குறைந்த முதலீட்டில் லாபம் தரும் புதிய தொழில்..! Sticker Printing Business Plan..!

Advertisement

குறைந்த முதலீட்டில் லாபம் தரும் லேபிள் பிரிண்டிங் தொழில்..! 

Sticker Printing Business Plan:- புதிதாக வீட்டில் இருந்தபடியே தொழில் தூங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான தொழில் வாய்ப்பு. அதாவது பொதுவாக தயாரிப்பு துறைகளில் தங்களுடைய பொருட்களை விளம்பரம் படுத்தும் வகையில் அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களில் ஏதாவது லேபிள் அல்லது ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்வார்கள், மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களுடைய நோட் மற்றும் புத்தகங்களுக்கு ஸ்டிக்கர்ஸ் மற்றும் லேபிள் போன்றவற்றை பயன்படுத்துவார்கள்.

எனவே மக்களிடம் அதிகம் வரவேற்கப்படும் இந்த லேபிள் பிரிண்டிங் தொழிலை ஆண், பெண் இருபாலரும் இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே செய்தாலே பல ஆயிரம் லாபம் பெற முடியும்.

சரி வாங்க இந்த லேபிள் பிரிண்டிங் தொழிலை எப்படி துவங்கலாம், இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், இந்த தொழில் துவங்க என்னென்ன மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரம் தேவைப்படும், இந்த தொழில் மூலம் எவ்வளவு லாபம் பெற முடியும் போன்ற விவரங்களை இங்கு காண்போம்.

டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் சுயதொழில் ..!

இடவசதி:-

வீட்டில் தனியாக ஒரு சிறிய அரை இருந்தாலே போதுமானது, அனைவருமே இந்த தொழிலை துவங்கிவிடலாம், தங்களுடைய ஓய்வு நேரங்களில் லேபிள் தயார் செய்து விற்பனை செய்யலாம்.

மூலப்பொருட்கள்:-

இந்த தொழில் துவங்க கட்டாயம் ஒரு கம்யூட்டர் வைத்திருக்க வேண்டும், பிறகு Plain roll label stickers இவை இரண்டும் அவசியம் தேவை.

தேவைப்படும் இயந்திரம்:-

mini sticker printing machine

இந்த தொழில் துவங்க தேவைப்படும் இயந்திரம் என்னவென்றால் sticker printing machine தான். இந்த இயந்திரம் அனைத்து ஆன்லைன் கடைகளிலும் பல டிசைன்களில் மிக குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது ஆரம்ப விலை ரூபாய் 13,000/- முதல் அதிகபட்சம் 1,00,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் தங்களுக்கு பிடித்த டிசைனை ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.

முதலீடு 

இந்த தொழில் பொறுத்தவரை பெரிய அளவு முதலீடு செய்து தொழில் தூங்க வேண்டும் என்றால் லட்ச கணக்கில் முதலீடு செய்து இந்த தொழிலை துவங்கலாம்.

குறைந்த முதலீட்டில் இந்த லேபிள் பிரிண்டிங் தொழிலை துவங்க வேண்டும் என்றால், குறைந்த பட்சம் 30 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.

தயாரிப்பு முறை:-

லேபிள் தயாரிப்பு என்பது பெரிய கஷ்டமான ப்ராசஸ் இல்லை மிகவும் எளிமையான முறையில் தான் இருக்கும். இருப்பினும் இயந்திரம் மற்றும் கம்யூட்டரை இயக்க தெரிந்திருக்க வேண்டும். எனவே சிறிய அளவிலாவது இந்த தொழில் பற்றிய பயிற்சி தெரிந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

சந்தை வாய்ப்பு:-

how to start a sticker business from home

இந்த பிரிண்டிங் தொழில் பொறுத்தவரை வாடிக்கையாளர் கேட்கும் விதத்தில் அழகான டிசைனில் லேபிள் தயார் செய்து தந்தால் தங்களிடமே ஆர்டர் தருவார்கள்.

பிறகு சிறு குறு கடைகள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி ஓரங்களில் இருக்கும் கடைகளில் மாணவர்கள் நோட் மற்றும் புத்தகங்களுக்கு பயன்படுத்தும் லேபிளை தயார் செய்து விற்பனை செய்யலாம் இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் பார்க்கலாம்.

மேலும் தாங்கள் பலவகையான டிசைன்களில் லேபிள் பிரிண்டிங் செய்து தருகின்றீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்வதன் மூலம் தங்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement