சிறுதொழில் – டி ஷர்ட் பிரிண்டிங் தொழில் நல்ல வருமானம்..!

Advertisement

டி ஷர்ட் பிரிண்டிங் தயாரிப்பு தொழில்

சிறு தொழில் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பெறக்கூடிய ஒரு சிறந்த சிறு தொழில் வாய்ப்பை பற்றித்தான் இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம், அது என்ன தொழில் என்று பார்த்தோமானால், அது தான் டி ஷர்ட் பிரிண்டிங் தொழில், இந்த சிறு தொழில் துவங்குவதற்கு அதிக முதலீடு ஒன்றும் தேவையில்லை, குறைந்த முதலீடு இருந்தாலே போதுமானது. இந்த சிறு தொழில் பொறுத்தவரை சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது என்பதால் தயக்கம் இல்லாமல் இந்த சிறு தொழிலை துவங்கலாம்.

இதையும் படிக்கவும்  —>  புதிதாக என்ன தொழில் செய்யலாம் சிறந்த சிறு தொழில்கள் 2019..!

 

சரி வாங்க டி ஷர்ட் பிரிண்டிங் தயாரிப்பு தொழில் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க…

சுயதொழில் – முதலீடு:

இயந்திரம் மற்றும் மூலப்பொருட்கள் வாங்குவதற்கு குறைந்தது 50,000/- வரை தேவைப்படும். எனவே 50,000/- இருந்தால் இந்த தொழிலை துவங்கலாம்.

சுயதொழில் – மூலப்பொருட்கள்:

டி ஷர்ட் பிரிண்டிங் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை முக்கிய மூல பொருட்களே டி ஷர்ட் தான், எனவே டி ஷர்ட்டை மொத்த விலையாக திருப்பூரில் வாங்கி கொள்ளலாம்.

குறிப்பாக திருப்பூரில் அனுப்புர்பாளையம் மற்றும் காதர்பேட் ஆகிய இடங்களில் டி சேர்ட் மிக குறைவாக கிடைக்கும்.

இதை தவிர்த்து டி ஷர்ட் பிரிண்டிங் தயாரிப்பு தொழிலுக்கு sublimation paper, sublimation ink ஆகியவை அவசியம் தேவை.

இதையும் படிக்கவும்  —> சுயதொழில் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு..!

சுயதொழில் – டி ஷர்ட் பிரிண்டிங் இயந்திரம்:

டி ஷர்ட் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை சாதாரண normal epson printer மிசின் இருந்தாலே போதுமானது.

சுயதொழில் – சந்தை வாய்ப்பு:

இந்த தயாரிப்பு தொழில் பொறுத்தவரை, பிரிண்ட் செய்த டி ஷர்ட்டை அதிகளவு சிறுவயதினார்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்க கூடியதாக இருப்பதால், நீங்கள் வீட்டில் இருந்த படியோ அல்லது சிறிய கடை வைத்தோ விற்பனை செய்யலாம், குறிப்பாக ஏதேனும் பிரபல நடிகர் நடித்த திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது, அப்பொழுது அந்த நடிகரின் படத்தை டி ஷர்ட்டில் பிரிண்ட் செய்து விற்பனை செய்யலாம்.

மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப டி ஷர்ட்டில் பிரிண்டிங் செய்து கொடுத்தாலும் நல்ல வருமானம் பார்க்க முடியும்.

சுயதொழில்- வருமானம்:

ஒரு பிரிண்ட் செய்த டி ஷர்ட்டின் விலை ரூபாய் 70 என்று வைத்து கொண்டால் 500 டி ஷர்ட்டை விற்பனை செய்தால் 35,000/-க்கு விற்பனை ஆகும். இதர செலவுகள் போக ஒரு ஆடரின் போது நாம் 28,000/- வரை சம்மதிக்க முடியும்.

இதையும் படிக்கவும்  —> கைதொழில் – பைக் சீட் கவர் தயாரிப்பு !!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement