வாரம் 1 லட்சம் வருமானம் தரும் தொழில்!!! வீட்டில் 10-க்கு 10 அளவு கொண்ட இடம் இருந்தால் போதும்.. Metal Shining Powder Repacking Business in Tamil
இன்றைய கால கட்டத்தில்.. நாம் சொந்தமாக ஒரு தொழிலை ஆரம்பித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். இந்த ஒரு காரணத்தினாலே பலர் சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணுகின்றன. இவ்வாறு நினைப்பவர்கள் சிலர் அதிக முதலீடு செய்து தொழில் தொடங்க வேண்டும் என்று விரும்புகின்றன. சிலர் குறித்த முதலீட்டு தொழிலாக இருந்தாலும் அதில் நல்ல வருமானம் வரக்கூடிய தொழிலாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றன. அவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இன்றைய பதிவு இருக்கும். குறைந்த முதலீடு மற்றும் அதிக முதலீடு ஆகிய இரண்டு வகையிலும் செய்ய கூடிய தொழில் வாய்ப்பை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன தொழில், எவ்வளவு முதலீடு தேவைப்படும், எவ்வளவு வருமானம் கிடைக்கும் போன்ற முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
என்ன தொழில்?
நாம் இன்று தெரிந்துகொள்ள இருக்கும் தொழில் என்னவென்றால் Metal Shining Powder தயாரிப்பு தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இதன் பவுடரை மொத்தமாக வாங்கி Repacking செய்து விற்பனை செய்யலாம் இதற்கு நமக்கு குறைந்த முதலீடு தான் ஆகும். இந்த மெட்டல் சைனிங் பவுடர் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்றால். அலுமினியம், இருப்பு, செம்பு, பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்களை பளிச்சென்று சுத்தம் செய்ய பயன்படுகிறது. இதன் காரணமாகவே சந்தையில் இந்த பவுடரும் அதிக வரவேற்பு உள்ளது. ஆக இந்த தொழிலை நீங்கள் ஆரம்பித்தால் நல்ல வருமானம் பெற முடியும்.
Metal Shining Powder Repacking Business in Tamil:
இந்த Metal Shining Powder-ஐ அமேசான், இந்தியமர்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் மொத்தமாக வாங்கி 100 கிராம், 200 கிராம், 250 கிராம், 500 கிராம் என்று பேக்கிங் செய்து கடைகளில் விற்பனை செய்யலாம்.
நீங்களே தயார் செய்து விற்பனை செய்வதாக இருந்தால் அதற்கான மூலப்பொருட்கள் China Clay, Sodium Meta Silicate, Sodium Carbonate, Citric மற்றும் கலர் பவுடர் தேவைப்படும்.
ஒரு கிலோ Metal Shining Powder மூலப்பொருட்களின் அளவு:
China Clay – 500 கிராம்
Sodium Meta Silicate 200 முதல் 250 கிராம் எடுத்துக்கொள்ளலாம்
Sodium Carbonate 200 கிராம்
Citric Acid – 50 கிராம்
கலர் பவுடர் – உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு கலர் 10 கிராம்
இந்த அளவில் தான் Metal Shining Powder தான் தயார் செய்ய வேண்டும். மேலும் இந்த தயாரிப்பு பற்றிய விவரங்களை சேகரித்து அதன்படியும் தயார் செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த தொழிலை இப்போதே ஆரம்பித்தால் எதிர்காலத்தில் நீங்கள் தான் Boss.. என்றும் கைகொடுக்கும் நிரந்தரமான தொழில்
முதலீடு:
Metal Shining Powder-ஐ Repacking செய்வதாக இருந்தால் மொத்த வியாபார சந்தையில் ஒரு கிலோ பவுடரை 35 ரூபாய்க்கு வாங்கினால், ஆரம்பத்தில் 200 கிலோ வாங்க வே வேண்டியதாக இருக்கும். ஆக 6600 ரூபாய்க்கு பவுடரை வாங்க வேண்டியதாக இருக்கும். பேக்கிங் செலவு 500 ரூபாய், போக்குவரத்து செலவு 500 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் 7600 ரூபாய் தான் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.
இவ்வாறு வாங்கிய பவுடரை நமது வீட்டிலேயே ஒரு சிறிய இடத்தில் வைத்து அங்கேயே பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
வருமானம்:
ஒரு கிலோ Metal Shining Powder சந்தையில் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நாம் வெறும் 500 ரூபாய்க்கு விற்பனை செய்தாலே போதும் நல்ல லாபம் பார்க்கமுடியும்.
ஒரு மாதத்திற்கு இந்த தொழில் மூலம் 1 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அவற்றில் 30 ஆயிரம் உற்பத்தி செலவு என்று வைத்துக்கொண்டால் 70 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
சந்தை வாய்ப்பு:
ஹோட்டல், ரெஸ்ட்ராண்ட், பாத்திரங்கள் வாடகைக்கு விடப்படும் கடை, பாத்திர கடை, மல்லிகை, சூப்பர் மார்க்கெட், டிபார்மண்ட் ஸ்டோர் மற்றும் ஆன்லைனில் நீங்கள் விற்பனை செய்ய முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாங்கும் விலை ரூ.20 ஆனால் விற்கும் விலை ரூ.700 அருமையான சுயதொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |