இப்படி ஒரு தொழிலா.! வீட்டிலிருந்தே 50000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாமா.! இது தெரியாம போச்சே.,

Advertisement

Mustard Oil Business Plan in Tamil

வீட்டில் உள்ள இருவரும் சம்பாதித்தால் தான் குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும். சில நபர்களுக்கு சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆசை  மட்டும் இருந்தால் சுயமாக தொழில் செய்ய முடியாது. அதற்கான யோசனையும், முதலீடும் இருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் நிறைய வகையான சுயதொழில் பற்றிய யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வீட்டில் இருந்தே செய்ய கூடிய தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

Mustard Oil Business:

mustard oil business plan in tamil

இந்த தொழில் எப்பொழுதுமே மக்களிடையே Demand உள்ள தொழில் கடு எண்ணெய் தயாரிப்பு தொழில். இந்த கடுகு எண்ணெயில் ஒமேகா-3 இருப்பதால் கொலஸ்ட்ராலின் அளவினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. சரும பிரச்சனை மற்றும் தலைமுடி பிரச்சனைக்கு சிறந்த எண்ணையாக இருக்கிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக தொடங்கலாம்.

இடம் மற்றும் முதலீடு:

இந்த தொழிலை தொடங்குவதற்கு வீட்டிலேயே சிறிய இடம் இருந்தால் போதுமானது. மின்சார வசதி இருக்க வேண்டும். இந்த தொழிலை தொடங்குவதற்கு முதலீடா 90,000 ரூபாய் தேவைப்படும்.

மூலப்பொருட்கள்:

mustard oil business plan in tamil

மூலப்பொருட்கள் என்று பார்த்தால் கடுகு, Dust removal machine, automatic oil machine, பாட்டில்கள் போன்றவை தேவைப்படும். dust removal machine-னின் விலை 10,000 ரூபாய், Automatic oil machine-னின் விலை 60,000 ரூபாயாக இருக்கிறது. மிஷின்களின் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இது வரையிலும் யாரும் செய்யாத தொழிலை என்றால் அது இதாங்க.. 

தேவையான ஆவணங்கள்:

இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் FSSAI ஆவணம், GST registration, trade license, மற்றும் Agmark Certificate போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

தயாரிக்கும் முறை:

நாம் வாங்கி வைத்துள்ள கடுகை 3 நாட்கள் வரை வெயிலில் காய வைக்கவும். காய வைத்ததும் Dust removal machine போட்டு அதில் தூசி, கல் போன்றவை இல்லாமல் சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.

அதன் பிறகு சுத்தம் செய்து கடுகினை, automatic oil machine-ல் சேர்த்தால் கடுகு எண்ணெயை தயாரித்து தந்து விடும்.

விற்பனை எங்கெல்லாம் செய்யலாம்:

தயாரித்து வைத்துள்ள எண்ணெயை பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, டிபாட்மென்ட் ஸ்டோர், மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்து கடை போன்றவற்றில் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

ஒரு லிட்டர் கடுகு எண்ணெய் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் நீங்கள் ஒரு நாளைக்கு 20 லிட்டர் எண்ணெயை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 7000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் செலவாக 2000 ரூபாய் கழித்தால் 5000 ரூபாய் கையில் இருக்கும்.

இந்த Business-ற்கான டிமாண்ட் என்று பார்த்தால் ஏணி வைத்தாலும் எட்டாது..! அப்படி என்ன தொழில் தெரியுமா அது  

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement