500 ரூபாய் முதலீடு போட்டால் போதும் தினமும் 2000 ரூபாய் வருமானம் தரக்கூடிய தொழில்..!

Advertisement

Milk Peda Business in Tamil

நம் அனைவருக்குமே ஏதோவொரு சுயதொழில் ஆரபித்து வெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி சுயதொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் என்ன தொழில் தொடங்கலாம்..? எப்படி தொடங்குவது..? போன்ற சந்தேகங்கள் இருக்கும். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம்.காம் பதிவில் தினமும் சுயதொழில் பற்றிய விவரங்ளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வெறும் 500 ரூபாய் முதலீட்டில் தினமும் 2000 ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய தொழில் ஒன்றை விவரித்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.

அனைவருக்கும் பிடித்த பொருளான மில்க் பீடா பிசினெஸ் பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, சின்ன சின்ன பெட்டி கடை போன்ற இடங்களில் விற்பனை செய்ய கூடிய இந்த மில்க் பீடாவை நீங்கள் தயாரித்து விற்பனை செய்தால் நாள் லாபம் பெறலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Milk Peda Business in Tamil:

இத்தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள்:

  • மில்க் பேடா மாவு
  • பேடா தயாரிப்பு மெஷின்
  • பிளாஸ்டிக் கண்டெய்னர் 

இந்த Peda Maker Machine ஆன்லைனில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கிறது.

வெறும் 3000 ரூபாய் முதலீடு போட்டால் போதும் மாதம் 50,000 ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய அருமையான தொழில்..!

தேவையான இடம்:

இந்த தொழிலை செய்வதற்கு பெரிதாக இடம் தேவையில்லை. வீட்டில் உள்ள சிறிய இடமே இத்தொழிலுக்கு போதுமானது.

மில்க் பேடா தயாரிக்கும் முறை:

முதலில் மில்க் பேடா மாவினை எடுத்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளுங்கள்.

பிறகு இந்த உருண்டைகளை எடுத்து பேடா மேக்கர் மெஷினில் வைத்து கைகளால் அழுத்தி எடுத்தீர்கள் என்றால் மில்க் பேடா தயார்.

Peda Maker Machine– ஐ பயன்படுத்தி பத்து நிமிடத்திற்கு 25 முதல் 30 பேடாக்கள் வரை தயாரிக்கலாம். எனவே ஒரு நாளைக்கு 1,500 பேடாக்கள் முதல் 1,800 பேடாக்கள் வரை தயார் செய்யலாம்.

பேக்கிங் செய்யும் முறை:

இப்போது தயார் செய்து வைத்துள்ள மில்க் பேடாவினை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு தேவையான அளவுகளில் 100 மில்க் பேடா, 50 மில்க் பேடா போன்ற அளவுகளில் பிளாஸ்டிக் டப்பாவில் பேக் செய்து கொள்ளுங்கள்.

50 மில்க் பேடா உள்ள டப்பாவை 200 ரூபாய்க்கும், 100 மில்க் பேடா உள்ள டப்பாவை 400 ரூபாய்க்கும் தோராயமாக விற்பனை செய்யலாம்.

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

விற்பனை செய்யும் இடங்கள்:

உங்கள் வீட்டு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், டீ கடைகள், சின்ன சின்ன பெட்டி கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.

ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

 ஒரு நாளைக்கு 1000 மில்க் பேடாவை விற்பனை செய்தால் தோராயமாக 4000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதில் உங்களுடைய செலவுகள் போக குறைந்தபட்சம் 2000 ரூபாய் வரை லாபம் பெறலாம். 
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement