பெண்களுக்கு ஏற்ற தொழில் இட்லி மாவு வியாபாரம்..!

இட்லி மாவு வியாபாரம்

பெண்களுக்கு ஏற்ற தொழில் இட்லி மாவு வியாபாரம் (idli maavu business in tamil)..!

இட்லி மாவு வியாபாரம் (idli maavu business in tamil) – தென்னிந்தியாவில் இட்லி மற்றும் தோசை என்பது அனைத்து வயதினரும் விரும்பி உண்ண கூடிய ஒரு உணவு பொருளாக உள்ளது. ஆனால் இந்த இட்லி மாவு தயாரிக்க சரியான அளவில் அரிசியுடன் உளுந்து சேர்த்து கிரைண்டரில் ஆட்ட வேண்டும். மேலும் அலுவலகம் செல்லும் குடும்ப பெண்கள் தோசை, இட்லி மாவு தயாரிக்க போதிய நேரம் கிடைபதில்லை. இதனை எளிதாக்க இட்லி, தோசை மாவு பாக்கெட் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதனை தற்போது இயந்திரங்களை கொண்டு அதிகளவில் தயாரிக்கலாம்.

newபெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்..!

பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய ஒரு அருமையான தொழில் இதுவே. இதற்கு அதிக முதலீடு தேவையில்லை. இருப்பினும் இந்த இட்லி மாவை அரைப்பதற்கு இயந்திரம் ஒன்று கட்டாயம் வாங்க வேண்டும். இயந்திரத்தை வாங்கிவிட்டால் போதும் தினமும் நல்ல வருமானத்தை பெறலாம். சரி வாங்க இட்லி மாவு தயாரிப்பு தொழில் எப்படி ஆரம்பிக்கலாம் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.

newகாயர் பித்து தயாரிப்பு தொழில் பற்றிய ஆலோசனை..!

இட்லி மாவு வியாபாரம் – கட்டிட அமைப்பு:

பத்துக்கு பத்து அளவு கொண்ட ஒரு சிறிய அறை இருந்தால் போதும் வீட்டில் இருந்தபடியே இந்த இட்லி மாவு தயாரிப்பு தொழிலை ஆரம்பித்துவிடலாம்.

இட்லி மாவு வியாபாரம் – மூலப்பொருட்கள்:

இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம், உப்பு, ஜவ்வரிசி மற்றும் தயாரித்த இட்லி மாவை பேக்கிங் செய்ய கவர் தேவைப்படும். அவ்வளவுதான் இதற்கான மூலப்பொருட்கள்.

இட்லி மாவு வியாபாரம் – இயந்திரம்:

ஆரம்பத்தில் சாதாணரமான கிரைண்டரில் இட்லி மாவு அரைத்து விற்பனை செய்யலாம். வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் போது Instant wet grinder ஒன்றை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். இந்த Instant wet grinder 20,000/- முதல் 35,000/- வரை ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் ஆடர் செய்து இந்த Instant wet grinder வாங்கிக்கொள்ளலாம்.

இட்லி மாவு வியாபாரம் – இட்லி மாவு தயாரிக்கும் முறை:

ஒரு கிலோ இட்லி அரிசிக்கு, 200 கிராம் உளுந்து, 100 கிராம் ஜவ்வரிசி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் எடுத்தது கொள்ள வேண்டும்.

இட்லி அரிசியை 2 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ள வேண்டும். பின் உளுந்தினை 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். வெந்தயம் மற்றும் ஜவ்வரிசியை தனித்தனியாக ஊறவைத்து கொள்ள வேண்டும்.

அரிசி 2 மணி நேரம் நன்கு ஊறிய பின்பு அதனுடன் ஜவ்வரிசியை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

அரிசியை மைபோல் அரைத்த பின்பு, உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

இப்பொழுது அரைத்த உளுந்து மாவு மற்றும் அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ஒரு கிலோ அரிசிக்கு 3 1/2 கிலோ இட்லி மாவு கிடைக்கும்.

newஅடக்க விலை ரூ.10, விற்பனை விலை ரூ.100 புதிய தொழில் வாய்ப்பு..!

இட்லி மாவு வியாபாரம் – முதலீடு செலவு:

  1. ஒரு கிலோ இட்லி அரிசியின் விலை ரூ.34
  2. 200 கிராம் உளுந்தின் விலை – ரூ.14
  3. 100 கிராம் ஜவ்வரிசி விலை – ரூ.8
  4. Airtight bag cover ஒன்றின் விலை ரூ.2
  5. இதர செலவுகள் – ரூ.6
  6. வெந்தயம் – ரூ.10

ஒரு கிலோ இட்லி அரிசிக்கு 3 1/2 கிலோ இட்லி மாவு கிடைக்கும் இவற்றை தயார் செய்ய மொத்தம் 74 ரூபாய் செலவாகும்.

இட்லி மாவு தொழில் – வருமானம்:-

ஒரு கிலோ இட்லி அரிசிக்கு 3 1/2 கிலோ இட்லி மாவு கிடைக்கும். ஒரு கிலோ இட்லி மாவினை ரூபாய் 45 விற்பனை செய்யலாம். மூன்று கிலோ மாவிற்கு கிட்டத்தட்ட 135 ரூபாய் வரை இலாபம் கிடைக்கும்.

இதேபோன்று ஒரு நாளைக்கு 30 பாக்கெட் மாவு வரை தயார் செய்து விற்பனை செய்தல் 3000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

இட்லி மாவு தொழில் – சந்தை வாய்ப்பு:-

உங்கள் ஏரியாவில் உள்ளவர்களிடம் ஆடர் பெற்று விற்பனை செய்யலாம். அதேபோல் உங்கள் ஊரில் உள்ள சிறிய பெட்டி கடைகளுக்கு சென்று அவர்களிடமும் விற்பனை செய்யலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil