லாபகரமான தொழில்
வணக்கம் நண்பர்களே இன்று வியாபார பதிவில் அதிகமான டிமாண்ட் உள்ள தொழில் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். இந்த தொழிலை யார் செய்தாலும் அதிகமான வருமானத்தை சம்பாதிக்க முடியும். புதிதாக என்ன தொழில் தொடங்கலாம் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் இந்த தொழிலை செய்வதன் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம். இந்த தொழிலை தொடங்குவதற்கு அதிகமான முதலீடுகள் எதுவும் தேவைப்படாது. மேலும் இவை எந்த மாதிரியான தொழில், இந்த தொழிலை தொடங்குவதற்கு தேவைப்படும் இடவசதி, முதலீடுகள் மற்றும் இந்த தொழிலை எப்படி தொடங்கலாம் என்றும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
தினமும் 4,000 ரூபாய் சம்பாதிக்கும் அருமையான தொழில்..! |
குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம்:
இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களுக்கு தேவைப்படும் முதலீடுகள் வெறும் 5000 ரூபாய் மட்டும் தான். ஆனால் குறைந்த முதலீட்டில் அதிகமான லாபத்தை பெறலாம். மேலும் இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்கள் வீட்டில் சின்னதாக இடம் இருந்தாலே போதும்.
Crayon Making Business in Tamil:
இன்றைய பதிவில் என்ன தொழிலை பற்றி தெரிந்துகொள்ளப்போகிறோம் என்றால் எல்லாருக்கும் பயனுள்ள ஒரு பொருள். அதாவது பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகமாக பயன்படும் Crayons வீட்டிலேயே தயாரித்து அதை பல இடங்களுக்கு விற்பனை செய்வது. இவை பொதுவாக வண்ணங்கள் தீட்டுவதற்கு பயனுள்ளதாக இருப்பதால் இதை வளரும் குழந்தைகளில் இருந்து கல்லூரி செல்லும் மாணவர்கள் வரையும் இதை அதிகமாக உபயோகிக்கிறார்கள். மேலும் இவற்றை எப்படி தயாரிப்பது என்று தெரிந்துகொள்ளலாம்.
Crayon Making Machine inTamil:
இந்த Crayon தயாரிப்பதற்கு ஒரே ஒரு மெஷின் மட்டும் தான் தேவைப்படுகிறது. இதனுடைய விலை 2000 ரூபாய் மட்டும் தான். இதை நீங்கள் நேரடியாகவோ அல்லது பல ஆன்லைன் ஷாப்பிங் மூலமாகவோ இந்த மெஷின்களை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த Crayon -களை தயாரிப்பதற்கு வெறும் மூன்று பொருட்கள் இருந்தால் மட்டுமே போதும் அதாவது Paraffin Wax என்ற வேதிப்பொருள் தேவைப்படுகிறது. இவற்றை நீங்கள் ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்ளலாம் இதனுடைய விலை 90 ரூபாய் மட்டுமே.
அடுத்ததாக மற்றொரு பொருட்கள் என்னவென்றால் ஆயில் கலர் தேவைப்படுகிறது. இவற்றையும் ஆன்லைன் மூலம் வாங்கிக்கொள்ளலாம். அடுத்ததாக Stearic ஆசிட் தேவைப்படுகிறது. இந்த மூன்று பொருட்கள் இருந்தாலே போதும் இதை நீங்கள் சுலபமாக தயாரிக்கலாம்.
மேலும் இந்த கிரேயான்ஸ்களின் கலவைகளை தயாரித்த பிறகு அதை ஒரு மோல்டுகளில் பதிக்கவேண்டும். இந்த மெஷின்களை ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்ளலாம். அதிகமாக கிரேயான்ஸ் தயாரிப்பதற்கும் மெஷின்கள் இருக்கின்றன இந்த மெஷின்களின் விலை 45,000 வரையும் உள்ளது.
பேக்கிங் மற்றும் விற்பனை செய்யும் முறை:
இந்த கிரேயான்ஸ்களை தயாரித்து நீங்கள் ஒரு அழகான சின்ன அட்டை பாக்ஸ்களை வாங்கி பேக்கிங் செய்ய வேண்டும். இதனுடைய விலை ஆன்லைன்களில் 100 முதல் 200 ரூபாய் வரை உள்ளது. நீங்களும் இந்த பொருட்களை தயாரித்து பள்ளி கல்லூரிகள் இருக்கும் இடம், டிப்பாட்மென்ட் ஸ்டோர், மளிகை கடை, பேனா கடைகள் மற்றும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து மாதம் 90,000 ரூபாய் வரையும் சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |