வீட்டில் இருந்தபடியே தினமும் 3000 வரை சம்பாதிக்கலாம்

own business in tamil

Homemade Business in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் வியாபார பதிவில் வீட்டில் இருந்துகொண்டே சம்பாதிப்பதற்கு ஒரு அருமையான பிசினஸ் பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். இந்த பிசினஸை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம், இந்த பிசினஸ் ஆனது சாப்பிட கூடிய பொருள் தயாரிப்பது பற்றி தான்,  அதோடு இந்த பிசினஸ் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இதை பார்ட்டைமாகவும் செய்யலாம் அல்லது மெயின் பிசினஸாகவும் கூட செய்யலாம். மேலும் இந்த தொழிலை தொடங்குவதற்கு எவ்வளவு முதலீடுகள் என்றும், இதற்கு தேவையான பொருட்கள் பற்றியும் காணலாம் வாங்க.

10 × 10 இடம் இருந்தாலே போதும், இந்த தொழிலை செய்தால் வாரம் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

 

Homemade Food Business in Tamil:

இன்னைக்கு நாம் தெரிந்துகொள்ளப் போகிற பிசினஸ் என்னவென்றால் புளிப்பு மிட்டாய் தயாரிப்பது பற்றி தான் பார்க்கப்போகிறோம், இந்த மிட்டாய்களை பள்ளிக்கு செல்லும்  சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்,   இந்த காலத்தில் வளரும் குழந்தைகள் அதிகமான கெமிக்கல் கலந்த உணவு பொருளைகளை சாப்பிடுவதால், உடலுக்கு பல விதமான விளைவுகளும் ஏற்படுகிறது, எனவே குந்தைகளுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் அளவில் இந்த மிட்டாய்களை செய்வது நல்லது, அதோடு இந்த மிட்டாய்களை பெண்கள் செய்து ஆண்கள் விற்பனை செய்வது மிகவும் சுலபமாக இருக்கும்.

குறைந்த முதலீட்டில் அதிக லாபம்:

இந்த தொழிலை தொடங்குவதற்கு குறைந்தப்பட்சதம் 500 மட்டும் இருந்தாலே போதும். ஆனால் தினமும் கிடைக்க கூடிய வருமானம் 3000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.  இந்த புளிப்பு மிட்டாய் ஆன்லைனில் IMLI மிட்டாய் என்ற பெயரில் 299 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, அதோடு அமேசானில் 40 கிராம் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்டுக்கிறது. மேலும் நீங்கள் தயாரிக்கும் பொருளின் தரத்தையும், சுவையையும் பொறுத்துதான் அதற்கு ஏற்ற வருமானங்களை கிடைக்கும்.

புளி மிட்டாய் தயாரிக்கும் முறை:

புளி மிட்டாய்களை நம் வீட்டில் இருக்கும் புளியை கொண்டு மிகவும் சுலபாகமாக தயாரிக்கலாம், மேலும் இந்த புளி  மிட்டாய்களை இரண்டு விதமாக தயாரிக்கலாம் அதாவது சுகர் கலந்து தயாரிக்கும் மிட்டாய்களின்  விலை குறைந்த அளவில் விற்கப்படும், அதே இதை ஆர்கானிக் மிட்டாயாக செய்யும் பொழுது விலை அதிகமாக வைத்து விற்பனை செய்யமுடியும்.

இந்த புளி  மிட்டாய்களை தயாரிப்பதற்கு மஞ்சத்தூள்-500 கிராம், சர்க்கரை 600 கிராம், சிவப்பு பச்சைமிளகாய்- 4 அல்லது சிவப்பு பச்சை மிளகாய் தூள் இருந்தாலே போதும், சீரகம்- 1 டீஸ்பூன், சால்ட் அதற்கு தகுந்ததுபோல் தயாரிக்க வேண்டும்.

இந்த புளிப்பு மிட்டாய்களை ஆர்கானிக் முறையில் தயாரிக்கும் பொழுது தேவையானவை மஞ்சத்தூள், பேரிச்சை, ரெட் சில்லி பவுடர், சீரகம், உப்பு, வெல்லம் இவற்றை கொண்டு தயாரிக்கலாம். மேலும் இதனை தயாரிக்க தெரியவில்லை என்றால் YOUTUBE  உதவியுடன் தயாரிக்கலாம்.

பேக்கிங் செய்யும் முறை:

தயாரித்து வைத்த புளிப்பு மிட்டாய் கலவைகளை லாலிபாப் போன்ற வடிவத்தில் பேக்கிங் செய்யலாம் அல்லது உருண்டையான வடிவத்தில் செய்து ரப்பர் போட்டு பேக்கிங் செய்யலாம். தயாரித்த மிட்டாய்களை ஒரு சிறிய வடிவுகளான பிளாஸ்டிக் பாட்டில் அல்லது அட்டை பாக்ஸ் போன்றவற்றில் 40 அல்லது 50 மிட்டாய்களை பேக்கிங் செய்து வரலாம்.

விற்பனை செய்யும் முறை:

தயாரித்து வைத்த புளிப்பு மிட்டாய்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம் அல்லது அருகில் உள்ள பொட்டி கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், மளிகை கடை, பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் பெட்டி கடைகளுக்கு விற்பனை செய்யலாம். மேலும் இந்த தொழில்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் தொடங்கலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022