வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தினசரி அதிக லாபம் பெறுவதற்கு இந்த தொழிலை மட்டும் செய்தால் போதும்..!

Updated On: January 17, 2023 2:00 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

தினசரி வருமானம் தரும் தொழில்

நாம் எப்போதும் தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு முதலில் யோசிப்பது என்னவென்றால் நாம் செய்யப்போகும் தொழில் இன்று மட்டும் இல்லாமல் என்றும் அதிக வருமானம் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்று தான். ஏனென்றால் இது மாதிரி நாம் தொழில் செய்தால் நமக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்கும் என்பது சுயதொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவருடைய கருத்தாக இருக்கிறது. ஆகவே உங்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்றைய தினசரி அதிக வருமானம் தரக்கூடிய தொழில் ஒன்றை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Small Business Ideas in Tamil:

இன்று குறைந்த முதலீட்டில் அதிக வருமான தரக்கூடிய Neem Leaf Powder Business 
பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த Neem Leaf Powder தொழிலானது அதிகம் டிமாண்ட் உள்ள ஒரு தொழிலாக இருக்கிறது.

Neem Leaf Powder Business செய்வதற்கு எந்த ஒரு மிஷினும் தேவையில்லை. இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் உங்களுக்கு வெறும் 1,000 ரூபாய் மட்டும் போதும்.

இந்த தொழிலை செய்வதற்கு உங்களுக்கு Neem Leaf கிடைக்கவில்லை என்றால் காசு கொடுத்து வாங்கி தயார் செய்யலாம்.

மூலப்பொருள்:

  1. வேப்பிலை
  2. Zip Lock Pouch Small- தேவையான அளவு

இந்த தொழிலை செய்வதற்கு முன்பு FSSAI லைசென்ஸ் வாங்கி கொள்ள வேண்டும். ஏனென்றால் இது உணவு சார்ந்த பொருளாக இருப்பதால் கட்டாயம் தேவைப்படும்.

தொழில் தொடங்க தேவையான இடம்:

இந்த தொழிலை செய்வதற்கு உங்கள் வீட்டில் ஒரு பகுதியில் 10×10 இடம் மட்டும் இருந்தால் போதும்.

இதையும் படியுங்கள்⇒ 3,500 ரூபாய் முதலீட்டில் 15,000 வரை லாபம் தரக்கூடிய அருமையான தொழில்…!

தயாரிக்கும் முறை:

தினசரி வருமானம் தரும் தொழில்

முதலில் பவுடர் தயாரிக்க எடுத்துவைத்துள்ள வேப்பிலையை சுத்தமான தண்ணீரில் அலசி கொள்ளுங்கள். அதன் பிறகு அலசி வைத்துள்ள வேப்பிலையை வெயிலில் நன்றாக 2 நாட்கள் வரை காய வைத்து விடுங்கள்.

2 நாட்கள் கழித்து வேப்பிலையை பார்த்தால் நன்றாக காய்ந்து பவுடர் தயாரிப்பதற்கான பதம் கிடைத்து விடும்.

இப்போது உங்கள் வீட்டில் உள்ள மிக்ஸி ஜாரில் காய வைத்து எடுத்துவைத்துள்ள வேப்பிலையை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பவுடர் போல அரைத்து கொள்ளுங்கள்.

பேக்கிங் செய்யும் முறை:

இப்போது நீங்கள் தயாரித்து வைத்துள்ள Neem Leaf Powder 50 கிராம் மற்றும் 100 கிராம் என தனித்தனியாக Zip Lock Pouch-ல் நிரப்பி பேக்கிங் செய்து விடுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நீங்கள் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Neem Leaf பவுடர் தோராயமாக 50 கிராம் 100 ரூபாய் மற்றும் 100 கிராம் 200 ரூபாய் என விற்கப்படுகிறது. அப்படி என்றால் ஒரு நாளைக்கு நீங்கள் 50 கிராம் Neem Leaf பவுடர் பாக்கெட்டில் 10-ம் மற்றும் 100 கிராம் பாக்கெட்டில் 10-ம் விற்பனை செய்தீர்கள் என்றால் தோராயமாக நீங்கள் 3,000 வரையும் லாபம் பெற முடியும்.

இதுபோல நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்தீர்கள் என்றால் தோராயமாக ஒரு வாரத்திற்கு மட்டும் நீங்கள் 21,000 வரை வருமானம் பெறலாம்.

இந்த Neem Leaf பவுடரை நீங்கள் மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்து கடை, Beauty பார்லர் மற்றும் Department Store என அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யலாம்.

பயன்கள்:

குறைந்த முதலீட்டில் அதிக லாபம்

நீங்கள் தயார் செய்த Neem Leaf பவுடர் நமது உடலின் இரத்தத்தை சுத்திகரிப்பதற்கும், சரும பிரச்சனை, தலை முடி பிரச்சனை, அல்சர் மற்றும் சர்க்கரை நோயாளிகள் என பலவற்றைக்கு ஒரு சிறந்த தீர்வாக பயன்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ எதிர்காலத்தில் இந்த தொழில் தான் அதிக டிமெண்ட்டுடன் வளம் வரக்கூடிய தொழிலாக இருக்க போகிறது..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Supermarket Business Plan in Tamil

சூப்பர் மார்க்கெட் தொழில் தொடங்குவது எப்படி? | Supermarket Business Plan in Tamil

ready to cook food business ideas in tamil

அடுத்த 10 வருடத்தில் கோடியில் புரளும் தொழில் இது தாங்க.!

Cupcake Business Plan in Tamil

காலப்போக்கில் Factory ஆரம்பித்து நடத்தக்கூடிய அளவிற்கு வருமானம் தரக்கூடிய தொழில்..!

Dining Paper Roll Making Business in Tamil

சாதாரண தொழில் தான் ஆனால் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

சுயதொழில்

சுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்!!!

சிமெண்ட் செங்கல் தயாரிப்பு

சுயதொழில் – ஹாலோபிளாக் கற்கள் வியாபாரம் !!!

Home Service Business Ideas in Tamil

பணம் கிடைக்க சிறந்த தொழில்கள் | Home Service Business Ideas in Tamil

ladies business ideas in tamil

பெண்கள் வீட்டில் இருந்தே லட்சத்தில் சம்பாதிக்க கூடிய தொழில்கள் | Ladies Business Ideas in Tamil

தினமும் காலையில் போட்ட முதலீட்டை விட அதிகமாகவே மாலைக்குள் திருப்பி சம்பாதித்துவிடலாம்..!