Instant Parotta Making Business in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே அதிக அளவு பணம் சம்பாதித்து தங்களின் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக அனைவருமே ஏதாவது வேலை, வியாபாரம் மற்றும் சுயதொழிலை தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். ஆனால் என்ன சுய தொழிலை துவங்கினால் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதில் தான் அனைவருக்குமே குழப்பமும் பல கேள்விகளும் ஏற்படும். அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான மற்றும் அதிக லாபம் தரக்கூடிய சுயதொழில்கள் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன சுயதொழில் என்றால் Instant பரோட்டா தயாரித்து விற்பனை செய்யும் தொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள சுய தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Instant Parotta Making Business Plan in Tamil:
இந்த உலகில் உள்ள ஒரு சில தொழில்களுக்கு அழிவே ஏற்படாது அப்படிப்பட்ட ஒரு தொழில் உணவுப்பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில். இந்த உணவுப்பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு எப்பொழுதும் டிமாண்ட் அதிகம்.
அதிலும் குறிப்பாக பரோட்டா என்பது நாம் அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒரு உணவு ஆகும். அதனால் நீங்கள் இந்த Instant பரோட்டா தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை துவங்கினீர்கள் என்றால் அதிக அளவு லாபம் கிடைக்கும்.
தேவையான மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் மைதா மாவு, உப்பு, எண்ணெய், முட்டை, தண்ணீர், Parotta Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.
தேவையான முதலீடு:
தோராயமாக 1 கிலோ மைதா மாவின் விலை 55 ரூபாய், தோராயமாக 1 கிலோ உப்பின் விலை 18 ரூபாய், 1 லிட்டர் எண்ணெயின் விலை 167 ரூபாய், 1 முட்டையின் விலை 5 ரூபாய் முதல் 10 ரூபாய், Parotta Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை தோராயமாக 65,000 ரூபாய் ஆகும்.
அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும்.
தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:
இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்று வைத்திருக்க வேண்டும்.
அதே போல் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Instant பரோட்டாவை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 100 sq.ft இடம் இருந்தால் மட்டுமே போதும்.
1 கல்லுல எத்தனை மாங்காய் சாப்பிடலாம் தெரியுமா லட்சத்தில் சம்பாரிக்கும் தொழில் இது
தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் வாங்கி வைத்துள்ள மைதா மாவு, உப்பு எண்ணெய், முட்டை மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு பரோட்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை Parotta Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து விட்டு மிஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான பரோட்டாவை தயாரித்து தந்து விடும்.
பிறகு அதனை Packing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்யும் முறை:
நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Instant பரோட்டாவை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகங்கள் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம். அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் செய்யலாம்.
வாரம் 2,00,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்
வருமானம்:
தோராயமாக 1 கிலோ Instant பரோட்டாவின் விலை 220 ரூபாய் முதல் 300 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால் நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 20 கிலோ Instant பரோட்டாவை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4,400 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
தோராயமாக ஒரு மாதத்திற்கு 1,32,000 ரூபாய் முதல் 1,80,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த Instant பரோட்டா தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
ஒரே ஒரு லிட்டர் தயாரித்தாலே போதும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |