இந்த சின்ன தொழில் தினமும் 3000 ரூபாய் லாபமா!!! ஆச்சரியமா இருக்கே!!!

Advertisement

இந்த சின்ன தொழில் தினமும் 3000 ரூபாய் லாபமா!!! ஆச்சரியமா இருக்கே!!! Idli Shop Business Plan in Tamil

குறைந்த முதலீட்டில் தினமும் வருமானம் தரக்கூடிய தொழிலை பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்றைய கால கட்டத்தில் நாம் ஏதாவது ஒரு தொழிலை சொந்தமாக செய்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். இதன் காரணமாக நிறையபேர் இப்பொழுது சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று விரும்புகின்றன. அந்த வகையில் இன்று நாம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரு அருமையான தொழிலை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அந்த தொழில் வேறு ஒன்றும் இல்லை ரோட்டோரங்களில் வைக்கப்படும் இட்லி ஷாப் பற்றி தான். இந்த தொழிலை ஆண்கள், பெண்கள் இருவருமே செய்யலாம். இதன் மூலம் தினமும் நல்ல வருமானத்தையும் பெறமுடியும். இந்த தொழிலை பற்றி குறைவாக நினைத்தவிடாதீர்கள், இந்த தொழிலை தொடக்கி கோடி கணக்கில் பணம் சம்பாரிப்பவர்களும் உண்டு.

பொதுவாக மக்கள் பலர் காலை மற்றும் இரவு நேரங்களில் ரோட்டோரங்களில் விற்பனை செய்யப்படும் இட்லி கடையில் தான் சாப்பிடுகின்றன இதற்கு முக்கிய காரணம் உணவு சுவையாக இருக்கும் மற்றும் விலையும் கம்மியாக இருக்கும். இந்த இரண்டு விஷயங்களுக்காக நிறைய மக்கள் ரோட்டோரங்களில் உள்ள உணவகங்களை தேர்வு செய்கின்றன. ஆக நீங்கள் இந்த தொழிலை ஆரம்பித்தால் தினமும் நன்றாக சம்பாதிக்கலாம். சரி வாங்க இந்த தொழில் குறித்த சில தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இட்லிக்கடை ஆரம்பிக்க தேவைப்படும் பொருட்கள்:

  • ஒரு தள்ளுவண்டி
  • 50 குழி உள்ள ஒரு இட்லி குண்டான்
  • ஸ்டவ் அடுப்பு
  • இரண்டு தோசைக்கல்
  • சட்னி, சாம்பார் இவற்றை வைத்துக்கொள்ள சின்ன சின்ன பாத்திரங்கள் மற்றும் கரண்டி
  • உணவு பரிமாறுவதற்கு பிளேட்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சிறு வயதில் கற்றது கடைசி வரை கைகொடுக்கும்..? நல்ல வருமானம் தரும்..!

எங்கெல்லாம் கடையை ஆரம்பிக்கலாம்:

மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களான பேருந்து நிலையம், இரயில் நிலையம் பக்கத்தில், ஆண்கள் பெண்கள் அதிகம் கூடி இருக்கும் இடம், கூலிவேலைக்கு அதிகமாக செல்பவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகளுக்கு பக்கத்தில், பார்க், பீஜ் போன்ற இடங்களில் இந்த கடையை ஆரம்பித்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

மூலப்பொருள்:

இட்லி மாவு, தோசை மாவு, சட்னி மற்றும் சாம்பார் செய்வதற்கு காய்கறிகள் இந்த பொருட்கள் தினமும் தேவைப்படும். இது தவிர வடை, போண்டா, பஜ்ஜி, பணியாரம் இது எல்லாம் செய்வதாக இருந்தால் அதற்கான பொருட்களையும் தினமும் வாங்க வேண்டியதாக இருக்கும்.

எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

உதாரணத்திற்கு:

  • ஒரு இட்லியின் விலை – 5 ரூபாய்
  • ஒரு தோசை – 25 ரூபாய்
  • ஆம்லெட் – 10 ரூபாய்
  • பணியாரம் – 5 ரூபாய்

தோராயமாக தினமும் 100 வாடிக்கையாளர்கள் இரண்டு இட்லி மற்றும் ஒரு தோசை சாப்பிடுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அப்படியேறினால் ஒரு நபருக்கு 35 ரூபாய் ஆகும்.

100 நபருக்கு எவ்வளவு ரூபாய் வரும் என்றால் 100×35=3500, அதனுடன் 100ஆம்லெட்  மற்றும் 100 பணியாரம் விற்பனையாகிறது என்று வைத்துக்கொள்வோம். ஆம்லெட் 100×10=1000, பணியாரம் 100×5=500. ஆக நமக்கு மொத்த வருமானம் என்று பார்க்கும் போது 4500 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இவற்றில் செலவுகள் தினமும் 1500 ரூபாய் போக உங்களுக்கு 3000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சொல்லி கொடுத்தால் போதும்.. அளவில்லாமல் சம்பாதிக்கலாம்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement