New Business Ideas For 2023
இன்றைய காலத்தை பொறுத்தவரை சுயதொழில் என்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால் இப்போது எல்லாம் அனைவரும் காலத்திற்கு ஏற்ற மாதிரியான தொழிலை செய்து அதில் லாபம் மற்றும் வருமானம் என இரண்டினையும் பெறுகிறார்கள். அதனால் நீங்களும் இந்த மாதிரி ஏதாவது ஒரு தொழிலை செய்தால் போதும் அதன் மூலம் நீங்கள் நினைத்த மாதிரியான வருமானத்தை பெறலாம். ஆனால் சிலருக்கு என்ன தொழில் செய்வது என்று தெரியாமலேயே இருக்கும். சரி ஏதாவது ஒரு தொழிலை செய்யலாம் என்றாலும் அதற்கு என்ன மூலப்பொருள் வேண்டும் மற்றும் முதலீடு எவ்வளவு போன்ற அனைத்தும் சரியாக தெரிவது இல்லை. இதுபோன்ற குழப்பங்கள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான தொழிலை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
சுயதொழில் என்ன செய்யலாம்:
சுயதொழில் என்றால் அதில் நிறைய வகைகள் உள்ளது. அத்தகைய தொழில் வகைகளில் ஒன்றான Stool Wooden Business-ஐ பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
மக்கள் அனைவரும் பிளாஸ்டிக் ஸ்டூலினை வாங்கி பயன்படுத்தி கொண்டிருந்த காலங்கள் மாறி இப்போது மரத்தினால் ஆனால் ஸ்டூலினை தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆகையால் இந்த தொழிலை எப்படி செய்வது என்று பார்க்கப்போகிறோம்.
தேவையான முதலீடு:
இந்த தொழிலை செய்வதற்கான முதலீடு என்று பார்த்தால் ஆரம்பத்தில் 10,000 ரூபாய் இருந்தால் போதும். அதன் பின்பு உங்களுடைய விற்பனைக்கு அதிகரிக்க அதிகரிக்க முதலீடும் அதிகரித்து காணப்படும்.
தேவையான மூலப்பொருள்:
இத்தகைய Stool Wooden Business-ஐ செய்வதற்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் மரத்தினால் ஆனா ஸ்டூல் மட்டும் தான்.
தேவையான இடம்:
நீங்கள் தொடங்கப்போகிறீர்கள் என்றால் அதற்கு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் ஒரு கடை வேண்டும். ஏனென்றால் அப்போது தான் உங்களுடைய கடை நல்ல விளம்பரம் ஆகும்.
இதையும் படியுங்கள்⇒ 4 பீஸ்லேயே 25,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்த சீசனிற்கு ஏற்ற அருமையான தொழில்னா அது இதாங்க..
How to Start Wooden Stool Business:
இத்தகைய தொழிலை செய்வதற்கு முதலில் ஹோல் சேல் முறையில் மரத்தினால் செய்யப்பட்ட ஸ்டூலினை வாங்கி கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் நீங்கள் தனியாக மூலப்பொருட்கள் வேலைக்கு ஆட்கள் வைத்தும் மர ஸ்டூலினை தயாரித்து விற்பனை செய்து கொள்ளலாம்.
ஆனால் Wholsale முறையில் வாங்கும் போது உங்களுக்கு குறைவான விலையில் மர ஸ்டூல் கிடைக்கும். இதில் எதாவது ஒன்றினை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்து உடன் பர்னிச்சர் கடை, ஷாப்பிங் மால் மற்றும் மரப்பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள் என இதுபேன்ற இடங்களிலும் ஆர்டர் எடுத்து இதுபோன்ற முறையிலும் விற்பனை செய்யலாம்.
இதனை மட்டும் செய்தால் போதும் மர ஸ்டூல் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும்.
வருமானம்:
ஒரு நல்ல தரமுள்ள மர ஸ்டூலின் விலை 900 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. அப்படி என்றால் ஒரு நாளைக்கு நீங்கள் 7 மர ஸ்டூல் விற்பனை செய்தால் தோராயமாக 6,300 ரூபாய் வருமானம் பெறலாம்.
இப்படி நீங்கள் தொடர்ந்து விற்பனை செய்தால் ஒரு மாதத்திற்கு நீங்கள் 1,89,000 ரூபாய் வரை லாபம் மற்றும் வருமானம் இரண்டனையும் பெறலாம்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ தினமும் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழிலை தொடங்குங்கள்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |