Millet Noodles Making Business in Tamil
இன்றைய சூழலில் அனைவருமே சுயதொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டுள்ளார்கள். அப்படி நீங்களும் ஏதாவது ஒரு சுயதொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வமும் ஆசையும் கொண்டுள்ளீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழில் பற்றி பார்த்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சிறுதானிய Noodles தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்கள் வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Millet Noodles Making Business Plan in Tamil:
இன்றைய சூழலில் அனைவருமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதனால் நீங்கள் இந்த சிறுதானிய Noodles தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் உடனடியாக இந்த சிறுதானிய Noodles தயாரிக்கும் தொழிலை ஆரம்பியுங்கள்.
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த சிறுதானிய Noodles தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் சிறுதானியம், Millet Noodles Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.
இந்த Millet Noodles Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> எப்போதும் வருமானம் தருகின்ற ஒரே தொழில் இதை மட்டும் தொடங்கி பாருங்கள்..!
இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Millet Noodles-யை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் மட்டும் போதுமானது. நீங்கள் பெரிய அளவில் இந்த தொழிலை தொடங்க இருக்கின்றீர்கள் என்றால் கொஞ்சம் பெரிய நல்ல தூய்மையான இடம் இருந்தால் போதும்.
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள சிறுதானியத்தை நன்கு சுத்தம் செய்து விட்டு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து சலித்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை Millet Noodles Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே Noodles-யை தயாரித்து தந்து விடும்.
பின்னர் அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:
நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Millet Noodles-களை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட்டுகள் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.
அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ Millet Noodles-ன் விலை 400 ரூபாய் – 450 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ Millet Noodles-னை விற்பனை செய்கிறீர்கள் என்று வைத்து கொண்டால் 4,000 – 4,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
ஒரு மாதத்திற்கு 1,20,000 – 1,35,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த Millet Noodles தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> எவ்வளோ நாளைக்கு தான் ஒரே தொழிலை செய்வீங்க கொஞ்சம் Different-ஆ இந்த தொழிலை செய்து பாருங்க..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |