Old Tyre Recycling Business in Tamil
புதியதாக தொழில் தொடங்க நினைக்கும் தொழில்முனைவோருக்கு வணக்கம்.. இன்று நாம் ஒரு அருமையான தொழில் யோசனையை பற்றி தான் பார்க்க போகிறோம். குறிப்பாக இந்த தொழிலை யாரும் அதிகம் செய்யாத தொழில். அது என்ன தொழில் தெரியுமா பழைய டயரை ரீசைக்கிளிங் பிசினஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். நமது இந்தியாவில் வருடம் தோறும் 25 கோடி டயர்களை பயன்படுத்திய பிறகு Waste-ஆக தூக்கி எறிகிறோம். ஆக ஒரு பழைய டயரை ரீசைக்ளிங் செய்வதன் மூலம் 45 சதவீதம் Fuel Oil, 30 சதவீதம் Black carbon, 15 சதவீதம் Steel Wire, 10 சதவீதம் Gas கிடைக்கிறது. இந்த பழைய டயரை நீங்கள் ரீசைக்கிளிங் செய்வதன் மூலம் ஒரு மாதத்திற்கு 18 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். சரி வாங்க இந்த தொழில் எப்படி ஆரம்பிக்கலாம். இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
மூலப்பொருள்:
இந்த பழைய தயார் ரீசைக்கிளிங் பிசினஸ் செய்வதற்கு மிக முக்கியமான மூலப்பொருட்களே பழைய டயர்கள் தான். இந்த பழைய டயர்கள் உங்களுக்கு Two Wheeler, Four Wheeler சரி செய்யும் Workshop-யில் கிடைக்கும். அல்லது பழைய டயர்களை மொத்தமாக சேமித்து வைப்பவர்களிடம் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். அல்லது ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் கிடைக்கிறது அங்கு ஆர்டர் செய்து நீங்கள் பெற்று கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தயாரிக்கும் முறை:
பழைய டயரை மேல் படத்தில் காட்டியுள்ளது போல் உள்ள ஒரு இயந்திரத்தில் சேர்க்க வேண்டும். பிறகு அந்த டயரை எரிக்க வேண்டும். அவற்றை எரிக்கும்போது கிடைக்கும் கேஸ், ஆயில், ஸ்டீல், கார்பன் ஆகியவற்றை தனி தனியாக பிரித்து எடுக்க வேண்டும். இவற்றில் இருந்து கிடைத்த நான்கு பொருட்களையுமே நீங்கள் சந்தையில் விற்பனை செய்ய முடியும்.
Fuel Oil:
இவற்றில் இருந்து கிடைக்கும் Fuel Oil-ஐ Glass Factory, Steel Factory, Furnace Industry, casting Industry, Crude oil Distillation plant, Cement Factory, Boiler Factory போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.
Black Carbon Powder:
Black Carbon Powder பொறுத்தவரை Rubber Industries, Ink Industries, பல நிறுவனங்களுக்கு பயன்படுகிறது. Highways ரோடு போடுவதற்கும் இந்த Black Carbon பயன்படுகிறது.
வருமானம்:
Fuel Oil:
இந்த ரீசைக்கிளிங் பிசினஸ் மூலம் ஒரு நாளிற்கு 4000 லிட்டர் Fuel Oil உற்பத்தி செய்யலாம். ஒரு மாதத்திற்கு 1,04,000 லிட்டர் Fuel Oil ஆயில் தயார் செய்ய முடியும்.
ஒரு லிட்டர் Fuel Oil 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதத்திற்கு கணக்கு போட்டால் 1,04,000 X 40 = 41,60,000/- வருமானம் கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
எதிர்காலத்தில் லாபத்தை அள்ளி கொடுக்கும் சிறந்த தொழில்
Black Carbon powder:
Black Carbon powder ஒரு நாளிற்கு 3,000 கிலோ கிடைக்கும் ஒரு மாதத்திற்கு 78,000/- கிலோ கார்பன் கிடைக்கும்.
ஒரு கிலோ கார்பனை 8 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஒரு மாதத்திற்கு 78,000 X 8 = 6,24,000/- ரூபாய் வருமானம் கிடைக்கும்.
Steel Wire:
Steel ஒரு நாளுக்கு 1,800 கிலோ கிடைக்கும். ஒரு மாதத்திற்கு என்று பார்க்கும்போது 36,000 கிலோ ஸ்டீல் கிடைக்கும். ஒரு கிலோ ஸ்டீல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதத்திற்கு 36,000 X 20 = 7,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
மொத்த வருமானம் என்று பார்க்கும் போது 41,60,000 + 6,24,000 + 7,20,000 = 5,504,000/- ரூபாய் வருமானம் கிடைக்கும்.
உற்பத்தி செலவுகள்:
ஒரு நாளுக்கு 9 டன் பழைய டயர் தேவைப்படும் ஒரு kg டயர் 12 ரூபாய் , ஒரு மாதத்திற்கு 234 பழைய டயர் தேவைப்படும். இதற்கு ஆகும் செலவு 28,08,000/- ரூபாய் மூலப்பொருளுக்கு மட்டுமே தேவைப்படும்.
மொத்த சம்பளத்திற்கு 1,48,000 ரூபாய்.
மாத மின்சார செலவுக்கு 3,00,000 ரூபாய்
பராமரிப்பு செலவுக்கு 1,00,000 ரூபாய்
இதர செலவுக்கு 3,00,000 ரூபாய்
மொத்த செலவு என்று பார்க்கும்போது 3,656,000 ரூபாய் ஆகும்.
வருமானம்:
வருமானத்தில் இருந்து செலவை கழித்தோம் என்றால் 5,504,000 – 3,656,000 = 1,848,000 வருமானமாக கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
எப்பொழுதும் Demand உள்ள இந்த தொழிலை தொடங்கி பாருங்க..! தினமும் அதிக லாபம் தான்..!
இந்த தொழிலுக்கு தேவைப்படும் லைசன்ஸ்:
- Business registration
- MSME Registration
- Trade License
- GST Number
- Factory License & Registration
- Electricity Permission
- Pollution Board (Management & Handling of Plastic Waste)
- EPF & ESIC Registration
இடம்:
இந்த தொழில் தொடங்க 10,000 சதுரடி முதல் 5000 சதுரடி வரை இடம் தேவைப்படும்.
முதலீடு:
இந்த டயர் ரீசைக்கிளிங் பிசினஸ் ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடாக தேவைப்படும். இவ்வளவு முதலீடு செய்து நாம் இந்த தொழிலை ஆரம்பித்தாலும் மாதம் மாதம் நமக்கு 18,36,000 வரை வருமானம் கிடைக்கும் இதன் மூலம் ஒரு வருடத்திலேயே நாம் இரண்டு கோடி வரை சம்பாரித்துவிடலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |