வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்

Updated On: October 6, 2025 5:12 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Car Cleaning Business In Tamil 

இன்றைய பதிவில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்கள் என்பதை பற்றி பார்க்க போகிறோம். சுய தொழில் செய்ய விரும்புபவர்கள் குறைவான முதலீட்டை கொண்டு அதிக வருமானத்தை ஈட்ட முடியும். இதன் மூலம் அவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் தனக்கு தேவையான அனைத்து செலவுகளையும் அவர்களே பார்த்துக்கொள்ள முடியும். இதன் மூலம் சமுதாயத்தின் பொருளாதார நிலை உயரும்.

மேலும், நாம் செய்யும் தொழிலை ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் ,நேர்மையாகவும் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் தொழிலை செய்ய வேண்டும். உங்களின் வாடிக்கையாளர்களின் மனதை கவரும் வகையில் நீங்கள் தொழில்தொடங்கினாள், உங்களின் பிஸ்னஸ் வாடிக்கையாளர்களின் மனதில் நீங்க இடம் பிடித்துவிடும். அப்படி என்ன தொழில் செய்வது என்பதை பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம் வாங்க…

Car Cleaning Business :

 முதலில் சிறிதான முதலீட்டை போட வேண்டும். இந்த முதலீடு கார் வாஷிங் செய்வதற்கான மெஷின்களை வாங்குவதற்கு தேவைப்படும். மேலும், நீங்கள் வாடகை இடத்தில் தொழில் செய்ய தொடங்கினாள். வாடிக்கையாளர் அனைவருக்கும் தெரியும் வகையில் சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்பு அந்த இடத்தில் மின்சார வசதி மற்றும் தண்ணீர் வசதி இருக்குமாறு பார்க்க வேண்டும். இந்த தொழில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. தண்ணீர் தூய்மையானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தண்ணீரில் உப்பு அதிகமாக இருந்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த தொழில் தொடங்குவதற்கு முன்பு நிறுவனபதிவு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களிடம் இருந்து முறையான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த தொழிலை தொடங்க ஒரு நல்ல பெயரை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அதை ப்ளக்ஸ் அடித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் மாட்டிவிட வேண்டும். இந்த தொழில் தொடங்குவதற்கு சுமார் Rs. 75 ஆயிரம் முதல்  Rs.1 லட்சம் வரை முதலீடு தேவைப்படலாம். இதற்கு தேவையான மெஷின்களை ஆன்லைன் மற்றும் ஆஃலைன் வாங்கி கொள்ளலாம்.

Fresh Machine :

காரை சுத்தபடுத்துவற்கான ஒரு இயந்திரம் ஆகும். இந்த மிஷின் காற்றை பயன்படுத்தி தண்ணீரை காரின் மீது வேகமாக அடிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இந்த இயந்திரத்தை ஒரு வாட்டர் டேங்க் உடன் இணைத்து அதிலிருந்து நேரடியாக தண்ணீரை எடுத்து காரின் மீது பீச்சி அடிக்கும் தன்மையை கொண்டுள்ளது. இந்த இயந்திரம் பிரபலமான நிறுவனங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. முறையான ஆலோசனையை பெற்ற பிறகு தேவைக்கேற்ப  இயந்திரகளை வாங்கி கொள்ளவும்.

இந்த ஒரு மெஷின் வாங்கினால் போதும் மாதம் 72,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Cleaning Material:

கார் வாஷிங் செய்வதற்கு தேவையான பொருள்களான ரசாயனங்களை சந்தையில் வாங்கிக்கொள்ளலாம். கார் கிளீன் செய்வதற்கான தரமான ரசாயனங்களை தேர்வு செய்துகொள்ள வேண்டும். டிடெர்ஜென்ட் மற்றும் ஃபோம் போன்ற ராசயங்களை தேவையான அளவு வாங்கி இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Car Polishing Machine :

கார் பயன்படுத்துபவர்கள் அதிகமாக பயன்படுத்த கூடிய ஒரு விஷயம் டிடைனிங் ஆகும். இது காருக்கு பாலிஷின் மற்றும் மெழுகு கோட்டிங் டெப்லான் கோட்டிங் செய்து காரை அழகுபடுத்தி பளபளப்பாக வைத்திருக்க உதவும். வட்ட வடிவமான உபகரணம் ஆகும். இதை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப செய்துதரலாம்.

Car Vacuum Cleaning:

இந்த உபகரணத்தை பயன்படுத்தி காரின் உள்ளே உள்ள டஸ்ட் மற்றும் துரும்புகளை எளிதாக அகற்ற முடியும். இன்டீரியர் கிளினிக் மேனுவல் மூலம் ஆட்கள் செய்தால் சுத்தமான’உணர்வை அளிப்பதில்லை. நல்ல திறன் வாய்ந்த வேக்குவம் கிளீனிங் மூலம் டேஷ்போர்ட் மற்றும் சீட் , கால் வைக்கும் பகுதிகளில் சுத்தமாக சரி செய்வதற்க்கு இந்த உபகரணம் சிறந்த ஒன்றாக இருக்கும் .

Car Cleaning Business Monthly Profit:

இந்த தொழிலை முறையாகவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் தரமானதாக தொழில் செய்தால் மாதம் Rs.1 லட்சம் முதல் Rs.2 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும். 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை