அதிக டிமாண்ட் உள்ள சுயதொழில்..!

Advertisement

ஆணி தயாரிப்பு தொழில்..! Nail Making Business Plan..!

Nail Making Business Plan:- புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு பலவகையான தொழில் வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றது. அனைவரும் செய்யக்கூடிய பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவில் காங்க்ரீட் ஆணி தயாரிப்பு தொழில் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சுயதொழில்:-

சாதரணமாக நாம் சுவர் மற்றும் காங்க்ரீட் சுவற்றில் ஆணிகளை பயன்படுத்துவோம். அதேபோல் ஆசாரிகள், காங்கிரீட் தொழில் செய்ப்பவர்கள் என்று பலரும் ஆணிகளை அதிகளவு தற்போது வரை பயன்படுத்துகின்றன. எனவே வீடுகளிலும் சரி, தொழில் துறைகளிலும் சரி ஆணிகளை அதிகளவு பயன்படுத்துகின்றன என்பதினால் தொழில் துவங்க நினைப்பவர்கள் இந்த தொழிலை தயக்கம் இல்லாமல் செய்யலாம்.

15,000/- முதலீட்டில் அருமையான Badge சுயதொழில்

இடம்:-

இந்த காங்க்ரீட் ஆணி தயாரிப்பு தொழில் துவங்க கட்டாயம் சொந்தமாக அல்லது வாடகைக்கு 10-க்கு 20 அளவு கொண்ட ஒரு அரை இருந்தால் போதுமானது.

மூலப்பொருட்கள்:-

White Iron Nails

ஆணி தயாரிப்பு தொழில் பொறுத்தவரை wire rod தேவைப்படும் இந்த wire rod-ஐ அலுமினியம், துத்தநாகம், இரும்பு, நிக்கல், எஃகு, வெண்கலம், பித்தளை, தாமிரம் வெள்ளி, மோனல் போன்ற உலோகங்களில் தயார் செய்கின்றன. எனவே இந்த உலோகங்களில் தங்களுக்கு எந்த உலோகம் தேவையோ அந்த wire rod-ஐ வாங்கி ஆணி தயார் செய்ய பயன்படுத்துக்கள்.

இந்த wire rod அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் குறைந்தபட்ச 1 கிலோ விலையாக 40 ரூபாய்க்கு விற்பனை செய்கின்ற, எனவே ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து மூலப்பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

மேலும் இதனை தயாரிக்க தேவையான இரும்பும் மற்றும் மூலப்பொருள்கள் பல பெரிய நிறுவனங்களில் குறைந்த விலையில் கிடைக்கின்றன எனவே அங்கு நேரடியாக சென்றும் மூலப்பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

முதலீடு:-

இந்த தொழில் பொறுத்தவரை குறைந்தபட்சம் 2 லட்சம் வரை தேவைப்படும். மேலும் இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

இயந்திரம்:-

nail making machine

இந்த இயந்திரத்தின் பெயர் nail making machine. இது ஒரு ஆட்டோமேட்டிக் இயந்திரம் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி தான் ஆணி தயாரிக்க முடியையும். இந்த இயந்திரத்தை இயக்க 3 phase மின்சாரம் தேவைப்படும். இந்த இயந்திரத்தின் ஆரம்ப வேலை 1.5 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் 5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த nail making machine-யில் 1/2 இன்ச் இருந்து தங்களுக்கு எவ்வளவு இன்ச் வரை ஆணிகள் தயார் செய்ய வேண்டுமோ அந்த அளவிற்கு ஆணிகளை உற்பத்தி செய்யலாம்.

மேலும் இந்த இயந்திரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 50 கிலோ ஆணிகளை உற்பத்தி செய்ய முடியும். அதுவே நாள் ஒன்றிற்கு 10 மணி நேரம் ஆணி உற்பத்தி செய்யும் பொழுது 500 கிலோ ஆணிகளை உற்பத்தி செய்யலாம்.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்..!

வருமானம்:-

ஒரு கிலோ wire rod 40 ரூபாய் என்று வைத்து கொள்வோம், இதற்கான உற்பத்தி செலவு, மின்சாரம், லேபர் மற்றும் இதர செலவுகளுக்கு 5 ரூபாய் என்று வைத்து கொள்ளலாம். ஒரு கிலோ Wire rod-யில் ஆணி தயார் செய்வதற்கு 45 ரூபாய் செலவாகும்.

இந்த ஒருகிலோ ஆணிகளை சந்தையில் 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். ஒரு கிலோ ஆணி உற்பத்தியில் 10 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை  லாபம் கிடைக்கும்.

இந்த தொழில் பொறுத்தவரை ஒரு மணி நேரத்துக்கு 500 ரூபாய் வருமானம் பெறலாம், ஒரு நாளிற்கு 5,000 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.

சந்தை வாய்ப்பு:-

ஆணியை பொறுத்தவரை அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருள் என்பதால் சந்தையில் இதன் தேவை எப்பொழுதுமே இருந்துகொண்டிருக்கும். எனவே தாங்கள் தயார் செய்யும் ஆணிகளை ஒரு கடைக்கு 50 கிலோ என விற்பனை செய்யலாம். இது போன்று 10 கடைகளில் ஆர்டர் பெற்று தாங்கள் தயார் செய்த ஆணிகளை விற்பனை செய்யலாம்.

இது ஒரு நல்ல லாபகரமான தொழில் என்பதால் இதன் மூலம் தினமும் நல்ல வருமானத்தை தங்களால் பெறமுடியும்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> புதிய தொழில் பட்டியல்
Advertisement