எக்காலத்திலும் கைவிடாத ஒரே தொழில்..! வீட்டிலிருந்தே தினமும் 1000 ரூபாய்க்கு மேல் லாபம் பார்க்கலாம்..!

Advertisement

Kadalai Mittai Making Business in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய நிலையில் பலரும் படித்து முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல படித்தவர்களாக இருந்தாலும் சரி படிக்காதவர்களாக இருந்தாலும் சரி சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தினமும் இந்த பதிவின் வாயிலாக சிறந்த வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கூறும் வணிக யோசனையும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முதலீடு:

இந்த தொழில் செய்வதற்கு முதலீடு அதிகமாக தேவைப்படாது. உங்கள் கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்தாலே போதும். தினமும் கைநிறைய லாபம் பார்க்கலாம்.

இடவசதி:

இந்த தொழில் தொடங்குவதற்கு உங்கள் வீடே போதுமானது. நீங்கள் வீட்டில் இருந்தே இந்த தொழிலை செய்து தினமும் ஒரு நல்ல வருமானத்தை பெறலாம். இல்லையென்றால் ஒரு சிறிய கடையாக கூட தொடங்கலாம். ஆனால் அது சொந்த கடையாக இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும்.

தினமும் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழிலை தொடங்குங்கள்

 

அப்படி என்ன தொழில் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அது வேறவொன்றும் இல்லை கடலைமிட்டாய் வீட்டிலேயே தயார் செய்து அதை விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் கூறுகிறேன்.

நாம் அன்றாடம் உண்ணும் மிட்டாய் வகைகளில் ஆரோக்கியமும் அதிக சத்துக்களும் நிறைந்த மிட்டாய் என்றால் அது கடலை மிட்டாய் தான். ஆனால் இன்றைய நிலையில் கடலை மிட்டாய் கூட கலப்படம் செய்யப்படுகிறது.

அதனால் நாம் இந்த கடலை மிட்டாயை ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்யலாம். இதை மக்கள் கட்டாயம் வாங்குவார்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 1,000 ரூபாய் முதலீட்டில் தினமும் 2,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் இந்த தொழிலை மிஸ் பண்ணிடாதீங்க

கடலைமிட்டாய் செய்முறை:

கடலைமிட்டாய் செய்முறை

முதலில் விற்பனை செய்வதற்கு தேவையான அளவு நிலக்கடலையை வாங்கி கொள்ள வேண்டும். பின் அதை ஒரு கடாயில் போட்டு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பின் நிலக்கடலையை இரண்டு பாதியாக உடைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 கப் அளவிற்கு வெல்லம் சேர்த்து கொள்ளவேண்டும். பின் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும்.

பாகு ஒரு பதத்திற்கு வந்ததும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள கடலையை போட்டு கலந்து விட வேண்டும். அடுத்து ஒரு தட்டில் நெய் தடவி அதில் இதை ஊற்றி சமப்படுத்தி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அவ்வளவு தான் கடலை மிட்டாய் தயார்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> என்றுமே அழிவில்லாத இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்

விற்பனை செய்யும் முறை:

விற்பனை செய்யும் முறை

இந்த கடலை மிட்டாயை நீங்கள் விற்பனை செய்வதற்கு FSSAI உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பின் இந்த கடலை மிட்டாயை பேக் செய்து உங்கள் பகுதியில் இருக்கும் பெட்டிக் கடைகள், சூப்பர் மார்க்கெட், மளிகை கடை போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். இது வீட்டிலேயே இயற்கையான முறையில் கலப்படம் இல்லாமல் செய்தது என்பதால் மக்கள் கட்டாயம் வாங்குவார்கள்.

அதேபோல ஆன்லைனில் கடலை மிட்டாய் 1 கிலோ கிராம் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் வீட்டிலிருந்தே செய்து தினமும் கைநிறைய சம்பாதியுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வருடம் முழுவதும் லட்ச கணக்கில் சம்பாதிக்ககூடிய அருமையான தொழில்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement