ரூபாய் 300 முதலீட்டில் அதிக லாபத்தை தரும் சிறுதொழில்!

low investment business ideas in tamil

Low Investment High Profit Business Ideas in Tamil!

வணக்கம்! குறைந்த முதலீட்டில் ஏதாவது தொழிலை தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? என்ன தொழில் தொடங்குவது என்று தெரியவில்லை? உங்களுக்கு பயன்படும் வகையில் இப்பதிவில் பார்க்க இருப்பது குறைந்த முதலீட்டில் அதிக இலாபத்தினை கொடுக்கும் சோற்றுக்கற்றாழை ஜூஸ் தயாரிக்கும் அருமையான சிறு தொழிலை பற்றித்தான்! இத்தொழில் செய்ய ரூபாய் 300 முதலீடு செய்தால் போதும் தினசரி ரூபாய் 1500 வரை இலாபத்தினை பெற முடியும்! இந்த தொழிலை எவ்வாறு தொடங்குவது பற்றிய முழு விவரங்களை அடுத்து அடுத்து பக்கங்களில் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

முதலீடு:

இத்தொழில் தொடங்க ரூபாய் 300 முதலீடு செய்தால் போதும் தினசரி ரூபாய் 1500 வரை இலாபத்தினை பெற முடியும்.

மூல பொருள்:

75 கப் ஜூஸ் தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள்:

சோற்று கற்றாழை 1 கிலோ – விலை 200 

தயிர்(Curd) 2.5 லிட்டர் – விலை 125

12.5 லிட்டர் தண்ணீர் – விலை 15

உப்பு – விலை 15 

மொத்தம் = ரூபாய் 305

சோற்றுக்கற்றாழையினை ஆன்லைன் சந்தைகள் அல்லது  மொத்த விற்பனை (Whole sale) செய்ய கூடிய கடைகளில் மொத்தமாக வாங்கிக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ ரூபாய் 2,000 முதலீடு இருந்தால் மட்டும் போதும் பல மடங்கு லாபம் தரும் தொழில்..!

தொழிலை தொடங்குவது எப்படி?

முதலில் முற்றிய நல்ல ஆரோக்கியமான சோற்றுக்கற்றாழையினை  எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனை வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வெட்டிய இடத்தில் முதலில் மஞ்சள் நிற திரவம் போன்று வரும் அதனை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி விட வேண்டும். பிறகு இருபுறமும் உள்ள முள் போன்ற பகுதியினை சீவி எடுத்து விட வேண்டும்.

ஸ்பூன் மூலம் சோற்று கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஜூஸ் தயாரிக்க உதாரணமாக 200ml மோர் எடுத்துக்கொண்டால் 4 ஸ்பூன் சோற்று கற்றாழை ஜெல் போதுமானது.

1கிலோ சோற்று கற்றாழை ஜெல்லுக்கு 21/2 லிட்டர் தயாரானது தேவைப்படும்.மேற்படி 12 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். இதனை பயன்படுத்தி 15 லிட்டர் வரை ஜூஸ் தயார் செய்ய முடியும்.

1கிலோ சோற்று கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி தாராளமாக 75 கப் வரை ஜூஸ் தயார் செய்யலாம்.

இலாபம்:

1கப் ஜூஸினை ரூபாய் 20 வரை விற்பனை செய்யலாம்.

ஒரு நாளைக்கு 75கப் ஜூஸ் விற்பனை செய்தோம் என்றால் (75X20= 1500) ரூபாய் 1500 வரை இலாபத்தினை பெறலாம்.

தொழில் செய்யும் இடம்:

பேருந்து நிலையம், ரயில் நிலையம், மால், கல்லூரிகள், சூப்பர் மார்க்கெட் போன்ற மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் விற்பனை செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ சுயதொழில் என்ன செய்வது என்று யோசித்து கொண்டே இருக்காதீர்கள்..! இதோ உங்களுக்கான தொழில் இருக்கிறது..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil