Milk Shop Business Ideas in Tamil
சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அனைவருமே நினைக்கிறார்கள். ஆனால் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும். என்ன தொழில் செய்வது, அதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், இதை எங்கு தொடங்கலாம் என்று பல கேள்விகள் இருக்கும். உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக தினமும் ஒரு வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று என்ன தொழில் தொடங்குவது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Milk Shop Business Ideas in Tamil:
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாரளமாக தொடங்கலாம். அப்படி என்ன தொழில் என்று யோசிப்பீர்கள். அது வேறுவொன்றும் இல்லை பால் விற்பனை தொழிலை பற்றி தான் கூறுகின்றோம்.
அனைவருமே காலையில் எழுந்ததும் தேடுவது டீ, காபியை தான். அதற்கு பால் தான் முக்கியம். அதுபோல நாம் வாழும் இந்த அவசர உலகில் மக்கள் அனைவருமே பாக்கெட் பால் வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதனால் நீங்கள் இந்த பால் பாக்கெட் வணிக தொழிலை தொடங்கலாம். இதனால் உங்களுக்கு தினமும் ஒரு நல்ல வருமானம் கிடைக்கும்.
முதலில் பால் விற்பனை செய்யும் நிறுவனத்திடம் இருந்து டீலர்ஷிப் பெற வேண்டும். பிறகு உங்களுக்கென்று ஒரு கடையை திறந்து பால் விற்பனை தொழிலை தொடங்கலாம்.
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம் |
இடம்:
இந்த தொழில் தொடங்குவதற்கு சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ ஒரு கடை இருக்க வேண்டும். அல்லது உங்கள் வீட்டிலேயே கடை வைத்து நடத்தும் அளவிற்கு இடம் இருந்தாலும் இந்த தொழிலை தொடங்கலாம்.
மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கடை மக்கள் அதிகம் வரும் பகுதியாக இருக்க வேண்டும். அதுபோல மக்கள் விரைவாக அணுகக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும்.
நீங்கள் கலக்க கலக்க காசு வந்துகிட்டே இருக்கும் இந்த தொழிலை சும்மா செஞ்சுப்பாருங்க..! |
முதலீடு:
இந்த தொழில் தொடங்குவதற்கு 1 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். இந்த முதலீடு கடை வாடகை மற்றும் மற்ற செலவுகளை பொறுத்து மாறுபடும்.
அதுபோல நீங்கள் உங்கள் கடைக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டு மற்ற கடைகளுக்கும் பால் பாக்கெட் விற்பனை செய்து அதன் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம்.
அதுபோல டோர் டெலிவரியும் செய்து நல்ல வருமானத்தையும் பெறலாம். இன்றைய நிலையில் அனைவருமே பாக்கெட் பால் பயன்படுத்தி வருவதால் நீங்கள் இந்த தொழிலை தொடங்கி நல்ல லாபாத்தை பெறுங்கள். பால்
முதலீடே செய்யாமல் இந்த தொழில்களை செய்வதற்கு சரியான நேரம் இது தான் தவற விடாதீர்கள்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |