன் மூலம் நல்ல லாபம் பெற முடியும். சரி வாங்க இந்த தொழில் குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Honey Gooseberry Business:
இந்த Honey Gooseberry நமது உடலுக்கு தன்மை தரக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. அதனால் இதனை மக்கள் அதிக அளவு கடையில் வாங்கி சாப்பிடுகிறார்கள். எனவே இந்த தொழிலுக்கான டிமாண்டும் இன்றிய காலத்தில் நிறைய இருக்கிறது. அப்படி என்ன பயன்கள் இருக்கிறது என்றால்..
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு, முடி வளர்ச்சிக்கு மற்றும் செரிமான கோளாறு ஆகிய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினை அளிக்க கூடியதாக இந்த தேன் நெல்லிக்காய் இருக்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் வீட்டில் உள்ள 10 X 10 இடத்தில் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் காலப்போக்கில் Factory ஆரம்பிக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும் ..!
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கான மூலப்பொருட்கள்
- பெரிய நெல்லிக்காய்
- தேன்
- பேக்கிங் கவர் அல்லது பாட்டில்
முதலீடு:
இந்த தொழிலுக்கான தோராயமான முதலீடு என்று பார்த்தால் 5000 ரூபாய்.
இடவசதி:
இடவசதியை பொறுத்தவரை உங்களுடைய வீட்டில் சிறிய பகுதியில் 10X10 இடம் இருந்தால் போதும். மேலும் இந்த தொழிலை தொடங்க மெஷின் எதுவும் தேவையில்லை.
தேவைப்படும் சான்றிதழ்கள்:
இது இரு உணவு சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
Online மூலமாக விற்பனை செய்வதாக இருந்தால் அதற்கு GST Registration கண்டிப்பாக செய்திருக்க வேண்டும்.
தயாரிப்பு முறை:
முதலில் நாம் வாங்க கூடிய நெல்லிக்காய் அனைத்தும் ஒரே அளவில் இருக்க வேண்டும். ஒன்று சிறிதாக ஒன்று பெரிதாக இருக்க கூடாது. மேலும் சுத்தமான தேன் வாங்கி கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அதன் நெல்லிக்காயை சுடுதண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
சிறிது நேரம் கழித்து அந்த நெல்லிக்காயை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளுங்கள். நெல்லிக்காய் மிதமான பதத்திற்கு வெந்தவுடன் அதனை வெளியே எடுத்து அதில் ஒன்று அல்லது இரண்டு துளை இட்டு கொள்ளுங்கள்.
இப்போது ஒரு பாத்திரத்தில் சுத்தமான தேன் எடுத்துக்கொண்டு அதில் வேக வைத்து துளை இட்டு வைத்துள்ள நெல்லிக்காயை போட்டு மூடி வைத்து விடுங்கள்.
இதனை 1 வாரம் வரை தேனில் ஊறவைக்க வேண்டும். 1 வாரம் கழித்த பிறகு அதனை நீங்கள் பத்து பத்தாக பிரித்து தேன் நெல்லிக்காயை பாட்டில் அல்லது கவரில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
உற்பத்தி செலவு மற்றும் வருமானம்:
மொத்த விலை காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய நெல்லிக்காய் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். ஒரு கிலோ நெல்லிக்காயில் தோராயமாக 30 முதல் 40 நெல்லிக்காய் வரை கிடைக்கும்.
அதேபோல் மொத்த விலை மார்க்கெட்டில் ஒரு கிலோ தேன் விலை ரூபாய் 250-க்கு கிடைக்கிறது. 5 கிலோ நெல்லிக்காய் ஊற வைக்க ஒரு கிலோ தேன் தேவைப்படும்.
5 கிலோ நெல்லிக்காயில் சுமார் 200 தேன் நெல்லிக்காயை நாம் தயார் செய்ய முடியும். 10 தேன் நெல்லிக்காய் உள்ள ஒரு பாக்கெட் தேன் நெல்லிக்கனியின் விலை 100 ரூபாய் ஆகும்.
இந்த விதத்தில் நீங்கள் ஒரு நாளுக்கு தோராயமாக 20 தேன் நெல்லிக்காய் பாக்கெட் விற்பனை செய்தால் 2000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதில் 500 ரூபாய் செலவு போக 1500 ரூபாய் லாபம் கிடைக்கும்.
இது போல் நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்து வந்தால் மாதத்திற்கு 50,000/- ரூபாய் வரை சுலபமாக சம்பாதிக்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாங்கும் விலை ரூ.20 ஆனால் விற்கும் விலை ரூ.700 அருமையான சுயதொழில்
சந்தை வாய்ப்பு:
நீங்கள் தயார் செய்த தேன் நெல்லிக்காயை எங்கெல்லாம் விற்பனை செய்யலாம் என்றால் மளிகை கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |