High Income Business in Tamil
இன்றைய காலத்தில் ஆண்கள், பெண்கள் என இருவரும் வேலைக்கு செல்ல வேண்டும் நிலை உள்ளது. இன்றைய காலத்தில் ஒரு சிறிய பொருள் வாங்க வேண்டும் நினைத்தால் கூட பணம் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு சரியான வேலை அமையாது. அதனால் பல வேலையை தேடி அலையும் நிலை ஏற்படுகிறது. அதனால் வீட்டிலிருத்தபடியே சுலபமான வேலையை செய்து நல்ல வருமானம் பெற இன்றைய பதிவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சிறுதொழில்:
பொதுவாகவே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வருவது வழக்கம். ஆனால் எந்த முறையில் சம்பாதிப்பது என்று தெரியாமல் இருப்பார். ஒரு சிலர் வேலைக்கு செல்வார்கள் அவர்களுக்கு சரியான பணம் மற்றும் முதலீடுகள் இல்லாமல் இருக்கும்.
அவர்களுக்கு சரியான பணம் கிடைத்தாலும் பல்வேறு செலவுகள் குவிந்து விடும் நிலை ஏற்படுகிறது. சரி சொந்தமாக ஒரு சுயதொழிலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் எந்த தொழில் செய்வது என்ற குழப்பத்தில் இருப்பார்கள். நமக்கு செலவுகள் வந்தாலும் அதனை சரி செய்யும் விதத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலை அறிந்து செய்வதனால் நல்ல வருமானம் கிடைக்கும்.
தினமும் காலையில் போட்ட முதலீட்டை விட அதிகமாகவே மாலைக்குள் திருப்பி சம்பாதித்துவிடலாம்
மூலபொருட்கள்:
- மரத்தூள்
- மக்காசோளம்
- காய்ந்த இலைகள்
- Wood Pellet Making Machine
- Packing Cover
- Packing Machine
முதலீடுகள்:
இந்த தொழிலுக்கு மரத்தூள் மிகவும் முக்கியமான பொருள் ஆகும். அதிலும் இந்த மரத்தூளனது ஒரு கூடை 20 ரூபாயாக உள்ளது. ஒரு கூடை மரத்தூள் 5 கிலோ முதல் 7 கிலோ வரை இருக்கும். தோராயமாக ஒரு கிலோ மரத்தூளின் விலையானது 3 ரூபாயாக இருக்கும்.
மரம் உருளை இயந்திரமானது அதன் விலை மற்றும் ஒரு மாடலை பொறுத்து இருக்கும். மரம் உருளையின் ஆரம்ப விலையாக 59,000 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. அதிலும் இந்த மரம் உருளையின் இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 80 முதல் 100 உருளைகளை செய்து விடலாம்.
தேவையான ஆவணங்கள்:
- Gst registration
- Factory License
- Trade Mark License
தொழில் செய்யும் முறை:
முதலில் Wood Pellet Making Machine-ஐ ஆன் செய்து விட்டு, பிறகு அந்த இயந்திரத்தின் வாய் பகுதியில் முதலில் காய்ந்த இலைகள், மக்கா சோளம், போட்டு அரைக்கவும். பின்பு லேசாக தண்ணீரை தெளித்து விட்டு மரத்தூளை போட்டு நன்றாக அரைத்து ஒரு சில நேரத்திற்கு பின்பு எடுத்தால் மரம் உருளை தயார்.
ஆன்லைன் மூலமா தொழில் செய்து லாபம் பெறனுமா.. அப்போ இந்த தொழில் தான் பெஸ்ட்.
மரம் உருளை பயன்கள்:
இந்த மரம் உருளையினை Rocket Stove தயாரிக்கும் நிறுவனத்திடம் கமிஷன் முறையில் பேசி விற்பனை செய்யலாம். அதேபோல் Rocket Stove பயன்படுத்தும் சிறிய ஹோட்டல் மற்றும் பெரிய ஹோட்டல் என இவர்களிடம் விற்பனை செய்யலாம். இதை தவிர நம்மிடம் Gst registration இருப்பதனால் இதனை Online மூலமாகவும் விற்பனை செய்து வரலாம்.
வருமானம்:
மரம் உருளை விலையானது தோராயமாக 10 ரூபாயாக உள்ளது. ஒரு நாளைக்கு தோராயமாக 500 மரம் உருளை விற்பனை செய்தால் 5000 ரூபாய் சம்பாதிக்கலாம். அதன் செலவு 2000 போனால் கூட 3000 ரூபாய் லாபம் கிடைக்கும்.
இந்த வகையின் படி தொடர்ந்து விற்பனை செய்து வந்தால் 90,000 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும்.
| இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |














