How to start POST Office Franchise Business Idea in Tamil
வணக்கம் நண்பர்களே.. நமது இந்திய அரசு Franchise Business வாய்ப்பை மக்களுக்கு அறிவித்துள்ளது. அந்த Business ஐடியாவை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது POST Office Franchise Business அப்படி என்றால் என்ன?, யாரெல்லாம் இந்த தொழிலை செய்யலாம், என்ன தகுதி, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், இந்த தொழிலை செய்ய என்ன தேவைப்படும், இதற்கு ஏதாவது பயிற்சி உண்டா?, இதன் மூலம் நாம் எவ்வளவு சம்பாதிக்க முடியும், இந்த Franchise தொழில் தொடங்க நாம் என்ன செய்ய வேண்டும் போன்ற தகவல்களை கீழ் படித்தறியலாம் வாங்க.
What is Post Office Franchise Business?
Post Office Franchise Business என்பது நமது இந்திய தபால் துறை எங்கெங்கெல்லாம் செயல்படவில்லையோ அந்த ஏரியாவின் பின்கோட்டில் நீங்கள் இருந்திர்கள் என்றால் இந்த franchise பிஷன்ஸை கண்டிப்பாக செய்ய முடியும். Franchise பிசினஸ் பெரும்பாலானவை லாபத்தையே தருகின்றன. ஆகவே நீங்கள் அஞ்சல் அலுவலகத்துடன் இணைத்து இந்த Franchise தொழிலை தொடங்கினாள் நல்ல லாபம் பெற முடியும்.
Post Office Franchise Business Types:
- Franchise outlets
- Postal Agent
Post Office Franchise Business-ற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்திய தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அவற்றில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து. அந்த விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து அஞ்சல் அலுவலகத்தில் சமரிப்பிக்க வேண்டும். பின் உங்களது விண்ணப்பங்களை சரிபார்க்க்கப்பட்டு.
பின் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்ட பின்னர் அஞ்சல்துறையும், முகவராக வருவோரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். விண்ணப்பத்தை அளித்த பின்னர், விண்ணப்பதாரரை தேர்வு செய்வதோ அல்லது நிராகரிப்பதோ மண்டலத் தலைவர் அதிகாரத்துக்கு உட்பட்டது. விண்ணப்பத்தைத் தாக்கல் செய்து 14 நாட்களுக்குள் அஞ்சல் கிளை தொடங்குவதற்கான அனுமதி குறித்து முடிவு செய்யப்படும்.
இவற்றில் என்ன வேலைகள் இருக்கும்?
வந்த போஸ்ட் ஆபீஸ் பிரான்சீஸ் பிசினஸில் என்ன மாதிரியான வேலைகள் இருக்கும் என்றால்.
- மணி ஆர்டர் அனுப்பலாம்,
- small savings deposit schemes ஓபன் செய்து தரலாம்,
- Bill Collection செய்யலாம்,
- Revenue stamp and CRF stamp போன்றவற்றை விற்பனை செய்யலாம்,
- e-post, Bulk Booking allowed without any limit இது போன்று ஆன்லைன் தொடர்பான சேவைகளை செய்யலாம்
முதலீடு:
போஸ்ட் ஆஃபீஸ்ல் பிரான்சீஸ் பெறுவதற்கு நீங்கள் 5 ஆயிரம் முதலீடு செய்தால் போதும். இந்த 5 ஆயிரம் தொகையையும் நீங்கள் இந்த தொழில் வேண்டாம் என்று நிறுத்தும்போது உங்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுவிடும்.
வெறும் 5 ஆயிரம் மட்டுந்தான் முதலீடா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். நாம் இந்த தொழிலை புதிதாக செய்யும்பொழுது 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை முதலீடாக தேவைப்படும். ஏனென்றால் இடம், மின்சார செலவு, வேலையாட்களுக்கு சம்பளம், அலுவலகத்தை அமைப்பதற்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சாதனங்கள் இவை எல்லாம் நாம் தான் வாங்க வேண்டியதாக இருக்கும். ஆகவே 50,000/- முதல் 1,00,000/- வரை பணம் தேவைப்படும்.
இந்த தொழில் தொடங்க தேவைகள்:
- அலுவலகத்தை அமைக்க 200 முதல் 500 சதுர அடி கொண்ட இடம் இருக்க வேண்டும்.
- 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
- இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கம்ப்யூட்டர் இயக்குவதில் ஓரளவு திறன் இருக்க வேண்டும்.
இத்தகைய தகுதியுடைய யாரு வேண்டுமானாலும் இந்த Post Office Franchise Business எடுத்து நடத்தலாம்.
பயிற்சி ஏதாவது அளிக்கப்படுமா?
அஞ்சல் அலுவலகத்தை எப்படி நடத்தணும்ப்பு உங்களுக்கு தெரியாது அப்படி என்றாலும் ஒரு பிரச்னையும் இல்லை. ஏனென்றால் இந்த Franchise தொழிலை எடுத்து நடத்தும் நபர்களுக்கு அஞ்சல் துறை கண்டிப்பாக பயிற்சி அளிப்பார்கள். அந்த பயிற்சிகள் எது மாதிரி இருக்கும்னா..
- அடிப்படையாக இந்த போஸ்ட் ஆஃபீஸை எப்படி நடத்தணும்.
- வாடிக்கையாளர்களை எப்படி வழி நடத்த வேண்டும்.
- இவற்றில் வரக்கூடிய போஸ்டேல் மணியை எப்படி அனுப்ப வேண்டும்.
- கம்ப்யூட்டர் எப்படி ஆபரேட் பண்ணனும்.
போன்ற விஷயங்களை அஞ்சல் துறையே சொல்லிக்கொடுத்துவிடுவார்கள்.
லாபம்:
இந்த தொழில் பொறுத்தவரை கமிஷன் மூலமாக உங்களுக்கு வருமானம் கிடைக்கும். அதாவது அஞ்சல முகவராக வரும் தனிநபர்களுக்கு ஒரு பதிவு தபாலுக்கு மூன்று ரூபாய் கமிஷன் கிடைக்கும். அதேபோல் விரைவுத் தபால் புக் செய்தால் ரூ.5 கமிஷனும், மணிஆர்டர் செய்தால், ரூ.100-க்கு ரூ.3.50 கமிஷனும், ரூ.200-க்கு மேல் ரூ.5 கமிஷனும் கிடைக்கும். ஒரு மாதத்தில் 1000 பதிவுத் தபால் செய்துவிட்டால், 20% கமிஷன் அதிகமாக கிடைக்கும். மேலும் அஞ்சல் தலை, கவர்கள், கார்டுகள் ஆகிய பொருட்களை விற்பதன் மூலம் 5 சதவீதம் வரை கமிஷன் கிடைக்கும்.
மேலும் ரெவன்யூ ஸ்டாம்ப் விற்பனைக்கு 40% கமிஷன் தரப்படும். விரைவு பார்சல் ரூ.5 லட்சம் வரை புக் செய்தால் 10% கமிஷனும், பதிவுப் பார்சல் புக் செய்தால் 7% கமிஷனும் கிடைக்கும். ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.2.50 லட்சம் வரை ஸ்பீட் பார்சல் புக் செய்தால் 15 சதவீதம் கமிஷன் மற்றும் பதிவுத் தபால் புக் செய்தால், 10% கமிஷனும் கிடைக்கும். 25 லட்சம் ரூபாய்க்கும் மேல் ரூ.ஒரு கோடி வரை ஸ்பீட் பார்சல் புக் செய்தால் 20% கமிஷன் கிடைக்கும். அதேபோல் ஒரு கோடி முதல் ரூ.5 கோடி வரை ஸ்பீட் பார்சலுக்கு 25% கமிஷனும், ரூ.5 கோடிக்கு மேல் விரைவு பார்சலுக்கு 30% கமிஷனும் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |