Mobile Cover Printing Business Plan
நண்பர்களே உங்களில் யாருக்கு சொந்தமாக தொழில் தொடங்க ஆசை உள்ளது. அப்படி ஆசை இருந்தால் இந்த தொழில் செய்ய உங்களால் முடியுமா என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..! அப்படி என்ன தொழில் என்று யோசிப்பீர்கள். அதற்கு சின்ன விளக்கம் சொல்கிறேன், அதன் பின்பு அது லாபம் தரும் தொழிலா என்பதை பற்றி தெரிந்துகொண்டு அதற்கான முதலீடு மற்றும் அதை எப்படி துவங்குவதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
நம் அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. முன்பு ஸ்மார்ட் வைத்திருந்தால் அது ஸ்டைல், இப்போது விலை அதிகம் உள்ள பெரிய நிறுவனத்தின் போன் வைத்திருந்தால் அது ஸ்டைல் போல் மாறிவிட்டது. அதனை விட முக்கியமானது என்ன தெரியுமா..?
அந்த ஸ்மார்ட் போனுக்கு வித விதமாக கவர் மாட்டிக்கொள்வது என்று நிறைய மாடல்கள் உள்ளது. அதுவும் நிறைய விதமாக உள்ளது. இதை சார்ந்து தான் நம்முடைய தொழில் இருக்க போகிறது அது என்ன தெரியுமா..? மொபைல் கவர் பிரிட்டிங் தொழில்..! இந்த தொழிலுக்கு எவ்வளவு முதலீடு எவ்வளவு லாபம் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க..!
Mobile Cover Printing Business Plan:
பெண் குழந்தைக்கு நகை போட்டு அழகு பார்ப்பது போல் தான் ஸ்மார்ட் போனுக்கு நிறைய Key Chin போடுவது, தினமும் ஒரு கவர் போடுவது என்று நிறைய மாடல்கள் உள்ளது. உங்களின் புகை படங்களை வைப்பது என நிறைய உள்ளது. அதற்கு எவ்வளவு முதலீடு தேவை பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முதலீடு வெறும் ரூ.2000, வருமானம் தினமும் ரூ.5000, போட்டியே இல்லாத புதுமையான தொழில்
முதலீடு:
இந்த தொழிலுக்கு முதலில் பிரிட்டிங் இயந்திரம் தேவை. ஆகவே அது ஒன்று அல்லது இரண்டு தேவைப்படும். இதனுடைய விலையானது 15,000 முதல் அதற்கு அதிகமான விலையிலும் உள்ளது.
இதில் நிறைய இயந்திரம் உள்ளது. அதனையும் வாங்கி வைத்துக்கொண்டால் அதற்கு ஏற்ற மாடலில் செய்து கொடுக்கலாம். இதை தவிர கடை வாடகை லைட்டிங் என நிறைய உள்ளது. தோராயமாக 1 லட்சம் இருந்தால் போதுமானது. கடை வாடகை சேர்த்தால் 1,50,000 இருந்தால் போதுமானது ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👉👉 கையில் இருக்கும் காசை முதலீடு செய்தால் அதனுடன் வட்டியும் கிடைக்கும் நல்ல வருமானமும் கிடைக்கும்
எங்கு துவங்கலாம்:
தனியாக கடை வைத்தால் கூட்டம் அதிகம் உள்ள இடமாக இருக்கவேண்டும். ஏனென்றால் மக்கள் பக்கத்தில் இந்த கடை உள்ளது என்பதை பார்த்து தான் கடைக்கு செல்வார்கள்.
இந்த தொழிலை வீட்டிலிருந்து செய்யலாம். அது எப்படி முடியும் என்று கேட்பீர்கள். அதிகளவு இந்த போன் கவரை போன் கடையிலும், ஸ்டுடியோ வில் தான் இந்த கவர் கேட்பார்கள். அவர்களிடம் சென்று ஆர்டர் பெற்று அதனை நீங்கள் வீட்டிலிருந்து செய்து கொடுக்கலாம்.
லாபம்:
ஒரு கவரின் விலையானது 350 முதல் 600 வரை விற்கப்படுகிறது. அது ஒவ்வொரு கவரை பொறுத்து அமையும். ஆகவே ஒரு நாளுக்கு 10,000 வரை சம்பாதிக்க முடியும். நீங்கள் ஒரு கடையில் மட்டும் ஆர்டர் எடுக்காமல் அனைத்து கடையிலும் ஆர்டர் எடுக்கவேண்டும். அப்போது தான் லாபம் தினமும் கிடைக்கும்.
மாதம் 1,00,000 வரை சம்பாதிக்க கூடிய தொழில் இது தாங்க
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |