தினமும் 4 மணி நேரம் வேலை! மாதம் 1 லட்சம் வருமானம்.. வீட்டில் இருந்து செய்யக்கூடிய தொழில்..!

Advertisement

தினமும் 4 மணி நேரம் வேலை! மாதம் 1 லட்சம் வருமானம்.. வீட்டில் இருந்து செய்யக்கூடிய தொழில்..! Millet Noodles Business in Tamil..!

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் வணக்கம்.. இன்று நாம் வீட்டில் இருந்து செய்யக்கூடிய ஒரு சுயதொழில் பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று தான் நூடுல்ஸ். இருப்பினும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு இந்த நூடுல்ஸை பரிந்துரைப்பதில்லை. காரணம் அது உடலுக்கு தீங்கானது என்பதினால். ஆனால் ஆரோக்கியமான உணவுகளை யாரும் தவிர்க்க மாட்டார்கள். அந்த வகையில் நீங்கள் இயற்கையன முறையில் சிறுதானியங்களில் நூடுல்ஸ் தயார் செய்து விற்பனை செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும். சரி இந்த தொழில் தொடங்க எவ்வளவு முதலீடு தேவைப்படும், எங்கு இந்த தொழிலை தொடங்கலாம், எவ்வளவு வருமானம் கிடைக்கும் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இடம்:

இந்த தொழிலை நீங்கள் ஆரம்பத்தில் வீட்டில் இருந்தபடியே செய்யலாம், உங்கள் தொழில் நன்கு வளர்ச்சிபெற்ற பிறகு தனியாக இடம் அமைத்து தொழிலை தொடங்கலாம்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:

சிறுதானியங்கள், Millet Noodles Making Machine, Packing Machine, பேக்கிங் கவர் இவை அனைத்தும் தேவைப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடையை வைத்து நீங்கள் மிக்சியில் மட்டும் பொருட்களை போட்டு அரைத்து கொடுத்தால் போதும் வருமானம் சும்மா அள்ளும்..!

இயந்திரம்:

Millet Noodles Making Machine விலை பொறுத்தவரை அதனுடைய மடலுக்கு ஏற்றது போல் விலை நிலவரம் மாறுபடும்.

தயாரிக்கும் முறை – Millet Noodles Business in Tamil:Millet Noodles

சிறு தானியங்களை சுத்தமாக கழுவி வெயிலில் காயவைத்து, பிறகு மிஷினில் கொடுத்து அரைத்து, பிறகு இயந்திரத்திலில் மாவை வைப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த மாவை வைத்து, இயந்திரத்தை இயக்கினால் நூடுல்ஸ் தயாராகிவிடும். பிறகு தயார் செய்த நூடல்ஸை பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பவும்.

சந்தை வாய்ப்பு:

நாம் தயார் செய்த சிறுதானிய நூடுல்ஸை மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், டிபார்மண்ட் ஸ்டோர், ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

தோராயமாக ஒரு கிலோ சிறுதானிய நூடுல்ஸ கடைகளில் 400 ரூபாயில் இருந்து 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளுக்கு 10 கிலோ சிறுதானிய நூடுல்ஸை விற்பனை செய்யப்போறீங்க அப்படின்னா, ஒரு நாளுக்கு 4000/- முதல் 4500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு 1 லட்சத்திற்கு மேல் கூட சம்பாரிக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி வரும் காலங்களில் இது தான் தொழிலாக இருக்கும்..! இனிதே தொடங்கி லாபத்தை பெறுங்கள்..!

தேவைப்படும் சான்றிதழ்:

எந்த ஒரு உணவு சார்ந்த தொழில் செய்வதாக இருந்தாலும் அதற்கு நீங்கள் FSSAI சான்றிதழை பெற வேண்டும்.

ஆன்லைனில் விற்பனை செய்யப்போறீங்க அப்படின்னா GST Registration செய்திருக்க வேண்டும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement