வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி ? Mudra loan details in tamil..!

Updated On: June 26, 2024 4:20 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

முத்ரா வங்கி கடன் பெறுவது எப்படி..? How to Get Mudra Loan in tamil

தொழில் தொடங்க கடன் உதவி (Mudra loan details in tamil):- சிறு, குறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.10,00,000/- வரை சொத்து பணயம் இல்லா வங்கி கடன் பெரும் முத்ரா திட்டம் பற்றிய முழு விவரங்களை இப்போது நாம் தெளிவாக காண்போம் வாங்க..! விவரங்கள், இந்த திட்டத்தில் இணைய என்ன தகுதி வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் (mudra loan documents), என்று இப்போது நாம் தெளிவாக காண்போம் வாங்க…

முத்ரா கடன் விவரங்கள் :

முத்ரா கடன் (mudra tholil kadan) விவரங்கள்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். நிதி அமைச்சர் 2015-16 நிதியாண்டில் வெளியிட்டார். தனியார் குருந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். 2015-16 நிதியாண்டில் சுமார் 1.5 கோடி நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்கியுள்ளனர்.

புதிதாக என்ன தொழில் செய்யலாம் – சிறு தொழில் பட்டியல் 

முத்ரா சேவைகள்:

இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவு படுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய முறைகளில் வழங்கபடுகிறது.

முத்ரா வங்கி திட்டம் :

சிசு (SHISHU) முத்ரா வங்கி திட்டம் – இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை கடன் பெறலாம்.
கிஷோர் (KISHOR) முத்ரா வங்கி திட்டம் – இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெறலாம்.
தருண்(TARUN) முத்ரா வங்கி திட்டம் – இத்திட்டம் மூலமாக ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.

முத்ரா கடன் – தகுதிகள்

Mudra loan details in tamil:- பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மட்டும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கபடுகிறது.

பெண்கள் வீட்டில் இருந்து என்ன மாதிரியான சுயதொழில் செய்யலாம்..!

முத்ரா கடன் திட்டத்தை  யாரெல்லாம் பயன்படுத்தி கொள்ளலாம்..?

  1. அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
  2. உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு, முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், கோழிப் பண்ணை, மாடு வளர்த்தல், மீன் பண்ணை, தேனீ வளர்த்தல், பால் பண்ணை, பட்டு தொழில், பேக்கரி கடைகள் விரிபடுத்துதல், ஏஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவினை கலைஞர், உற்பத்தி தொழிற்சாலை அமைத்தல் என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.
  3. ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு கடன் தர வங்கிகள் முன்வருவதில்லை. அந்த தொழிலை விரிவு படுத்துவதற்கோ அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.
  4. கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல் (Quotation) கொடுக்க வேண்டும். அதன் அடிபடையில் கடன் கிடைக்கும்.
  5. உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் நிரூபிக்கும் பட்சத்தில் கடன் வழங்க வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுப்பார்.
  6. சொந்த செலவு, வீட்டு செலவு, கல்யாண செலவு போன்றவற்றிக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்க வாய்ப்பில்லை.

முத்ரா கடன் திட்டத்தில் பயன்பெற நீங்கள் செய்ய வேண்டியவை….

  • இதில் கடன்பெற உங்கள் அருகில் உள்ள வங்கிக்கிளையில் சென்று விண்ணப்ப படிவம் பெறலாம். மேலும் PMMY APPLICATION FORM என இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.
  • வயது வரம்பு 18 வயது முடிந்திருக்க வேண்டும்.
  • இத்திட்டத்தில் மூன்று பிரிவுகளில் கடன் பெறலாம். அதற்கான தகுதியை வங்கி மேலாளர் உங்கள் தொழிலை கொண்டு முடிவு செய்வார்.
  • இத்திட்டத்தில் எந்தவித அரசு மானியமும் கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு தொழில் கடன் திட்டம் (Mudra loan details in tamil) மட்டுமே.
  • இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயக்கபடும்.
  • நீங்கள் வாங்கும் கடனை 5 வருடம் வரை திருப்பி செலுத்தலாம். கடனை EMI மூலம் வங்கி கணக்கிட்டு அறிவிக்கும்.
  • நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில், தொழில் நன்றாக நடக்கும் போது மேற்கொண்டு அதனை அபிவிருத்தி அல்லது நடைமுறை மூலதனம் பெற வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்கும்.
  • ஏற்கனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டு. ஆனால் அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன் கணக்காக இருக்க கூடாது.
  • இந்த முத்ரா கடன் (mudra tholil kadan) பெற எந்தவித சொத்து பிணையம் (SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. கடன் பத்து லட்சம் வரை பெறலாம்.
  • ஒரு வங்கி கிளை ஆண்டுக்கு குறைந்த பட்சம் 25 நபர்களுக்கு முத்ரா கடன்  திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.
  • உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது.
  • அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிக்கவும்.
  • விலைப் பட்டியலுடன் நீங்கள் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம்.
  • இந்த முத்ரா கடன் திட்டத்திற்கு (mudra tholil kadan) கால நிர்ணயம் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் கடன் வழங்கும்.

முத்ரா கடன் வழங்கும் வங்கிகள் 27 Public Sector Banks

  • 17 Private Sector Banks
  • 31 Regional Rural Banks (RRBs)
  • 4 Co-operative Banks
  • 36 Micro Finance Institutions (MFIs)
  • 25 Non Banking Financial Companies (NBFCs)

முத்ரா கடனுக்கு தேவைப்படும் ஆவணங்கள்  (Mudra Loan Documents)..!

  1. அடையாள சான்று (mudra loan documents).
  2. இருப்பிட சான்று (லேட்டஸ்ட் தொலைபேசி ரசிது, மின்சார கட்டண ரசிது, வீட்டு வரி ரசிது).
  3. லேட்டஸ்ட் புகைப்படம்.
  4. இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசிது (mudra loan documents).
  5. சப்லேயர் விபரங்கள்.
  6. தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும் லைசென்ஸ் .
  7. சாதி சான்று.

முத்ரா கடன் அட்டை:

தொழில் தொடங்க கடன் உதவி: முத்ரா கடன் (mudra tholil kadan) கிடைத்த உடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரடிட் கார்டு போல பயன்படுத்தலாம். இந்த கார்டு மூலமாக கடன் தொகையில் 10% அதிகபட்சம் Rs.10,000 வரை பயன்படுத்தலாம்.

முக்கிய குறிப்பு :

  • வங்கியின் மேலாளர் அனுமதி பெற்று பின் பார்க்கவும்.
  • மேலாளரை பார்க்கும் போது அனைத்து நகல்களுடன் பார்ப்பது நலம். கடன் தேவைக்கு சரியான விளக்கம் தர வேண்டும்.
  • மேலாளரின் முடிவே இறுதியானது.
  • மேலும் விவரங்களுக்கு www.mudra.org.in என்ற இனையதளத்தில் பார்க்கவும். நோடல் அதிகாரிகளின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு என்ற அனைத்தும் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது.

 

சுயதொழில் மெழுகுவர்த்தி தயாரிப்பு..! தினமும் வருமானம்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Supermarket Business Plan in Tamil

சூப்பர் மார்க்கெட் தொழில் தொடங்குவது எப்படி? | Supermarket Business Plan in Tamil

ready to cook food business ideas in tamil

அடுத்த 10 வருடத்தில் கோடியில் புரளும் தொழில் இது தாங்க.!

Cupcake Business Plan in Tamil

காலப்போக்கில் Factory ஆரம்பித்து நடத்தக்கூடிய அளவிற்கு வருமானம் தரக்கூடிய தொழில்..!

Dining Paper Roll Making Business in Tamil

சாதாரண தொழில் தான் ஆனால் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

சுயதொழில்

சுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்!!!

சிமெண்ட் செங்கல் தயாரிப்பு

சுயதொழில் – ஹாலோபிளாக் கற்கள் வியாபாரம் !!!

Home Service Business Ideas in Tamil

பணம் கிடைக்க சிறந்த தொழில்கள் | Home Service Business Ideas in Tamil

ladies business ideas in tamil

பெண்கள் வீட்டில் இருந்தே லட்சத்தில் சம்பாதிக்க கூடிய தொழில்கள் | Ladies Business Ideas in Tamil

தினமும் காலையில் போட்ட முதலீட்டை விட அதிகமாகவே மாலைக்குள் திருப்பி சம்பாதித்துவிடலாம்..!