Online Tuition Business Plan in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். உட்கார்ந்த இடத்திலேயே மாதம் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கூடிய தொழில் (Online Tuition Business in Tamil) பற்றி விவரித்துள்ளோம். இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதாரத்தை சமாளித்து தினசரி வாழ்க்கையை நடத்துவது என்பதே மிகவும் கடினமாக உள்ளது. அதனால் தான் அனைவருமே இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதாரத்தை சமாளித்து தங்களின் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வதற்காக ஏதாவது ஒரு தொழில் அல்லது வியாபாரத்தை தொடங்குகிறார்கள். ஆனால் ஒரு சிலரின் மனதில் மட்டும் எந்த மாதிரியான தொழில் தொடங்கினால் நமக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என்பதில் குழப்பம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு எளிமையான தொழிலை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தொழில் அதனை எவ்வாறு தொடங்குவது என்பதையெல்லாம் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம் வாங்க..
என்ன தொழில்:
என்றும் அழிவில்லாதது தான் கல்வி இந்த கல்வியை கற்பிப்பது ஒரு மகத்தான வேலை. இந்த வேலையை செய்வது மிகவும் கடினம். ஏனென்றால் கல்வியை மாணவ மாணவிகளுக்கு புரியும்படி சொல்லித்தருவதற்கு ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.
ஆனாலும் அவர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு தெளிவாக தான் சொல்லி தருவார்கள். ஆனாலும் ஒருசில மாணவ மாணவிகளுக்கு அது சரியாக புரியாது. அதனால் பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை டியூசன் சேர்ப்பார்கள் அங்கு குழந்தைகளுக்கு எப்படி புரியுமோ அப்படி சொல்லித்தந்து அவர்களை நன்கு படிக்க வைப்பார்கள்.
இந்த டியூசனில் படிப்பதற்காக குழந்தைகள் ஏதாவது ஒரு டியூசன் சென்டருக்கு தான் சென்றுவருவார்கள். அப்படி அவர்கள் வெளியில் சென்று அலைந்து திரிந்து படித்துவிட்டு வீட்டிற்கு வரும்பொழுது அவர்கள் மிகவும் சோர்வடைந்துவிடுவார்கள்.
அதனால் ஒரு சில பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை Online டியூசனில் சேர்த்து வீட்டில் இருந்தபடியே அவர்களை படிக்க வைப்பார்கள். அதனால் நீங்களும் இந்த Online டியூசன் தொழிலை செய்திர்கள் என்றால் வீட்டில் இருந்தபடியே அதிக அளவு சம்பாதிக்கலாம்.
வருங்காலத்தில் இந்த தொழிலுக்கு தான் அதிக மவுஸ்
தேவையான மூலப்பொருள் மற்றும் முதலீடு:
இந்த தொழிலுக்கான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் கரும்பலகை, இன்டர்நெட் வசதி மற்றும் கணினி. இவை அனைத்தும் நீங்கள் தேர்வு செய்யும் சேவை மற்றும் மாடலை பொறுத்து விலை மாறுபடும்.
இந்த தொழிலை துவங்குவதற்கு தோராயமாக 50,000 ரூபாய் தேவைப்படும்.
தொழில் செய்யும் முறை:
இந்த தொழில் செய்வதற்கு முதலில் நீங்கள் நன்கு விளம்பரம் செய்ய வேண்டும். அதாவது உங்களின் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் எல்லாம் சொல்லி அவர்களின் குழந்தைகளை எல்லாம் உங்கள் டியூசனில் சேர்க்க வைக்க வேண்டும்.
அதன் பிறகு அவர்களின் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்கவைத்து அதிக அளவு மாணவ மாணவிகளை உங்களின் டியூசனில் சேர்க்க வைக்க வேண்டும்.
உங்க கையில் 1000 ரூபாய் இருந்தாலே போதும் நீங்களும் சொந்தமாக தொழில் தொடங்கலாம்
வருமானம்:
நீங்கள் பலவகையான மாணவர்களுக்கு டியூசன் எடுப்பீர்கள் அவர்கள் படிக்கும் வகுப்பிற்கு ஏற்றவாறு அவர்களுக்கான கட்டணத்தை பெறலாம். அப்படிஇல்லையென்றால் ஒருவருக்கு இவ்வளவு என்று கட்டணத்தை நிர்ணையித்தும் பெற்று கொள்ளலாம்.
அதாவது தோராயமாக ஒருவருக்கு நீங்கள் 500 ரூபாய் என கட்டணம் நிர்ணையிக்கின்றிர்கள் என்றால் உங்களிடம் 20 மாணவ மாணவிகள் படிக்கின்றார்கள் என்றால் மாதம் நீங்கள் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
இந்த Online டியூசன் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இந்த தொழிலை இரண்டு முறையில் செய்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |