Best Business Ideas 2023
ஹலோ நண்பர்களே..! இன்றைய நிலையில் பலரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். என்ன தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று தெரிந்து கொண்ட பின் தொழிலை தொடங்குவது நல்லது.
அந்த வகையில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் தினமும் இந்த பதிவில் சிறந்த வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கூறும் வணிக யோசனையும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அது என்ன தொழில், அதற்கு முதலீடு எவ்வளவு என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முதலீடு:
இந்த தொழில் செய்வதற்கு பெரியதாக முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த தொழில் தொடங்குவதற்கு முதலீடே தேவைப்படாது.
எங்கு தொடங்கலாம்:
இந்த தொழிலை நீங்கள் கடையில் தான் தொடங்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். இந்த தொழில் தொடங்குவதற்கு உங்கள் வீடே போதும். வீட்டில் இருந்து கொண்டே இந்த தொழிலை செய்து தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்.
அப்படி என்ன தொழில் என்று கேட்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை நாம் தொடங்கும் தொழிலுக்கு மூலப்பொருள் குப்பைமேனி இலை தான்.
இந்த மர தண்டை மட்டும் வைத்து மாதம் 1,50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாமா இத்தனை நாளா இது தெரியமா போச்சே |
தெரு ஓரங்களில் காணப்படும் இந்த இலை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் இது அழகுசாதன பொருள்களில் சருமத்தை பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக தொடங்கலாம். இதனால் நல்ல லாபம் கிடைக்கும்.
Kuppaimeni Powder Making Business in Tamil:
முதலில் இந்த இலைகளை பறித்து வந்து சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும். பின் அதை ஒரு துணியில் வைத்து உலர வைக்க வேண்டும். இந்த இலைகளை 2 நாட்கள் வரை நிழலில் காயவைக்க வேண்டும்.
2 நாட்கள் கழித்து இந்த இலையை மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் இந்த பவுடரை கண்கவரும் பாக்கெட் கவர்களில் வைத்து பேக்கிங் செய்ய வேண்டும். அதில் உங்கள் முகவரிகளை அச்சிட வேண்டும். அப்போது தான் மக்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> தூக்கி போடுகின்ற பொருளை பயன்படுத்தி வாரம் 40,000 ரூபாய் வரை லாபம் தரக்கூடிய தொழில்
விற்பனை செய்யும் முறை:
இந்த குப்பைமேனி இலையின் பவுடர் சரும நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. உடல் எடையை குறைக்க, வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற என்று பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
அதனால் இந்த பவுடரை இந்த மக்கள் கட்டாயம் வாங்குவார்கள். அதனால் இந்த பவுடரை உங்கள் பகுதியில் இருக்கும் அழகு நிலையங்கள், நாட்டு மருந்து கடை, மெடிக்கல் ஷாப் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.
மேலும் இந்த குப்பைமேனி இலை ஆன்லைனில் 1 கிலோ 649 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இந்த பவுடரை உங்களுக்கென்று ஒரு வலைத்தளம் ஆரம்பித்து ஆன்லைனிலும் விற்பனை செய்யலாம்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> தொழில் தொடங்கி 15 நாட்களிலேயே 16,00,000 ரூபாய் வரை வருமானம் தரும் அட்டகாசமான தொழில் இதாங்க
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |