High Profit Business Ideas in Tamil
சொந்தமாக சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் என்பது இன்றைய காலத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் என பலருடைய ஒரு கனவாகவும் மற்றும் ஆசையாகவும் உள்ளது. அப்படிப்பட்ட கனவினை நிறைவேற்ற வேண்டும் என்று பலரும் அதற்கான முயற்சியை செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு இன்னமும் என்ன தொழில் செய்வது என்று தெரியாமலே உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தினையே கைவிட்டு விடுகின்றனர். அதனால் தான் நம்முடைய பதிவில் தினமும் பயனுள்ள சில தொழில்களை பற்றி கூறிவருகின்றோம். அந்த வகையில் இன்றும் கைநிறைய வருமானம் மற்றும் லாபம் தரக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அது என்ன தொழில் எப்படி அதனை செய்வது போன்ற அனைத்தினையும் தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
நல்ல வருமானம் தரும் தொழில்:
- இந்த காலத்தை பொறுத்தவரை பெரும்பாலும் யாரும் வீட்டில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது இல்லை. அதற்கு பதிலாக பெரும்பாலும் கடையில் தான் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றோம்.
- அந்த வகையில் இன்று அதிக ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய முளைகட்டிய பாசிப்பயிறு தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகையால் இந்த தொழிலை மட்டும் செய்தால் போதும் வெறும் 2 மணி நேரத்தில் கைநிறைய லாபம் பார்க்கலாம்.
எவ்வளவு முதலீடு தேவை:
இத்தகைய தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 5,000 ரூபாய் இருந்தாலே போதுமானது.
எவ்வளவு மூலப்பொருள் தேவை:
- பாசிப்பயிறு
- தள்ளுவண்டி
- பிளாஸ்டிக் அல்லது சில்வர் பிளேட்
- பேக்கிங் கவர்
உங்களிடம் தள்ளு வண்டி சொந்தமாக இல்லை என்றால் அதனை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.
எவ்வளவு இடம் தேவை:
இந்த தொழிலை தொடங்குவதற்கு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் ஒரு பகுதி மட்டுமே இருந்தால் போதும்.
இதையும் படியுங்கள்⇒ மாதம் 2,00,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை செய்வதற்கு முதலீடு வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்..
எப்படி தொழிலை தொடங்குவது:
- முதல் நாள் இரவு ஒரு 15 கிலோ அளவிற்கு பாசிபயிரினை நன்றாக தண்ணீர் ஊற வைத்து விட வேண்டும். அதன் பின்பு மறுநாள் இரவு அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு காட்டன் துணியில் காற்று புகாத அளவிற்கு நன்றாக கட்டி விட வேண்டும்.
- இவ்வாறு செய்து பிறகு மறுநாள் காலையில் பார்த்தால் பாசிப்பயிறு தயார் ஆகிவிடும். தயார் செய்து வைத்துள்ள முளைகட்டிய பாசிப்பயிரை 100 கிராம், 200 கிராம் மற்றும் 1/2 கிலோ என பேக்கிங் செய்து வைத்து கொள்ளுங்கள்.
- அதன் பின்பு நீங்கள் தள்ளு வண்டி கடையினை காலையில் நடைப்பயிற்சி செய்யும் இடம், டீ ஸ்டால், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாப் என அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யலாம்.
- அதுமட்டும் இல்லாமல் Department ஸ்டோரிலும் விற்பனை செய்யலாம்.
வருமானம்:
- நீங்கள் தயார் செய்து வைத்துள்ள பயிரின் விலை 1/2 கிலோ 55 ரூபாய் என்றும், 100 கிராம் 11 ரூபாய் என்றும் 200 கிராம் 22 ரூபாய் என்றும் தோராயமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- அப்படி என்றால் ஒரு நாளைக்கு தோராயமாக மூன்று பாக்கெட்டுகளிலும் 20 பாக்கெட் விற்பனை செய்தால் தோராயமாக 1760 ரூபாய் 2 மணிநேரத்தில் சம்பாதித்து விடலாம்.
இதையும் படியுங்கள்⇒ கையில் இருக்கும் காசை முதலீடு செய்தால் அதனுடன் வட்டியும் கிடைக்கும் நல்ல வருமானமும் கிடைக்கும்..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |