லோக்கல் சேனல் ஆரம்பிப்பது எப்படி ..? | Local Tv Channel Opening Procedure in Tamil

Local Tv Channel Opening Procedure in Tamil

லோக்கல் சேனல் தமிழ் ஆரம்பிப்பது எப்படி  | How to Open a Local Tv Channel in Tamil 

அனைவருக்கும் வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் நிறைய வியாபாரம் பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அதனை படித்தறிந்திருப்பீர்கள். அந்த வகையில் இன்று லோக்கல் சேனல் ஆரம்பிப்பது பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. இன்று சினிமா துறையில் இருப்பவர்கள் அனைவரும் ஒரு சின்ன இடத்திலிருந்து அந்த இடத்திற்கு பயணித்திருப்பார்கள். அவர்களுக்கு தொடக்கமாக இருப்பது முதல் டிவி தான் அதில் வரும் சின்ன சேனலில் இருந்து அவர்கள் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்திருப்பார்கள். அந்த ஆரம்பத்தை தொடக்கத்தை ஆரம்பிக்க என்ன தேவை அதனை ஆரம்பிக்க தேவையான பொருட்களையும் பற்றி பார்ப்போம் வாங்க…!

லோக்கல் சேனல் ஆரம்பிப்பது எப்படி?

 • நாம் வீட்டில் இருக்கும் டிவியில் டிஜிட்டல் மூலமாகவும், கேபிள் மூலமாகவும் டிவி பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வீட்டிலும் இரண்டு விதமாக டிவி பார்த்துவருகிறோம். இதில் அரசாங்கம் இயக்கி வருவது அரசு கேபிள். இந்த அரசு கேபிள் அனைத்து மாவட்டங்களிலும் அதிகபட்சகமாக 5 1/2 கோடி மக்கள் இந்த அரசு கேபிளை பயன்படுத்தி வருகிறார்கள்.
லட்சத்தில் லாபத்தை அள்ளி தரும் இரும்பு சார்ந்த தொழில்கள்

லோக்கல் சேனல் ஆரம்பிக்க என்ன உரிமம் தேவை:

லோக்கல் சேனல் ஆரம்பிப்பது எப்படி

 • இந்த லோக்கல் சேனல் ஆரம்பிக்க முதலில் இரண்டு வித நெட்ஒர்க் மூலம் ஆரம்பிக்கலாம். அரசு கேபிள் டிவியில் லோக்கல் சேனல் ஆரம்பிக்க அனுமதி பெறமுடியும் அதனை நாம் டெண்டர் மூலம் மட்டுமே எடுக்கமுடியும்.
 • அரசு கேபிலில் லோக்கல் சேனல் ஆரம்பிக்க டெண்டர் மூலம் அனுமதி பெற்று அந்த டெண்டருக்கு மாதம் மாதம் பணத்தை செலுத்த வேண்டும்.
 • பிரைவேட் கேபிள் 15 நெட்ஒர்க் உள்ளது அவர்களை நேரில் சென்று பார்த்து இந்த  சேனலை பற்றி விவரித்து ஒரு இணைப்புக்கு 3 வீதம் கணக்கிடப்பட்டு அந்த பணத்தை வாங்கிக்கொள்வார்கள்.

லோக்கல் சேனல் ஆரம்பிப்பது எப்படி

 • அதாவது கேபிள் ஆப்பரேட்டர் 10,000 இணைப்பு வைத்துள்ளார் என்றால். அவரால் நம்முடைய லோக்கல் சேனல் இணைப்பு கொடுக்கமுடியும் என்றால் அவருக்கு மாதம் மாதம் 30,000/- ரூபாய் செலுத்த வேண்டும்.
 • இது தான் நாம் லோக்கல் சேனல் ஆரம்பிக்க முதல் நிலை.

லோக்கல் சேனல் ஆரம்பிக்க முதலீடு:

 • இதனை ஆரம்பிக்க தேவைப்படும் மென்பொருள்களை வாங்கிக்கொள்ளவும். அதனை வாங்குவதற்கு ஒரு லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்:

 • மென்பொருள்: Blackmagic அல்லது zboom pa  இது இரண்டு மென்பொருட்களின் ஏதோ ஒன்று மட்டும் வாங்கிக்கொள்ளலாம்.
 • Blackmagic Rs. 50,000/- அதனுடன், கம்ப்யூட்டர் Rs.50,000/- இரண்டும் 1 லட்சம் வரும்.
 • zboom pa இது மிகவும் முன்னிலையை அளிக்கும். இது கம்ப்யூட்டர் சேர்த்து வாங்குவதற்கு ஒரு இரண்டு லட்சம்  முதல் மூன்று லட்சம் வரை வரும்.
 • அதன் பின் இதை வைத்து லோக்கல் சேனல் தொடங்குவதற்கு இடம். இடம் கேபிள் இணைப்பு உள்ள இடத்திற்கு பக்கத்தில் இருப்பது நல்லது.
 • பக்கத்தில் இருந்தால் பணச்செலவுகள் குறைந்து இருக்கும். இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் உடனே பார்த்துக்கொள்ளலாம்.

How to Open a Local Tv Channel in Tamil 

 • இணைப்பை பைபர் (Fiber) இல்லையேற்றால் Air dish மூலம் இணைப்பு கொடுக்க முடியும்.
 • இந்த Fiber மூலம் இணைப்பு கொடுக்கும் பொழுது ஒரு மீட்டருக்கு 10 ரூபாய் வாங்குவார்கள். அதற்குடைய பொருட்கள் வாங்குவதற்கு Rs.10,000/- முதல் Rs.20,000/- வரை ஆகும்.

லோக்கல் சேனல் ஆரம்பிப்பது எப்படி

 

 • Air dish மூலம் வைத்தால் அதற்கு Rs.15,000/- முதல் Rs.20,000/- வரை தேவைப்படும்.
 • Usp with பேட்டரி (battery), நெட்  இணைப்பு (net connestion)
 • மொத்தமாக லோக்கல் சேனல் தொடங்குவதற்கு Rs.1,50,000/- முதல் Rs.4,00,000/- வரை தேவைப்படும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022