பகல் முழுவதும் வேலை பார்த்தால் கூட பெற முடியாத வருமானத்தை இந்த தொழிலில் வெறும் 2 மணி நேரத்தில் பெற்று விடலாம்..!

Advertisement

Hibiscus Flower Oil Business Plan in Tamil

நாம் தொழில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் முதலில் என்ன தொழில் செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அப்படி நாம் செய்யும் தொழிலானது ஒரு முறை மட்டும் வருமானம் தரக்கூடியதாக இல்லாமல் எப்போதும் வருமானம் தரக்கூடியதாக இருக்க  வேண்டும். அதிலும் குறிப்பாக ஒரு தொழில் செய்ய போகிறோம் என்றால் அந்த தொழிலை பற்றிய அடிப்படை தகவலையும் மற்றும் அதற்கு என்னென்ன மூலப்பொருட்கள் வேண்டும் என்பது பற்றியும் தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகையால் இதுபோன்ற அனைத்து தகவலுடன் கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

என்ன தொழில் செய்வது:

செம்பருத்தி பூ மரம் அனைவருடைய வீட்டிலும் இருக்கும். அத்தகைய மரத்தில் நமக்கு பயன் தரக்கூடிய எண்ணற்ற பயன்கள் இருப்பதால் அதனுடைய இலை முதல் பூ என அனைத்தினையும் நாம் உபயோகப்படுத்தி வருகின்றோம்.

 

ஆகையால் இன்று அதிக டிமாண்ட் உள்ள Hibiscus Flower Oil Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த தொழிலை பொறுத்தவரை அதிகமாக யாரும் செய்யவில்லை. அதனால் நீங்கள் இந்த தொழிலை செய்தால் வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் சேர்த்து பெறலாம்.

முதலீடு | மூலப்பொருள்:

நல்ல வருமானம் லாபம் தொழில்

  • செம்பருத்தி பூ
  • Automatic Oil Machine- ஆரம்ப விலை 60,000 ரூபாய்  
  • பாட்டில் அல்லது அல்லது கவர்

மேலே சொல்லப்பட்டுள்ள மூலப்பொருட்கள் அனைத்தினையும் வாங்குவதற்கு தோராயமாக முதலீடு என்று பார்த்தால் 62,000 ரூபாய் தேவைப்படும்.

மேலும் இந்த தொழிலை தொடங்குவதற்கு FSSAI லைசென்ஸ், GST registration, Trade லைசென்ஸ், மற்றும் Agmark Certificate போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

தொழில் தொடங்க தேவையான இடம்:

நீங்கள் இந்த Oil Making தொழிலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரு பெரிய அளவிலான இடம் மின்சார வசதியுடன் தேவைப்படும்.

இதையும் படியுங்கள்⇒ காலையில் 2 மணி நேரத்தில் தினமும் 2,000 ரூபாய் சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்.. 

How to Make Hibiscus Flower Oil:

 how to make hibiscus flower oil in tamil

முதலில் நீங்கள் ஒரு 5 கிலோ அளவிலான செம்பருத்தி பூக்களை வாங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த பூக்களில் இருக்கும் காம்பினை நீக்கி விட்டு அதனுடைய இதழ்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள பூக்களை 1 நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து கொள்ளுங்கள்.

நீங்கள் மிஷின் வாங்கும் இடத்திலேயே அந்த மிஷினை எப்படி Operate செய்வது என்ற முழு விளக்கமும் உங்களுக்கு தெளிவாக அளிக்கப்படும். ஆகையால் அதனை தெளிவாக கேட்டுக்கொண்டு காய வைத்துள்ள பூக்களை அதில் போட்டு ஆயில் தயாரித்து விடுங்கள்.

இவ்வாறு செய்தால் போதும் செம்பருத்தி பூ எண்ணெய் தயார் ஆகிவிடும்.

பேக்கிங் செய்தல்:

தயார் செய்து வைத்துள்ள எண்ணெயினை கவர் அல்லது பாட்டிலில் 100 மில்லி, 1/2 லிட்டர் மற்றும் 1 லிட்டர் என மூன்று விதமாக பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்ய வேண்டிய இடம்:

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள செம்பருத்தி பூ எண்ணெயினை Deparment ஸ்டோர், மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்து கடை, ஷாப்பிங் மால் ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ இப்படி ஒரு தொழிலா.  வீட்டிலிருந்தே 50000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாமா.  இது தெரியாம போச்சே.,

வருமானம்:

100 மில்லி செம்பருத்தி பூ எண்ணெயின் விலை தோராயமாக 299 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல 1 லிட்டரின் விலை 2990 என்றும் 1/2 லிட்டரின் விலை 1,495 ரூபாய் என்றும் தோராயமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆகவே ஒரு நாளைக்கு நீங்கள் 100 மில்லி, 1/ 2 லிட்டர் மற்றும் 1 லிட்டர் என மூன்றிலும் 5 பாக்கெட் விற்பனை செய்தால் தோராயமாக 23,920 ரூபாய் வருமானம் பெறலாம். அப்படி என்றால் ஒரு மாதத்திற்கு தோராயமாக 7,17,600 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement