How to Start Mineral Water Business in India
சுயமாக தொழில் செய்ய வேண்டும் பெரும்பாலானவர்கள் ஆசைப்படுகிறார்கள். சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் மட்டும் போதாது, அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும். எந்த தொழில் செய்தால் Demand இருக்கும். இதில் அதிக லாபம் கிடைக்கும் என்றெல்லாம் ஆராய வேண்டும். அதனால் உங்களுக்கும் உதவும் வகையில் தினந்தோறும் சுயதொழில் பற்றிய யோசனைகளை வழங்கி வருகிறோம். இன்றைய பதிவில் மக்களிடையே எப்பொழுதும் Demand இருக்கும் தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Mineral Water Business Plan:
மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதனை கிராமத்தில் உள்ளவர்களுக்கு கவலை இருக்காது. ஏனென்றால் கிராமத்தில் உள்ளவர்களுக்கு வீட்டுக்கு வீடு பைப் இருக்கும். அதில் இரண்டு வேலையும் தண்ணீர் வரும். அதனை பிரச்சனை இருக்காது. அதுவே நகரத்தில் உள்ளவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் தான் நல்ல தண்ணீர் வரும், அதனால் அவர்கள் கேன் தண்ணீர் பயன்படுத்துவார்கள். அதனால் நீங்கள் மினரல் கேன் வாட்டர் தொழிலை தொடங்கலாம்.
இடம்:
இந்த தொழிலுக்கு தனியாக இடம் தேவையில்லை. உங்கள் வீட்டிலேயே சிறிது இடம் இருந்தால் போதுமானது. ஒரு 50 கேன் வைக்கின்ற அளவிற்கு இடம் இருந்தால் போதுமானது.
முதலீடு மற்றும் மூலபொருள்:
இந்த தொழிலுக்கு மூலப்பொருள் என்று பார்த்தால் மினரல் கேன் மற்றும் ஒரு வண்டி இருந்தால் போதுமானது. தினமும் 2000 ரூபாய் மினரல் கேன் வாங்குவதற்கு தேவைப்படும்.
எங்கெல்லாம் விற்பனை செய்யலாம்:
மினரல் கேன் விற்பனை செய்வதற்கு யாரெல்லாம் மினரல் கேன் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்திருக்க வேண்டும். பிறகு அப்பார்ட்மண்ட், கடைகள், மருத்துவமனை போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். ஒரு சிலர் உங்களால் இடத்திற்கு வந்து வாட்டர் கேனை வாங்கி கொள்வார்கள். ஒரு சிலரை கடைக்கு வர முடியவில்லை என்றால் அவர்கள் இடத்திற்கு நீங்கள் சென்று கொடுக்க வேண்டியிருக்கும்.
வருமானம்:
நீங்கள் ஒரு கேனை 20 ரூபாய்க்கு வாங்குவீர்கள், ஆனால் விற்பனை செய்யும் போது ஒரு கேனை 40 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். அப்படியென்றால் நீங்கள் ஒரு நாளைக்கு 100 கேனை விற்பனை செய்கிறார்கள் என்றால் 4000 ரூபாய் சம்பாதிக்கலாம். நீங்கள் இதற்காக 2000 ரூபாய் செலவு செய்வீர்கள். அதை விற்பனை செய்தால் 4000 ரூபாய் கிடைக்கும்.
இந்த தொழிலுக்கான முதலீடு 0% ஆனால் வருமானம் என்று பார்த்தால் மொத்தமாக 50% கிடைக்கும்..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |