Omavalli Powder Making Business
படித்து முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருப்பவரா நீங்கள்..! உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் பல வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய பதிவில் கூறும் வணிக யோசனையை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..! வாங்க நண்பர்களே பதிவை படிக்க தொடங்குவோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
முதலீடு:
இந்த தொழில் செய்வதற்கு முதலீடு அதிகமாக தேவைப்படாது. குறைந்த முதலீட்டில் அதிகளவு லாபம் தரக்கூடிய தொழில் தான் இது. அதனால் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம்.
இடம்:
இந்த தொழில் தொடங்குவதற்கு கடையோ அல்லது தனியாக ஒரு இடமோ தேவை கிடையாது. உங்கள் வீட்டில் 10 × 10 இடம் இருந்தாலே போதும் இந்த தொழிலை தொடங்கி அதிகளவு லாபம் பார்க்கலாம்.
மூலப்பொருட்கள்:
இந்த தொழில் செய்வதற்கு முக்கியமான பொருள் எது என்றால், அது ஓமவல்லி தான். நம் வீட்டு பகுதியில் அதிகமாக காணப்படும். இதை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இதை வைத்து கைநிறைய சம்பாதிக்கலாம்.
முதலீடே தேவையில்லை, வேண்டாம் என்று தூக்கி எரியும் இந்த பொருளை வைத்து கைநிறைய சம்பாதிக்கலாம்..! |
Omavalli Powder Making Business in Tamil:
நாம் இன்று ஓமவல்லியை பொடி செய்து அதனை விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் பார்க்க போகின்றோம்.
அதற்கு நீங்கள் ஓமவல்லியை பறித்து வந்து சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும். பின் அதை வெயிலில் 1 நாளும் நிழலில் 2 நாட்கள் என்று 3 நாட்கள் வரை காயவைக்க வேண்டும்.
பின் ஓமவல்லி இலைகள் நன்றாக காய்ந்ததும் அதை மிக்சி ஜாரில் போட்டு தூளாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த ஓமவல்லி பவுடரை கண்கவரும் பாக்கெட்களில் வைத்து பேக் செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் அதை அதிகம் வாங்குவார்கள்.
Shart Time-ல அதிக லாபம் தரக்கூடிய மற்றும் அதிக டிமாண்ட் உள்ள இந்த தொழிலை செய்ய மிஸ் பண்ணிடாதீங்க..! |
பொதுவாக இது ஒரு கிருமி நாசினியாக பயன்படுகிறது. ஓமவல்லி இலை காய்ச்சல், சளி, தலைவலிக்கு அருமருந்தாக இருக்கிறது. குழந்தைகளின் இருமலை போக்கும் மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகளின் அஜீரணம் போக்கும் குணம் கொண்டது. மேலும் இந்தப் பவுடர் அழகுசாதன பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
அதனால் மக்கள் இந்த பவுடரை வாங்க முன் வருவார்கள். இந்த ஓமவல்லி பவுடரை பேக் செய்து உங்கள் பகுதியில் இருக்கும் மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்து கடை, அழகு நிலையம், பெரிய மால் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.
மேலும் இந்த பவுடரை உங்களுக்கென்று ஒரு வலைத்தளம் ஆரம்பித்து ஆன்லைனிலும் விற்பனை செய்யலாம். ஆன்லைனில் 1 கிலோ ஓமவல்லி பவுடர் 899 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதனால் இந்த தொழிலை இன்றே தொடங்கி தினம் தினம் நல்ல லாபத்தை பெறுங்கள்..!
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |