அதிக லாபம் தரும் தொழில்
வணக்கம் நண்பர்களே..! அனைவருக்கும் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும். அந்த தொழில் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை தரக்கூடிய தொழிலாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்போது தான் தொழில் தொடங்குவதற்கு எளிதாக இருக்கும் என்பது அனைவரும் யோசிக்க கூடிய ஒன்று. உங்களுடைய யோசனைக்கு பயனளிக்கும் வகையில் இன்றைய வியாபாரம் பதிவானது இருக்கும். குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்தே தினமும் சம்பாதிப்பதற்கான தொழில் என்ன என்பதை பற்றி இன்றைய பதிவில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்:
இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களுக்கான முதலீடு என்பது 2,000 ரூபாய் ஆகும். இந்த தொழில் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை தரக்கூடிய சிறந்த தொழிலாக இருக்கிறது.
Green Chilli Powder Business in Tamil:
குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை தரக்கூடிய தொழில் Green Chilli Powder Business தொழிலாகும். இந்த தொழிலை தொடங்குவது எப்படி மற்றும் தொழில் தொடங்குவதற்கான பொருட்கள் என்னென்ன என்பது பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேவைப்படும் மூலப்பொருட்கள்:
Green Chilli Powder தொழிலை தொடங்குவதற்கு பச்சை மிளகாய் 3 கிலோ மற்றும் பவுடர் தயாரிப்பதற்காக Heat Sealing Machine இந்த இரண்டையும் முதலில் வாங்கி கொள்ளுங்கள். இந்த Machine விலை 800 ரூபாய் ஆகும். இத்தகைய Machine-னை Online கூட ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.
தேவைப்படும் இடம்:
இந்த தொழிலை தொடங்குவதற்கு என்று பெரிய இடம் தேவையில்லை. வீட்டில் 10×10 இடம் இருந்தால் போதும்.
தினசரி வருமானம் தரும் தொழில்:
இந்த தொழிலை தொடங்குவதற்கு நீங்கள் வாங்கிய பச்சை மிளகாயை தண்ணீரில் சுத்தமாக அலசி கழுவி விடுங்கள். அதன் பிறகு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வெயிலில் காய வைத்து விடுங்கள்.
பச்சை மிளகாய் வெயிலில் நன்றாக காய்ந்த பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பவுடராக அரைத்து கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் அரைத்து வைத்துள்ள பவுடரை சிறிது நேரம் காய வைத்து விடுங்கள். அதன் பிறகு பவுடரை Packing செய்ய தனியாக பாலித்தீன் கவர் வாங்கி கொள்ள வேண்டும்.
இப்போது நீங்கள் வாங்கிய அந்த கவரில் அரைத்த பச்சை மிளகாய் பவுடரை சேர்த்து Heat Sealing Machine பாக்கெட் போட்டு விடுங்கள்.
1 கிலோ பச்சை மிளகாய் பவுடர் தயார் செய்வதற்கு 3 கிலோ பச்சை மிளகாய் வாங்க வேண்டும். நீங்கள் ஒரு நாளைக்கு 1 கிலோ பச்சை மிளகாய் பவுடர் தயாரித்தால் அதனை 700 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். அப்படி என்றால் ஒரு வாரத்திற்கு 4900 ரூபாய் தோராயமாக சம்பாதிக்கலாம். நீங்கள் தயாரிக்கும் பவுடரின் அளவை பொறுத்து வருமானம் கிடைக்கும்.
இந்த பவுடரை கடைகள் மற்றும் ஹோட்டலில் நீங்கள் விற்பனை செய்யலாம். ஹோட்டல்களில் பெரும்பாலும் இந்த பவுடரை சாஸ் செய்ய பயன்படுத்து கின்றனர்.
இத்தகைய Green Chilli Powder தொழிலானது இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில் மிகவும் முக்கியமான தொழிலாகும்.
இதையும் படியுங்கள் => அதிகமான டிமாண்ட் உள்ள தொழில் யார் வேண்டுமானாலும் இந்த தொழிலை செய்யலாம். மாதம் 90, 000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |