Home Decor Business Ideas
சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால் என்ன தொழில் செய்வது என்று பலரும் யோசித்து கொண்டு இருக்கிறார்கள். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது.
அதற்கான முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் பலவிதமான வணிக யோசனைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே அது என்ன தொழில் என்று தெரிந்து கொள்வோம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Home Decor Business Ideas in Tamil:
சொந்தமாக ஒரு சிறந்த தொழிலை தொடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். அது என்ன தொழில் என்று யோசிப்பீர்கள். வீட்டு அலங்காரம் செய்யும் தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம்.
இந்த கால கட்டத்திலும் சரி இனிவரும் காலங்களிலும் சரி இந்த தொழிலுக்கு Demand அதிகமாகவே இருக்கும். அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று பல ஆசைகள் கனவுகள் இருக்கும்.
அதுபோல பார்த்து பார்த்து வீடு கட்டி முடித்ததும் வீட்டின் உள்ளே அலங்காரம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் வீட்டில் இந்த இடம் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதற்காக வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடையை கட்டாயம் தேடுவார்கள். அதனால் நீங்கள் இந்த தொழிலை தொடங்கி அதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.
இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள் தினமும் 10,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்..! |
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த தொழில் தொடங்குவதற்கு வீட்டை அலங்கரிக்கும் பொருட்களை மொத்தமாக கிடைக்கும் கடைகளில் இருந்து வாங்கி கொள்ள வேண்டும். பின் உங்களுக்கு என்று ஒரு கடை இருக்க வேண்டும். அது சொந்த கடையாகவும் இருக்கலாம் அல்லது வாடகை கடையாகவும் இருக்கலாம்.
இந்த தொழில் தொடங்குவதற்கு அலங்கரிக்கும் பொருட்களின் விலை, கடை வாடகை என்று 2 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.
கடை தேவையில்லை வீட்டில் இருந்தே தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..! |
இடம்:
இந்த வணிகத்தை மக்கள் அதிகம் வரும் பகுதிகளான இடங்களில் தொடங்க வேண்டும். அந்த இடம் மக்கள் விரைவில் அணுக கூடிய இடமாகவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் மக்கள் உங்கள் கடையை தேடி வருவார்கள்.
உங்கள் கடையில் வீட்டை அலங்கரிப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களும் இருக்க வேண்டும். அதுபோல உங்கள் கடையை மக்கள் தெரிந்து கொள்வதற்கு உங்கள் கடையை விளம்பரப்படுத்த வேண்டும்.
இந்த தொழில் அதிகளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் தொடங்கி உங்கள் வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!
தினமும் நல்ல லாபம் தரக்கூடிய அருமையான தொழில்..! |
இந்த தொழிலுக்கு முதலீடே தேவையில்லை, ஆனால் தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |